×
 

தனுஷின் 'குபேரா' படம் வெற்றியா.. தோல்வியா..? ரிசல்ட்டை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தின் இறுதி வசூல் குறித்ததான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா , நடிகை ராஷ்மிகா மந்தனாஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி  பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படி இருக்க,  "குபேரா" திரைப்படத்தின் கதை என பார்த்தால், " மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் நிரஞ், இந்தியாவில் எண்ணெய் வலம் கிடைக்க இருப்பதை தெரிந்து கொள்கிறார். ஆனால் இதனை அவர் மக்களுக்கு தெரிவிக்காமல் மிகவும் அமைதி காத்து வருவதுடன் அதனை பணமாக்க திட்டமிட்டு பிரபல அரசியல் தலைவரான ஹரிஷ் உடன் மிகவும் அழகாக திட்டம் தீட்டி சதி செய்கிறார். மேலும் அதிலிருந்து வரக்கூடிய லாபங்கள் அனைத்தையும் கொள்ளை அடிக்கிறார். இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக பல அரசியல் தலைவர்களுக்கு கோடி கோடியாக லஞ்சங்களை வாரி குவிக்கிறார். 

இதையும் படிங்க: குப்பை கிடங்கில் தனுஷ் ராஷ்மிகா... ஏழு மணி நேரம் என்ன செய்தார்கள் - நடிகரே கூறிய உண்மை...!

மேலும் இந்த பணங்களை பல தலைகளுக்கு பட்டுவாடா செய்வதற்காக ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாகார்ஜுனாவான 'தீபக்' மூலம் செய்கிறார். இதில் தீபக் (நாகர்ஜுனா) இந்தப் பணங்களுக்கு பினாமிகளை தயார் செய்து எந்த பிரச்சனையும் இல்லாமல் பணத்தை பரிமாற்ற திட்டம் போடுகிறார். அப்பொழுது தான் திருப்பதியில் இருக்கும் 'தேவா' என்கின்ற தனுஷ், குஷ்பூ, திவ்யா என நான்கு பேரை தேர்வு செய்கிறார்.  


இதனை அடுத்து, பிச்சைக்காரர்களான இவர்கள் அனைவரையும் குளிப்பாட்டி அவர்களுக்கு ஆடைகளை கொடுத்து அவர்கள் பெயரில் பல பொய்யான நிறுவனங்களை உருவாக்கி, அவர்களைப் பார்த்தாலே மிகப் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லும் அளவிற்கு அவர்களுடைய மொத்த லுக்குகளையும் மாற்றி அவர்கள் மூலமாக பணத்தை கைமாற்றுவதும் பின்பு பணம் சென்று சேர்ந்த உடனே அந்த பிச்சைக்காரர்களை கொலை செய்வோம் என நாகர்ஜுனா திட்டம் தீட்டுகின்றார். 

ஆனால் இதிலிருந்து எப்படியோ தேவா (தனுஷ்) தப்பித்து விடுகிறார். தப்பித்த அவருடன் சமீரா என்கின்ற ராஷ்மிகா மந்தனா எப்படி சிக்கிக் கொள்கிறார் கடைசி கிளைமாக்ஸ்சில் படம் என்ன ஆகிறது என்பதுதான் இந்த 'குபேரா' படத்தின் கதையாக இருக்கிறது. இப்படி இருக்க, இந்த கதையை குறித்து அளசி பார்த்தால், உண்மையிலேயே இந்த திரைப்படம் தனுசுக்கு அசுரன் திரைப்படம் போல் தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடிகர் தனுஷின் திரைப்படம் என்றாலே அதில் அவரது அசுரத்தனமான நடிப்பு வெளிப்படும். அதேபோல்தான் இந்த படத்திலேயும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இந்த நிலையில் இப்படம் பல விமர்சனங்களை கடந்தாலும் உலகளவில் இத்திரைப்படம் வெற்றியை அடைந்து இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனாலும் தமிழகத்தின் தான் நினைத்ததை போல் படம் சரியாக ஓடவில்லை என இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா  வருத்தம் தெரிவித்தார். இப்படி இருக்கையில், குபேரா திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவலும் படம் வெற்றியா..? தோல்வியா..? என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி, உலகளவில் குபேரா திரைப்படம் ரூ.136 கோடி வசூல் செய்து வெற்றியடைந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வியை சந்தித்துள்ளது. 

இதனை பார்த்த நெட்டிசன்கள் தமிழகமாக இருந்தால் என்ன வெளியுலகமாக இருந்தால் என்ன படம் வெற்றி அடைந்து விட்டதை நினைத்து சந்தோஷப்படுங்க என தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: படம்னா.. எப்படி இருக்குன்னு தெரியுமா.. உங்க படத்தை கொளுத்துங்க.. நடிகர் தனுஷ் ஆவேச பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share