×
 

லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்... ரஜினியின் 'கூலி' படத்தில் அமீர்கான்.. கசிந்த உண்மை...!

ரஜினி படத்தில் அமீர்கான் நடித்துள்ள தகவல் கிடைத்ததை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்து இருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை இவர் எடுத்த எந்த படமும் தோல்வியில் முடிந்ததில்லை. அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், தற்பொழுது ரஜினியின் "கூலி" படத்தின் படப்பிடிப்பை முற்றிலுமாக முடித்து, அடுத்த கட்ட பணியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் தற்பொழுது 'ஜெயிலர் 2' வில் பிசியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். 

இந்த சூழலில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்றாலே ரசிகர்களுக்கு குதூகலம் தான். அந்த அளவிற்கு அவர் படத்தில் விஷயம் இருக்கும். குறிப்பாக இவர் நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில் நடிகர் விஜயின் கில்லி திரைப்படத்தின் பாடலை வைத்து கபடி போட்டியை வேறு விதமாக காண்பித்து இருப்பார், அதுமட்டுமல்லாமல், நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார்.மேலும் கமல்ஹாசனின் விக்ரம் படமாக இருக்கட்டும், கார்த்திக்கின் கைதியாக இருக்கட்டும், அனைத்திலும் மாஸான காரியங்களை புகுத்தி வைத்திருப்பார் லோகேஷ், அந்த வகையில் தற்பொழுது அவர் இயக்கி இருக்கும் 'கூலி' படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. 

இதையும் படிங்க: ஜப்பானில் மாஸ் காட்டிய கமல்ஹாசனின் "விக்ரம்"..! இதுவரை வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

பராசக்தி படத்தை போல் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'கூலி' திரைபடத்தில் டைட்டில் பிரச்சனை வரும் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் வரவில்லை. காரணம் என்னவெனில், ரஜினி காந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் தலைப்பு கடந்த 1995ம் ஆண்டே ஒருவர் படத்தில் வைத்து விட்டார். மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 90களின் கூலி திரைப்படம்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த- தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா-'கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ்"இராசசேகர' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது.

மேலும்,கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி உள்ளது. இப்படி இருக்க, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் என பார்த்தால், சுமார் ரூ.375 கோடியாம். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஏற்கனவே இப்படத்தில் முதல் பாடலை ரஜினியின் நெருங்கிய நண்பரான டி.ராஜேந்தர் அவர்கள் பாடியிருகிறார். இந்த சூழலில் படத்தில் நடிகர் அமீர் கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அமீர் கான் நடிப்பில் வெளியாகவுள்ள Sitaare Zameen Par என்ற படத்தின் ப்ரமோஷன் விழாவில் பேசிய அவர், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'கூலி' படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதாகவும், இந்த படத்தில் தன் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த கேரக்டரை எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்' என கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: அட்லீக்கு ஷாருக்கான்னா.. லோகேஷ் கனகராஜ்-க்கு அமீர் கான்..! பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் மாஸ் டைரக்டர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share