×
 

சிம்பிளான புடவையில் தேவதை போல மின்னிய தர்ஷணா ஸ்ரீபால்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

நடிகை தர்ஷணா ஸ்ரீபால் சிம்பிளான புடவையில் தேவதை போல மின்னிய போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகைகள், தங்களது நடிப்பு மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்கள் மூலமாகவும் தொடர்ந்து பிரபலமாகி வருகின்றனர்.


அந்த வரிசையில், சீரியல் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தர்ஷணா ஸ்ரீபால்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான இவர், அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ‘மூன்று முடிச்சு’ தொடரிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார்.

இதையும் படிங்க: வெள்ளை நிற குட்டை உடையில் அழகு தேவதையாக மின்னிய பார்வதி நாயர்..!! ஆப்பிளுடன் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வந்த தர்ஷணா, தற்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவும் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

குறிப்பாக, அவ்வப்போது அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சிம்பிளான புடவை அணிந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

தர்ஷணா ஸ்ரீபால் தமிழ் சின்னத்திரையில் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கியபோது, விஜய் டிவியின் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் நடித்தது அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

சீரியலில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பொதுவாக நீண்ட காலம் ரசிகர்களுடன் பயணிப்பதால், நடிகர்களுக்கும் அந்த கதாபாத்திரங்களுக்கும் இடையே ஒரு நெருக்கம் உருவாகிவிடும்.

அந்த வகையில் தர்ஷணாவின் நடிப்பும் சின்னத்திரை ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. அந்தத் தொடருக்குப் பிறகு அவர் அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடி சென்றார். இதன் மூலம் சன் டிவி பக்கம் வந்த அவர், ‘மூன்று முடிச்சு’ சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

இதையும் படிங்க: ‘டார்லிங்’க்கு பிறகு ஜி.வி.பிரகாஷின் பக்கா ஹாரர் ட்ரீட்..!! கயாடு லோஹரின் மிரட்டலான அவதாரத்தில் ‘இம்மார்ட்டல்’ எப்படி இருக்கு? முழு விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share