×
 

ஒரே பதிவில் ரஜினியை கடுப்பாக்கிய ப்ளூ சட்டை மாறன்..! கொதிக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

நெல்சனும, லோகேஷூம் ஒரு படம் ஃப்ளாப் தந்தா உடனே ரஜினி அவர்களை கழட்டி விட்ருவாரு என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு எந்த படம் வந்தாலும் அதனை விமர்சிப்பதில் ப்ளூ சட்டை மாறன் கைதேர்ந்தவர். படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட  ஒரு நிமிடம் பொறுத்து ப்ளூ சட்டை மாறன், என்ன சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டு பின்பு படத்தை பார்க்க செல்கின்றனர். அந்த அளவிற்கு ப்ளூ சட்டை மாறன் எது சொன்னாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. ஆரம்பத்தில் இவர் கொடுக்கும் ரிவ்யூக்களுக்கு மக்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், தற்பொழுது இவர் ரிவ்யூ சரியாக இருக்கும் என்ற வழக்கம் மாறி உள்ளது. 

இப்படி இருக்க தற்பொழுது இவரது பார்வை திடீரென திடீரென நடிகர் ரஜினியின் பக்கம் சாய்ந்துள்ளது. அதன்படி தற்பொழுது நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. ஒன்று. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கலானார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் "கூலி". இப்படத்தின் படப்பிடிப்பை  முற்றிலுமாக முடித்து, அடுத்த கட்ட பணியில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்... ரஜினியின் 'கூலி' படத்தில் அமீர்கான்.. கசிந்த உண்மை...!

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது. 

படத்தின் மொத்த பட்ஜெட் என பார்த்தால், சுமார் ரூ.375 கோடியாம். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது. 

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் தான் ஜெயிலர். அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் படைப்புதான். இதில் அனிரூத்தின் இசை மக்களை மட்டுமல்லாது ரஜினியையே கவரும் அளவிற்கு இருந்தது. குறிப்பாக "அலப்பறை கிளப்புவோம், காவாலையா" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் மக்களை கேட்க வைத்தது. இப்படம் ரிலீஸ் ஆகி, மாஸ் ஹிட் கொடுத்து ரூ600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக படப்பிடிப்புகளை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தான் பிரபல யூடியூப் ரிவியுவரான ஃப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ரஜினியை விமர்சித்து இருக்கிறார். அதில், " தலீவர் 2.0: இவருக்கு புடிச்சது ரெண்டே கேரக்டர்தான். தாதா & அதிரடி போலீஸ் அதிகாரி. காலா, கபாலி, பேட்ட, கூலி. தர்பார், வேட்டையன், ஜெயிலர், ஜெயிலர் இரண்டு. 50 வயசை தாண்டுனாலே ரிவால்வரை பிடிக்க கை நடுங்கும். ஆனா நம்ம தலைவர் 75 வயசுலயும்  AK 47, PK 47 ஐ எல்லாம் அசால்ட்டா ஹாண்டில் பண்ற தாதாவா கலக்குறார். உண்மையான போலீஸ் எல்லாம் 60 வயசுல ரிடையர் ஆகிடுவாங்க. ஆனா இவர் 75 வயசுலயும் வில்லன் கோஷ்டியை துரத்தி துரத்தி என்கவுண்டர் பண்ணுவார்.

ட்யூட்டில இருந்தாலும் தாடியை எடுக்காத ஒரே போலீஸ் அதிகாரி..இவர்‌மட்டும்தான். தலீவருக்கு இந்த LCU கதையெல்லாம் புடிக்காது. Only standalone படம்தான். படம் ஓடுனா அது தன்னால்தான் ஓடுனதா இருக்கனும்‌. மோகன்லால், அமீர்கான் மாதிரி பெரிய நடிகர்களை இவர் படத்துல கேமியோ பண்ண வைப்பாரு‌. ஆனா இவர் அவங்க படத்துல நடிக்க மாட்டாரு. நெல்சனும, லோகேஷூம் ஒரே ஒரு ஃப்ளாப் தந்தா போதும். அத்தோட அவங்களையும் கழட்டி விட்ருவாரு" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெய்ட்டிங்கிலே வெறி ஏறுதே.. ரஜினி கூட டி.ஆரா...! எகிறும் கூலி படத்தின் ஹைப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share