×
 

சல்மான் கான் ஆக்ஷனை பார்க்க ரெடியா..? இன்று நள்ளிரவில் ஓடிடியில் மாஸ் என்ட்ரி..!  

பிரபல ஓடிடி தளத்தில் மக்களின் ஆசை நாயகன் சல்மான்கான் சிக்கந்தர் படம் வெளியாகிறது.

இயக்குனர் சங்கர் எப்படி 'இந்தியன் 2' படத்தை எடுத்து மக்களை அலறவிட்டாரோ அதில் பாதியளவிற்கு மக்களை அலறவிடும் வகையில்  கதை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே கொஞ்சம் கூட பார்க்க நன்றாக இல்லை என கூறி வரும் அளவிற்கு சிக்கந்தர் படத்தை எடுத்திருந்தார் இயக்குனர்.

குறிப்பாக இப்படத்தில் சஞ்சய் எனும் கதாபாத்திரத்தில் ராஜா வீட்டுப்பிள்ளையாக நடித்திருக்கிறார் நடிகர் சல்மான் கான். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, ஆரம்பத்தில் இருந்தே தனது கணவருக்கு பாதுகாப்பாக இருக்க பல வேலைகளை செய்து வருகிறார். 

இதையும் படிங்க: அழகில் சூடேற்றும் ராஷ்மிகா மந்தன்னா.. உச்சகட்ட கிளாமர் கிளிக்ஸால் கிரங்கும் ரசிகர்கள்..!

அந்த வகையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரம்ஜான் பண்டிகையன்று வெளியான திரைப்படம் தான் "சிக்கந்தர்". இப்படத்தில் கஷ்டம் என்று வருபவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் கதாநாயகன், மக்களின் கஷ்டங்களை குறித்து மட்டுமே கவலைபட்டு இருப்பார். ஆனால் அவரது ஆசை மனைவிக்காக சிறிது நேரம் கூட ஒதுக்காமல் மக்கள் பாணியிலேயே ஈடுபட்டு வருவார். இந்த  சூழலில் குண்டு வெடிப்பில் ராஷ்மிகா மந்தனா உயிரிழக்கிறார். அந்த சமயத்தில் அவரது கண், இதயம், நுரையீரல் என ஒவ்வொரு உறுப்புகளும் 3 நபருக்கு தானம் செய்யப்படுகிறது.

இதில் மும்பையில் மினிஸ்டராக இருக்கும் சத்யராஜின் மகன் சாவுக்கு சிக்கந்தர் சல்மான் கான் தான் காரணம் என்று நினைக்கும் சத்யராஜ், சல்மான் கானை பழிவாங்குவதற்கு, அவரது மனைவியின் உறுப்புகளை உடலில் பொருத்தி இருக்கும் மூன்று பேரை கொல்ல புறப்படுகிறார். அவர்களை சல்மான் கான் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை. இப்படம் சரியாக ஓடாமல் போனதற்கு நடிகர் சல்மான் கான் தான் காரணம் என சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் காட்டமாக பேசியிருந்தார். ஆனாலும் பலரது விமர்சனங்களை பெற்ற படமாக சிக்கந்தர் படம் பார்க்கப்பட்டாலும் வசூலில் இப்படம் சாதனை படைத்தது. 

இப்படிப்பட்ட இந்த திரைப்படத்தை மீண்டும் பார்க்க நினைப்பவர்களுக்கு ஒரு இன்ப செய்தி கிடைத்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்ததான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், சிக்கந்தர் திரைப்படம் இன்று நள்ளிரவு 12 மணி முதல், பிரபல ஓடிடி தளமான 'நெட்பிளிக்ஸ்' தளத்தில் வெளியாகிறது.
 

இதையும் படிங்க: இப்படியும் போட்டோ ஷூட் பண்ணலாமா..! ராஷ்மிகாவின் "நச்" கிளிக்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share