ஒரே பாட்டு.. ரூ.15 கோடி செலவு.. மூன்று நடிகைகள்..ஒரே ஹீரோ..! “ராம் சரனிண் ‘பெத்தி’ படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!
ராம் சரனிண் ‘பெத்தி’ படத்தில் ரூ.15 கோடி செலவில் உருவாகும் நடன பாடல் ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை எகிற செய்து வருகிறது.
தெலுங்கு திரையுலகில் ‘மெகா பவர் ஸ்டார்’ என அழைக்கப்படும் ராம் சரண் தற்போது நடிப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், நட்சத்திர விகிதத்திலும், கலைநிகழ்ச்சி அம்சங்களிலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், அடுத்த படத்தில் தனது நடிப்பு, கதைத் தேர்வு, திரைக்காட்சி அனைத்தையும் ஒரே கட்டத்தில் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ராம் சரண் எடுத்த முடிவாகவே இந்த பெத்தி படம் பார்க்கப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் ஆழமான கதைகள் மற்றும் ஊர் சார்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படங்களை உருவாக்கி புகழ் பெற்றவர் புச்சி பாபு சனா. அவரின் முன்னைய படமான உப்பென்னா மிகுந்த வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, பல பிரபல தயாரிப்பாளர்களும், முன்னணி நடிகர்களும் அவரது அடுத்த படத்திற்கு ஆர்வம் காட்டினர். இறுதியில், ராம் சரண்–புச்சி பாபு கூட்டணி உறுதியானதும், படம் குறித்த எதிர்பார்ப்பு துவக்கத்திலேயே வானளவில் உயர்ந்தது.
இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருவது படத்தின் முக்கிய பலமாக கருதப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள அவரது பயணத்திற்கு பெத்தி ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், வலைத்தளத் தொடரான மிர்சாபூர் மூலம் தேசிய அளவில் பெரும் ரசிகர்களைக் பெற்ற திவ்யேந்து, நீண்டகாலமாக தெலுங்கு சினிமாவில் வலுவான வித்தியாசமான கதாபாத்திரங்களில் பிரபலமான ஜகபதி பாபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: உலகமெங்கும் கோலாகலமாக தொடங்கியது சர்வதேச திரைப்பட திருவிழா..! எத்தனை நாட்கள்.. எங்கு.. யாரெல்லாம்.. லிஸ்ட் இதோ..!
இந்த படத்தின் மற்றொரு பெரிய சிறப்பு—இந்தியாவின் உலகநிலைய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பது. புச்சி பாபுவின் கதை சொல்லும் பாணியும், ரஹ்மானின் இசைச் சூழலுடனும் சேரும்போது, படம் இசை ரீதியாகவே புதிய அனுபவத்தை வழங்கும் என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர். தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ரித்தி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், மிகுந்த செலவில், உலகத் தரத்துடன் உருவாகி வருகிறது. படக்குழுவின் அறிவிப்பின்படி, படம் வருகிற ஏப்ரல் 29 அன்று உலகளாவிய வெளியீடாக திரையரங்குகளுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், பெத்தி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பிரமாண்டமான ஸ்பெஷல் டான்ஸ் நம்பர் குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகி, அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஒரு பாடல், டாலிவுட் வரலாற்றிலேயே மிக அதிக செலவில் உருவாக்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதில் மூன்று முன்னணி நடிகைகள் ஒரே பாடலில் ஒன்றாக நடனமாடியுள்ளனர்.
பூஜா ஹெக்டே – ரூ. 4 கோடி, மிருணாள் தாகூர் – ரூ. 3 கோடி, ஆயிஷா கான் – ரூ. 1 கோடி இந்த மூவருக்கும் வழங்கப்பட்ட சம்பளம் தான் ரசிகர்களிடையே மிகப் பெரிய பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. “மூன்று ஹீரோயின்களையும் ஒரே பாடலில் இணைத்து இத்தகைய உயர்ந்த சம்பளம் வழங்குவது தெலுங்கு சினிமாவுக்கு புதிய திசை” என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
அந்த பாடலுக்காக மட்டும் சுமார் ரூ.5 கோடி செலவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த செட்டில் ராஜஸ்தான் மற்றும் மத்திய ஆசிய பாரம்பரியங்களை கலந்து உருவாக்கப்பட்ட ஒளி அமைப்பு, நடன மேடை, சுற்றுப்புறக் காட்சிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. நவீன கிராஃபிக்ஸ் அமைப்புகளும், அதிகமான நடனக் கலைஞர்களும் இதில் இணைந்துள்ளதால், அந்த பாடல் ‘விசுவல் ட்ரீட்’ ஆக இருக்கும் என்று படக்குழு கூறுகிறது.
RRR மூலம் உலகளவில் புகழ் பெற்ற ராம் சரண், கேம் சேஞ்சர் படத்துக்குப் பிறகு ரசிகர்களிடம் மீண்டும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அந்த நிலையில், புச்சி பாபுவுடன் அவர் இணைந்திருப்பதும், ரஹ்மானின் இசை, ஜான்வியின் சேர்க்கை, புது கதையம்சம், பிரமாண்ட தயாரிப்பு ஆகியவை பெத்தி படத்தை டாலிவுட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புப் படமாக மாற்றிவிட்டது.
வெளியானுள்ள செய்திகள் பார்த்தால், பெத்தி படம் வருகிற ஏப்ரலில் திரையரங்குகளுக்குள் வந்தவுடன், ராம் சரண் தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கைப்பற்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக அந்த 15 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் சாங் வெளியாகும் போது, அது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
இதையும் படிங்க: அடகு வைத்த 3 பவுன் தங்கம் மர்மமாக மாயம்..! ஏமாற்றப்பட்ட பிக் பாஸ் தாமரைச்செல்வி.. துணை இயக்குனருக்கு போலீஸ் சம்மன்..!