மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய 'சர்தார்-2' படக்குழு..! சர்ப்ரைஸாக ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு..!
'சர்தார்-2' படக்குழு நடிகை மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் சர்ப்ரைஸாக ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது தான் ‘சர்தார்’. 2022-ம் ஆண்டு வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக ஓடிய இப்படத்தை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் தன் நடிப்புத் திறமையை அட்டகாசமாக காண்பித்து ரசிகர்களை ஆட்டம் காண செய்தார். தற்போது, அந்த வெற்றியைத் தொடர்ந்து 'சர்தார் 2' எனும் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. அதன்படி 'சர்தார் 2' திரைப்படத்தின் முக்கியமான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் சமீபத்தில் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பரபரப்பான ஷூட்டிங் அப்டேட்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இப்படம் விரைவில் திரைக்கு வரலாம் என படக்குழுவினரிடம் இருந்து கூறப்படுகிறது. படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உருவாக்கி வருகிறார். அவரின் இசையில் இந்த படமும் சிறந்த பண்புடன் உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அகஸ்ட் 4-ம் தேதி நடிகை மாளவிகா மோகனனின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு, 'சர்தார் 2' படக்குழு அவருக்கு சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதற்காக வெளியிடப்பட்ட பிரமாண்டமான புதிய போஸ்டர் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் மாளவிகா மிக அழகாகவும், டெரிங்கான காட்சியிலும் திரையுலக பாணியில் தோன்றுகிறார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய அளவில் வெறித்தனமான சப்பிரைஸ் போன்று அமைந்திருக்கிறது. மேலும் மாளவிகா மோகனன், இதன் மூலம் முதல் முறையாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார். மாளவிகா ஏற்கெனவே மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளவர். பின் ‘மாஸ்டர்’, ‘பேட்ட’ போன்ற தமிழ் படங்களில் சிறப்பு தோற்றங்களால் நடித்து கவனம் பெற்றவர். இந்த படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரமாகவே நடித்து வருவதாக கூறப்படுகிறது.
விவேகமான, வலுவான ஒரு பெண் பாத்திரம் என அவரது வேடம் சித்தரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க 'சர்தார் 2' படத்தில் மாளவிகா மட்டும் அல்லாமல், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, யுவன், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அதிலும் எஸ்.ஜே. சூர்யா ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தினால் கலக்கும் நிலையில், இந்த படத்திலும் அவருடைய வேடம் மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ‘இரோ’, ‘அபிமன்யு’, ‘சர்தார்’ போன்ற படங்களில் சமூகக் கருத்து மற்றும் சஸ்பென்ஸ் கலவையோடு கூடிய திரைக்கதை மூலம் கவனம் பெற்றவர் பி.எஸ். மித்ரன்.
இதையும் படிங்க: ‘கூலி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ரச்சிதா ராம்..! ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய டிரெய்லர்..!
அவரது திரைக்கதைகள் எப்போதும் உணர்ச்சியை, அரசியல் சாயலை, ஸ்பை த்ரில்லர் எலிமெண்ட்களை வைத்து நகரும் விதத்தில் இருக்கும். அதேபோல் தான் 'சர்தார் 2' படத்திலும் அதே அதிக த்ரில் மற்றும் ஸ்பை ட்ராமா கம்பினேஷனை மீண்டும் காணலாம் என நம்பப்படுகிறது. 'சர்தார்' திரைப்படத்தில் ஒரு ரெட்ரோ காலத்திலிருந்து வரும் ஸ்பை கதாநாயகன், தனது தவறுகளை உணர்ந்து சமூக நீதிக்காக செயல்படுகிறார். 'சர்தார் 2' படத்தில், அந்த கதையின் தொடர்ச்சியாக, அவர் மகன் மற்றும் சமூக மாற்றத்துக்கான புதிய வழிமுறைகளை எதிர்கொள்கிறார் என கூறப்படுகிறது. அதாவது, இப்போது ‘சர்தார்’ திரும்ப வருகிறார் எனவும் அதிகளவு நுண்ணறிவுடன், நவீன உலகத்துடன் ஏற்றப்படுவதற்காக.. எனவே ‘சர்தார் 2’ ஒரு பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மத்தியில் தயாராகி வருகிறது. புதிய கதாபாத்திரங்களும், பரபரப்பான திரைக்கதையும், சாம் சி.எஸ். இசையையும் கொண்டு, இப்படம் 2025-ம் ஆண்டின் முக்கிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்புண்டு.
அதில், மாளவிகா மோகனனின் நடிப்பும் ஒரு தனிப்பட்ட சிறப்பாக கருதப்படுகிறது. அவரின் பிறந்த நாளில் வெளியான ‘ஸ்பெஷல் போஸ்டர்’ இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'மதராஸி' படத்துக்கு போட்டியாக ‘கிஸ்’..! நடிகர் கவினின் படத்திற்கான அப்டேட் ரிலீஸ்..!