சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு.. மலேசியாவில் அப்டேட் சொன்ன இயக்குநர்!!
அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக ‘தி கோட்’ படம் வெளியானது. இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு, வெங்கட் பிரபுவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
அஜித், அக்ஷய் குமார், சிவகார்த்திகேயன் படங்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்து அவரே அப்டேட் கொடுத்துள்ளார். மலேசியாவில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்க வெங்கட் பிரபு அங்கு சென்றுள்ளார். மலேசியாவில் ‘தி கோட்’ படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படம் குறித்த அங்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெங்கட் பிரபு,"சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க"வுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதிக்கு சந்தானம்.. விஜய்க்கு ஆதரவாக நடிகர் சூரி தேர்தல் பிரச்சாரம்..?
முன்னதாக, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணி இணைவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபு கூறிய கதை விஜய்க்கு பிடித்து போனதால், ‘தி கோட்’ படத்தை ஏஜிஎஸ் தயாரித்தது. தற்போது சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினியை போல் பேக் அடிக்கிறாரா விஜய்..! கசிந்த ரகசியம்.. ரசிகர்கள் ஹேப்பி.. தொண்டர்கள் அதிர்ச்சி..!