×
 

சிம்புவை ரோட்டுக்கு அழைக்க.. ரசிகர் பயன்படுத்திய ஆயுதம்..! பார்த்த உடனே கண்ணீர் விட்டு கதறிய நெகிழ்ச்சி காட்சி..!

தனக்காக இறங்கி வந்த நடிகர் சிம்புவை பார்த்த உடனே கண்ணீர் விட்டு கதறிய ரசிகரின் நெகிழ்ச்சி காட்சி வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் மத்தியில் பன்முக திறமைகள் கொண்ட நடிகராக நீண்ட காலமாக செல்வாக்குடன் உள்ளவர். அவரது நடிப்பு, இசை, குரல், நடனம் என பல துறைகளில் உள்ள திறமைகள் அவரை தனித்துவமாக காட்டுகின்றன.

தமிழகத்திலேயே அல்லாமல் பல வெளிநாடுகளிலும் சிம்புவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது பற்றி பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது மலேஷியாவில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு மலேஷியா சென்ற போது விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது ஒரு ரசிகர் அவரைக் கண்டதும் உற்சாகத்தை அடக்க முடியாமல் ரோட்டிலேயே முட்டி போட்டபடி குனிந்து வணங்கி உள்ளார். இது அங்கு இருந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினது. ரசிகர் சிம்புவை பார்த்ததும் கண்கலங்கியபடி உணர்ச்சி வசப்பட்டார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது பரவிய வேகத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு காருக்குள் இருந்த போதும் ரசிகர் அப்படி வணங்குவதை பார்த்ததும் உடனடியாக காரிலிருந்து இறங்கி வந்தார். வந்தவுடன் அந்த நபரை எழுந்திருக்கச் சொல்லி நேரடியாக அவரது கையைப் பிடித்து பேசினார். அவரிடம், “இப்படி வேண்டாம்… எழுந்திருங்க… நான் இங்க இருக்கேன்… பேசலாம்…” என்று மெதுவாக பேசி சமாதானப்படுத்தினார். சிம்புவின் இந்த செயல் அங்கு இருந்த அனைவரின் மனங்களையும் கவர்ந்தது.

இதையும் படிங்க: ஆனா இது புதுசா இருக்கு அண்ணே..! ஷாக்கான தமிழ் நடிகர்கள்.. சுமார் ரூ.4000 கோடி.. களமிறங்கும் ஜியோ ஹாட்ஸ்டார்..!

ரசிகர்கள் கூட, “எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் மனசு இது தான்” என்று அவர் மீது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். ரசிகருடன் சிம்பு பின்னர் ஒரு அழகான செல்ஃபி எடுத்தார். அதை பார்த்த ரசிகர் மகிழ்ச்சியோடு கண்ணீரை துடைத்தார். பிறகு அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டே அவரை அமைதியாக அனுப்பி வைத்தார். இந்த வீடியோ தற்போது அனைத்து சமூக தளங்களிலும் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. சிம்புவின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பல பொதுமக்களும் இந்த வீடியோவை பார்த்து அவரின் எளிமையான நடத்தை பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள்.  

இந்த வீடியோ மலேஷிய தமிழ் சமூகத்திடையே கூட மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிலருக்கு ஏன் சிம்பு அங்கும் இவ்வளவு பிரபலமானவர் என தெரியாதவர்களுக்கும் இந்த வீடியோ பதில் கொடுத்துள்ளது. மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும், இலங்கையிலும் சிம்புவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது பரவலாக அறியப்பட்டதே. அந்த ரசிகர் சிம்புவை பார்த்ததும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் மல்க வணங்குவது, அதற்கு எதிராக சிம்பு மிகுந்த பரிவுடன், மனிதநேயத்துடன் அணுகியது என இவை அனைத்தும் ஒரே வீடியோவில் பதிவாகி இருப்பதால் தான் அது வைரல் ஆகி உள்ளது.

பல தமிழ் நடிகர்கள் வெளிநாடு சென்றபோது கூட்டம் கூடுவது சாதாரணம். ஆனால் ஒருவரை பார்த்ததும் ரோட்டிலேயே விழுந்து வணங்குவது அரிதான சம்பவம். சிம்புவின் “ரசிகர்களுக்கு அவர் கொண்ட மரியாதை” இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இந்தியாவில் STR ஐ விமான நிலையங்களிலும், படப்பிடிப்பு தளங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பார்ப்பதற்காக ரசிகர்கள் பெரும் திரளாக திரண்டு வருவது வழக்கமானது. இப்போது அதே அன்பு மலேஷியாவிலும் அசைக்க முடியாத அளவில் இருப்பது தெளிவாகி விட்டது. திரைப்பணிகளில் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற சிம்புவின் இந்த மனிதநேயமான பண்பு அவரது புகழை மேலும் உயர்த்தியுள்ளது.  

ஒரே நொடியில் உணர்ச்சி மிக்க அந்த வீடியோ ஒரு ரசிகரின் அன்பையும், ஒரு நடிகரின் மனிதத்தன்மையையும் உலகத்திற்கு காட்டியிருக்கிறது. சிம்பு மலேஷியாவில் எடுத்த இந்த சிறிய செயல் சமூக வலைத்தளங்களில் இப்போது பெரிய எதிரொலியை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, "இது தான் உண்மையான ஸ்டார்-ரசிகர் பாசம்" என்ற கருத்து இணையம் முழுவதும் பரவிக் கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க: ஒரே போட்டோவில் ரசிகர்களை கவர்ந்த நடிகை பாக்யஸ்ரீ..! லுக் லைக் போட்டோஸ் இதோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share