ஊர்வசி விஷயத்தில் பல்பு வாங்கிய நெட்டிசன்கள்..! அறிக்கையில் சவுக்கடி கொடுத்த ரவுத்தேலா குழுவினர்..!
நடிகை ஊர்வசி ரவுத்தேலா விவகாரத்தில் காட்டமான அறிக்கையால் விழி பிதுங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.
ஊர்வசி என்றால் பாக்யராஜுடன் அடிக்கடி தோன்றும் நடிகை ஊர்வசி அல்ல. இவர் நடித்த ஒரே தமிழ் படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்த ஊர்வசி ரவுத்தேலா. இவர் நடித்த படங்களில் "டாக்கு மகாராஜ்" என்ற படத்தில் நடித்ததற்காக பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இருப்பினும் இவரை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள காரணமானவர் ஒருவர் உண்டு.
லெஜெண்ட் சரவணனை அனைவரும் பார்த்து இருக்க முடியும். சரவணா ஸ்டார் பாத்திர கடை, சரவணா ஸ்டார் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ், சரவணா ஸ்டார் தங்க மாளிகை என பல கடைகளுக்கு சொந்தக்காரர் தான் லெஜெண்ட் சரவணன். இவர் தினமும் கடைக்கு தனி ரக விலையுயர்ந்த காரில் செல்பவர்.
இப்படி பட்டவருக்கு நடிக்கும் ஆசை என்பது கொஞ்சம் அதிகம். ஆதலால் தனது கடைக்கான முதல் விளம்பரங்களை ஒரு ஹீரோயினுடன் நடிக்க ஆரம்பித்தவர், பின்பு பல நடிகைகளுடன் நடித்து தனது கடையை மட்டும் அல்லாமல், தன்னையும் பிரபல படுத்திக்கொண்டார். இப்படியே விளம்பரம் மட்டுமே நடிக்கிறீர்களே எப்பொழுது ஹீரோ ஆவீர்கள் என ரசிகர்கள் "சும்மா இருந்தவரை சொரிந்து விடுவது போல்" அவரை உசுப்பேத்த, பல கோடி ரூபாய் செலவு செய்து சைன்டிஸ்ட்டாக அவதாரம் எடுத்து படத்தில் நடித்தார்.
அப்படத்தில், லெஜெண்ட் சரவணன் எப்படி தான் நடித்து இருக்கிறார் என்பதை பார்க்க ஒருகூட்டம் தியேட்டருக்கு சென்று படத்தை ஹிட் ஆக்கியது. இதனை தொடர்ந்து லெஜெண்ட் தனது அடுத்த படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதையும் படிங்க: சமந்தா போட்ட ஒரு லைக்..! நாக சைதன்யாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்..!
இந்த சூழலில், லெஜெண்ட் சரவணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஊர்வசி ரவுத்தேலா. அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பின் விளக்கம் கொடுப்பதும் வழக்கம். சமீபத்தில் பாபி இயக்கத்தில் பாலையா நடிப்பில் வெளியான ‘டாக்கூ மஹாராஜ்’ என்ற படத்தில் அவருடன் சேர்ந்து நடனம் ஆடியிருப்பார் ஊர்வசி. அது பிரச்சனை அல்ல.
இந்த படம் வெளியான பின் அதன் வெற்றியை கொண்டாட நடைபெற்ற பார்ட்டியில் பாலையா - ஊர்வசி ரவுதெலா இருவரும் அதே மாதிரி நெருக்கமாக நடனமாடினார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.அதற்கும் பதிலளித்த அவர், பாலையா ஒரு சிறந்த நடிகர் அவருடன் பணிபுரிந்ததை நான் மதிக்கிறேன். அவருடன் பழகுவதை கொச்சையாக பேசாதீர்கள் என அந்த சர்சசைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே போல் தற்பொழுது அவர் பேசிய ஒரு காணொளி சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் அதற்கும் சிறந்த பதிலடி கொடுத்துள்ளார் ஊர்வசி. அதன்படி சமீபத்தில், தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அவர், உத்தரகாண்டில் தன் பெயரில் கோவில் இருப்பதாக கூறியிருந்தார். இந்த பேச்சால் பலரது வசை சொல்லுக்கு ஆளானார் ஊர்வசி.
இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலாயின் குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு வசைபாடுதலுக்கு தகுந்த முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. அதில் "உத்தரகாண்டில் தன் பெயரில் ஒரு கோவில் இருக்கிறது என்றுதான் ஊர்வசி ரவுத்தேலா கூறினார். அதை ஊர்வசி ரவுத்தேலாவின் கோவில் என்று அவர் கூறவில்லையே.
முன்பு போல இல்லை இப்போது உள்ள மக்கள் அனைவரும் பிறர் கூறும் விஷயங்களை சரியாக கேட்பதில்லை உண்மையா என ஆராய்வதும் இல்லை. சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஊர்வசி" அல்லது "கோவில்" என்ற வார்த்தை கேட்டவுடன், உடனே மக்கள் அதை ஊர்வசி ரவுத்தேலாவின் கோவில் என்றும் அவரை விழுந்து விழுந்து வழிபடுகிறார்கள் என்றும் நினைத்துக்கொள்கின்றனர். கொஞ்சமாவது விமர்சிக்கும் முன் சரியாக கேட்டுவிட்டுப் பிறகு விமர்சனம் செய்யுங்கள்" என தெரிவித்துள்ளனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன குமாரு இப்படி ஆகி போச்சு என குழம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீரருக்கு பாராட்டு..! சிவகார்த்திகேயன் பதிவால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!