கல்யாணம் சரிப்பட்டு வராது.. ஆனால் அம்மாவாக ஆசை..! உண்மையை உடைத்து பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்..!
எனது காதல் தோல்விக்குக் நான் காரணம் இல்லை என நடிகை ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு, இசை மற்றும் அழகால் தனிச்சிறப்பைப் பெற்ற நடிகை என்றால் அவர் தான் ஸ்ருதி ஹாசன். கடந்த சில ஆண்டுகளாக தனது திரை வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையையும் திறந்தவெளியில் பகிர்ந்து வரும் இவர், தனது தந்தை கமல்ஹாசனின் மரியாதையை தாங்கியவராகவே வாழ்ந்து வருவது மட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த அடையாளத்தையும் பட்டியலிட்டு நிரூபித்து வருகிறார். அதன்படி, திரைப்படங்களில் மட்டும் அல்லாமல், இசையிலும் தனது பங்களிப்பை வழங்கி வரும் இவர், சமீபத்தில் தனது காதல் வாழ்க்கை, திருமணம், குழந்தை, பெற்றோராக வேண்டும் என்ற எண்ணிலடங்கா ஆசை உள்ளிட்ட பலதரப்பட்ட தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இது ரசிகர்கள் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் தற்பொழுது பரபரப்பாக பேசப்படும் தலைப்பாகவே மாறி இருக்கிறது. அதன்படி, தற்பொழுது ஒரு நேர்காணலில் உண்மையை தைரியமாக பேசிய ஸ்ருதி ஹாசன், தனது காதல் வாழ்க்கையில் பல முறை தோல்வியை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசுகையில், " நான் காதல் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை எதிர்பார்த்தேன். நான் எதிலும் பொய்யாக இருக்க விரும்பாதவள். ஆனால் சில நேரங்களில் நாம் நினைத்தபடி சில விஷயங்கள் நடக்காது. பல சந்தர்ப்பங்களில் திருமண முடிவுகள் வரை பேச்சுகள் சென்றிருக்கின்றன. ஆனால், அவை அப்படியே முடிவடைந்து விடும். அந்தத் தோல்விக்கு நான் தான் காரணம் என்று ஒருபொழுதும் கருதுவதில்லை. என்னை முழுமையாகப் புரிந்துகொள்ளாத சிலருடன் தான் நான் என்னுடைய காதலை இதுவரை பகிர்ந்தேன்” என்று நேர்மையாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்க ஸ்ருதி ஹாசன் இதுவரை பேசியது கூட பலரது கவனத்தை ஈர்க்கவில்லை, அதற்கு அடுத்ததாக அவர் “அம்மா” ஆக வேண்டிய விருப்பத்தை சொன்னதுதான் தற்பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதன்படி, தொடர்ந்து பேசுகையில் “நான் எப்போதுமே ஒரு குழந்தைக்கு அம்மாவாக வேண்டும் என்ற அதிகப்படியான ஆசையுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில், நான் ஒரு சிங்கிள் பெற்றோராக இருக்க விரும்பவில்லை. ஏனெனில் ஒரு குழந்தைக்கு அப்பா மற்றும் அம்மா என இருவரும் தேவைப்படுகிறார்கள். ஒரு பக்கமான பெற்றோர் உருவாக்கும் மரபு நல்லதல்ல. குழந்தையின் வளர்ச்சியில் இருவரது பங்களிப்பும் மிகவும் முக்கியம். அதற்காக நான் Single Parents களை குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து மிகச் சிறந்த முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்களது பயணம் எளிதல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் என் சொந்த வாழ்க்கையில் பல அடிகளை பட்டதினால், நான் அந்த மாதிரியான பாதையை ஒருபொழுதும் தேர்வு செய்யமாட்டேன். நான் தத்தெடுக்கும் எண்ணத்தையும் விரைவில் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரே மாதிரியான வாழ்க்கைத் திட்டம் யாருக்கும் இல்லை.
இதையும் படிங்க: திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் சொன்ன காட்டமான பதில்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
ஆனால், நான் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முழுமையான அன்பையும் பாதுகாப்பையும் தரக்கூடிய இடத்தை உருவாக்க விரும்புகிறேன்” என தெளிவாக கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசன் தற்போது திரைத்துறையில் மட்டுமின்றி, பலவிதமான கலாசார முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். சினிமா, இசை, எழுத்து என பன்முகத்திறன் கொண்டவர் என்பதுடன், தனிப்பட்ட வாழ்க்கையை சிக்கலின்றி எதிர்கொள்ளும் மனதையும் வளர்த்துள்ளார். தனது காதல் தோல்விகள், குடும்ப ஆசைகள், பெற்றோர் குறித்த பார்வை என அனைத்து விஷயங்களிலும் திறந்த மனதுடன் பேசிய ஸ்ருதி ஹாசன், சமூகத்தில் பெண்கள் தங்களை பற்றிய முடிவுகளை எடுக்கும் தைரியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. காதலில் தோல்வியடைந்தாலும் அதற்கு தனக்கு எதிர்மறையான பிம்பம் இல்லை என சொல்லும் அவர், அதே நேரத்தில், தன்னுடைய விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தெளிவாகக் கூறும் தன்மை கொண்டவர்.
அவரது வாழ்க்கைத் தீர்மானங்கள் பல பெண்களுக்கு புதிய நம்பிக்கையையும், தூண்டுதலையும் அளிக்கக்கூடியவையாக உள்ளதால் ஸ்ருதி ஹாசனின் இந்த உரையாடல்கள், சமூகத்தில் பெண்ணின் ஆசைகள், பெற்றோராக வேண்டிய அவசியம் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளைப் பற்றிய புதிய விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் சொன்ன காட்டமான பதில்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!