தாக்கப்பட்டாரா ராசி கண்ணா..? தெருவில் ரத்தக்காயத்துடன் இருந்த புகைப்படத்தால் சர்ச்சை..!
என்னாச்சு ராசி கண்ணாவுக்கு, தெருவில் ரத்தகாயத்தால் அழுதபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என ரசிகர்கள் பதறி வருகின்றனர்.
நடிகை ராசி கண்ணாவின் படத்தை பார்க்க திரையரங்கில் கூட்டம் அள்ளும். உதாரணமாக, அரண்மனை 4ல் "அச்சச்சோ" பாடலுக்காவே இவரை காண பல கோடி கூட்டங்கள் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர். இப்படி இருக்கும் ராசி கண்ணா, 2015ம் ஆண்டு 'பெங்கால் டைகர்' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின் 2016ம் ஆண்டு "சுப்ரீம்" படத்திலும், 2017ம் ஆண்டு "ஜெய் லவ குசா" என்ற படத்திலும், 2018ம் ஆண்டு "தோலி ப்ரேமா" போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை ஈர்த்தார். இதனை அடுத்து ரவிமோகனுக்கு ஜோடியாக "அடங்க மறு" என்ற படத்தில் நடித்தார்.
அதன் பின், அயோத்தி, சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழி ரசிகர்களை கவர்ந்த ராசி கண்ணா, தற்பொழுது சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் "யோதா" என்ற ஹிந்தி படத்திலும் "தி சபர்மதி ரிப்போர்ட்" என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: என்னவென்று சொல்வதமா ராசி கண்ணா பேரழகே..! ஒரே பதிவால் ரசிகர்களை மயக்கும் நடிகை..!
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே "ருத்ரா" என்ற வெப் தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த ராசி கண்ணா அதற்கு பின், ஹிந்தி மொழியில் இருந்து 4 மொழிகளில் டப்பிங் செய்து அமேசான் பிரைமில் ரிலீசான "பார்ர்சி" என்ற வெப்சீரிஸ் நடித்து இருந்தார். இந்த தொடர் மெஹா ஹிட்டானது.
இதனை தொடர்ந்து "விக்ராந்த் மாஸ்ஸியுடன் இணைந்து TME" என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள ராசி கண்ணா, சித்து ஜொன்னலகடாவுடன் "தெலுசு கட" என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கவுள்ளார். அதன் பின் தமிழில் ஜீவா மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கும் "மேதாவி" படத்தில் நடித்து வருகிறார்.
இப்படியான சூழலில், நடிகை ராசி கண்ணா முகத்தில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்ளுக்கு அதன் பின் அவர் பதிவிட்ட விளக்கத்தை கண்டவுடன் தான் சற்று மகிழ்ச்சியாக இருந்தது. அதில், "சில கதாபாத்திரங்கள் கேட்பதில்லை. அவை அமைந்துவிடுகிறது. உங்கள் உடல். உங்கள் மூச்சு. உங்கள் காயங்கள். அனைத்தையும் கண்டு நீங்கள் புயலாக மாறும்போது, இடி முழக்கங்களுக்கு நீங்கள் அசைய மாட்டீர்கள். என பதிவிட்து கடைசியாக விரைவில்..." என முடித்துள்ளார்.
இதனை பார்த்த பின்புதான் புரிந்தது அவர் பதிவிட்டது அவர் நடிக்கும் படத்திற்கான அப்டேட் என்பதும் அதற்காக அவரது உழைப்பும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னவென்று சொல்வதமா ராசி கண்ணா பேரழகே..! ஒரே பதிவால் ரசிகர்களை மயக்கும் நடிகை..!