×
 

மக்கள் முக்கியமில்லை.. தெருநாய்கள் தான் முக்கியம்..! பிரபலங்களை கடுமையாக சாடிய பிரபல இயக்குநர்..!

தெருநாய்கள் விவகாரத்தில் விலங்கு ஆர்வலர்களுக்கும் பிரபலங்களுக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஆறு வயது சிறுமி ஒருவர் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம், தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் உயிர் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் இருப்பதை மீண்டும் முன்வைத்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பொன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, மொத்தமாக 10 லட்சம் தெரு நாய்களை பிடித்து, அவற்றுக்கு கருத்தடை ஊசி செலுத்தி, பாதுகாப்பான விலங்கு காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பல தரப்பினரிடம் வரவேற்பை பெற்றுள்ளதுடன், ஒரு சில இடங்களில் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, விலங்கு நலவாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், இந்த உத்தரவை எதிர்த்து தங்களது குரலை உயர்த்தி வருகின்றனர். திரைப்பட நடிகைகள் சதா, ஜான்வி கபூர், சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட பலர், இந்த தீர்ப்பு விலங்குகளின் உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி, சமூக ஊடகங்களில் #SaveStrayDogs என்ற ஹேஷ்டேக் மூலம் ஒரு பெரிய பிரசாரத்துக்கு வித்திட்டுள்ளனர்.  இந்தச் சூழலில், தனது பஞ்ச் வசனங்களுக்குப் பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா, இந்த பிரபலங்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “மக்கள் இறந்தால் பாவமில்லை, ஆனால் நாய்கள் மீது கண்ணீர் விடுகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து அவர் கூறுகையில், "சிறு குழந்தைகள் தெருநாய்களால் கடிக்கப்பட்டு கொல்லப்படும் போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? அந்தக் குழந்தைகளின் உயிர் மதிப்பில்லையா? இப்போது நீதிமன்றம் ஒரு நியாயமான முடிவை எடுத்திருக்கிறது. தெருநாய்கள் மக்கள் வாழ்க்கைக்கு ஆபத்தான நிலையை உருவாக்கியிருக்கின்றன. அதற்கு தீர்வு தேடுவது தவறா?" என்றார். இதனுடன், விலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு “12 Points Advice” எனும் அறிவுரைகளை பகிர்ந்துள்ள அவரது பதிவு இணையத்தில் வேகமாக பரவிக் கொண்டு, சோஷியல் மீடியாவில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன.
இந்த நிலையில் விலங்கு நல அமைப்புகள் இந்தக் கோர்ட் உத்தரவை எதிர்த்து, மக்கள் குறைக்கும் முயற்சி இது எனக் குற்றம் சாட்டுகின்றனர். PETA India, Blue Cross, People For Animals போன்ற அமைப்புகள், தெருநாய்களை விலக்கி வைக்க வேண்டும் என்பது மனிதாபிமான ரீதியாக ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்து, அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்..!!

மேலும், தெருநாய்களின் காரணமாக நிகழும் சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை தான் என்பதில் ஒருமனதாக இருந்தாலும், அவற்றை அடைத்து வைப்பது இல்லாமல், மாற்று தீர்வுகள் பற்றியும் சிந்திக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரம், சமூகத்தில் இருவகையான எண்ணங்களை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், குழந்தைகள் மேல் தெருநாய்களின் தாக்குதலால் பாதிக்கப்படுவதைக் காணும் பொதுமக்கள், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கின்றனர். மற்றொருபுறம், விலங்குகளுக்கும் வாழ்வுரிமை இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த தீர்ப்பு விலங்குகளின் மீது அநியாயம் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே தற்போது, மாநில மற்றும் மத்திய அரசுகள் இந்தக் கோர்ட்டின் உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வர எவ்வாறு செயல்பட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தெருநாய்களை பாதுகாப்பாக, மனிதாபிமான முறையில் கையாண்டு, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான சமநிலை நிலைத்திருக்க வேண்டிய கட்டாயம் அரசின் மீது உள்ளது. எனவே தெருநாய்கள் தொடர்பான பிரச்சனை எந்த ஒரு தீர்வையும் எளிதாக ஏற்க இயலாத முக்கிய சமூகப் பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரு புறம் மக்கள் உயிர் பாதுகாப்பு, மறுபுறம் விலங்குகளின் வாழ்வுரிமை. இரண்டிற்கும் இடையில் சமநிலை காண்பது தான் உண்மையான சவால்.

இந்த விவகாரம் எதிர்கால நாட்களில் மேலும் உச்சத்தை எட்டும் எனும் நிச்சயத்துடன், பலர் நேர்முக விவாதங்களுக்கு தயாராகி வருகிறார்கள். இனிமேல், இது சமூக நீதியின் நோக்கிலா தீர்வுகள் எடுக்கப்படும் என்பதை நேரம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இதையும் படிங்க: மராத்தி திரையுலகிற்கு பேரிழப்பு..! காலமானார் பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share