கெனிஷாவோட பண்ண தப்ப மறைக்க எவ்வளவு நாடகம்..! புயலை கிளப்பிய ஆர்த்தி ரவி..!
தனிமையால் பிரிந்து போனவரு பெத்தவங்களோடு இல்லாம பாதியில் வந்தவளோடு என்ன பன்றாரு என ஆர்த்தி ரவி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் சமீபத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "என்னமோ அனைவரும் ஆர்த்தி ரவி தான் பாதிக்கப்பட்டார் என்று சொல்கிறீர்களே... உண்மையில் இந்த திருமண பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்றால் அது நான் மட்டும்தான். என்னுடைய வீட்டை என்னிடமிருந்து பறித்துக் கொண்டார்கள், என்னுடைய வாகனத்தை பறித்துக் கொண்டார்கள், என்னுடைய பணங்களை பறித்துக் கொண்டார்கள், வெறும் காலோடு என்னை வெளியே அனுப்பும் பொழுது எனக்கு நடந்த அனைத்து கொடுமைகளையும் கூடவே இருந்து பார்த்தவர் பாடகி கெனிஷா மட்டும் தான்" என தெரிவித்தார். மேலும், தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கு எனது மாமியார் சுஜாதா தான் காரணம் என தெரிவித்தார்.
இதனை பார்த்து அவரது மாமியாரும் அவரை கடிந்து கொள்ள, கெனிஷாவும், "எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது, என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது. என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவேன். நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன், தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன்.நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து, என் ஆன்மா பாடுகிறது என தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: என்ன சாபம் விட்டாலும் பலிக்காது..! அம்மா, பொண்ணுக்கு பாடகி கெனிஷா நெத்தியடி பதில்..!
இப்படி இருக்க, ரவி மோகனுக்கு தனது அறிக்கையின் மூலமாக பதில் அளித்துள்ளார் ஆர்த்தி ரவி, அவரது அறிக்கையில், "கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் நாடகம் போடுபவர்களுக்கு தான் இந்த காலத்தில் அதிகமான ஆதரவு கிடைக்கிறது. அது பரவாயில்லை ஆனால், எங்களது திருமண வாழ்வில் இந்த நிலைக்கு நாங்கள் இருவரும் வந்து நிற்பதற்கு காரணம் பணமோ, அதிகாரமோ, பிறருடைய தலையீடோ அல்ல. எங்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூன்றாவதாக நுழைந்த ஒருவர் மட்டும் தான் காரணம். அது "உங்கள் வாழ்வின் ஒளி" என ரவி மோகன் சொல்லும் பாடகி கணேஷாவால் தான் இன்று எங்கள் வாழ்க்கை இருளை கண்டுள்ளது. ரவி மோகன் எனக்கு "கட்டுப்படுத்திய மனைவி" என்ற பட்டத்தை கொடுத்து இருக்கிறார். அவரை அன்புடன் பராமரித்து, அவருக்கு வரும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் அவரை பாதுகாப்பதோடு, வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழைய நினைக்கும் அனைவரையும் தடுத்து பாதுகாத்து கட்டுக்கோப்பாக இருந்தது குற்றம் என்றால் அது அப்படியே இருக்கட்டும். இதுவரைக்கும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததற்கு, எங்கள் குடும்பங்களுடன் நாங்கள் அன்னியோன்யமாக இருந்ததற்கு இணையத்தில் உள்ள புகைப்படங்களே சாட்சி.
ரவி மோகன் சொல்லி இருக்காரு, சொத்துக்களையும் கௌரவத்தையும் இழந்து வெறும் காலோடு சென்றேன் என்று. ஆனால் அவர் அப்படியெல்லாம் வெளியே செல்லவில்லை, அவர் முன்பாகவே நன்றாக திட்டமிட்டு, அவருடைய விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து கொண்டு, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில் தான் வீட்டை விட்டு சென்றார். இங்கு உள்ள யாரும் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்த வில்லை அவராகவே அமைதியாக வெளியே சென்று விட்டார். சரி, உண்மையிலேயே அவர் என் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்திருந்தால் அவர் தொலைத்த பெற்றோர்களிடத்தில் அல்லவா சென்று இருக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு என் வீட்டில் குழப்பத்தைக் கொண்டு வந்த அவளுடைய வீட்டிற்கு ஏன் சென்று இருக்கிறார்.
நான் துன்பப்படுத்தினேன் தனிமைப்படுத்தினேன் என்று சொல்லும் ரவி மோகன். இத்தனை ஆண்டு காலம் வரை எதற்காக காத்திருந்தார். ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார். அவருக்கு உரிமையுள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்து விட்டு தான் செய்த தவறுகள் அனைத்தும் அப்பட்டமாக வெளியே தெரிந்தவுடன் தன்னுடைய ரகசிய வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக என் மீது குறை கூறிவிட்டு சென்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் ரவி மோகன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டதாக கூறுகிறாரே அதுவும் பொய் தான். திருமணமான நாளிலிருந்து என்னுடைய மாமனார் மாமியாருடன் புகுந்த வீட்டிலும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இரண்டு வீடுகளில் மட்டுமே நாங்கள் வசித்தோம்.
பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று சொல்லும் ரவி மோகன், கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் என் பிள்ளைகளை வந்து சந்தித்து இருக்கிறார். உண்மையில் என்னுடைய பிள்ளைகள் வேண்டுமென்று நினைத்திருந்தால் எந்த சக்தியும் அவரை தடுத்து இருக்க முடியாது. கண்டிப்பாக இந்த நேரம் அவர் வந்திருப்பார் மகன்களை சந்தித்து இருப்பார். வெளிநாட்டில் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்தது எனது கணவர் ரவி மோகன் தான். எனது மகனுடன் ஏற்பட்ட கார் விபத்தின் பொழுது இன்சூரன்ஸ் ஆபீசுக்குள் நுழைய சென்ற பொழுது என்னை உள்ளே விடாமல் தடுத்து துன்பப்படுத்தினார்கள். எல்லா பகுதிகளிலும் துன்பத்தை அனுபவித்து இருப்பது நான்தான். ஆனால் என்னால் அவர் கஷ்டப்பட்டதாக கூறுவது எனக்கு வேதனையாக இருக்கிறது.
சினிமாவில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக கூறுவதை கேட்கும் போது வேதனையிலும் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. உலகமே என்னை எப்படி பேசினாலும் உண்மை தெரிந்த எனது கணவர் எனக்காக வாதாடாமல் மௌனமாக இருப்பதே இப்பொழுது உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். உங்கள் மன நிம்மதிக்காக 16 ஆண்டுகள் உங்களோடு வாழ்ந்த என்னை துன்பப்படுத்துவதா. நீங்கள் இப்படி எல்லாம் பேசுவதினால் நான் நம்பிக்கை இழந்து விழ்ந்து விடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதற்கு மேல் நான் பேசவும் விரும்பவில்லை ஏனென்றால் நீதிமன்றத்தில் எனக்கு உண்டான நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் " என தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: என்ன பாத்தா வில்லி மாமியார் மாதிரியா தெரியுது.. லிஸ்ட் போடட்டுமா..? ரவிமோகனை வறுத்தெடுத்த சுஜாதா..!