என்ன ட்ரெஸ் இது..! சமந்தாவின் மாடல் உடையை கண்டு வியப்பில் நெட்டிசன்கள்..!
நடிகை சமந்தாவின் மாடல் உடையை கண்டு வியப்பில் உள்ளனர் நெட்டிசன்கள்.
நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா". இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு கொண்டவர் எனவும் மக்கள் மத்தியில் அவரது பெயரும் பரவ ஆரம்பித்தது.
இதையும் படிங்க: முகத்தில் புது பொலிவு... சிம்பிள் சேலையில் அழகு சிலையாக மாறிய சமந்தா!
இதனை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் நன்றாக வாழ்ந்த இவர்கள் இருவர் மீதும் யார் கண் பட்டதோ தெரியவில்லை, நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர்.
இதனை அடுத்து, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார் என்ற செய்தி வெளியாகி அனைவரும் புறணி பேச, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று,
ரூ.200 கோடி படஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.
இதனால் படங்களில் நடிக்காமல் அமைதியாக இருந்த சமந்தா, பல இடங்களில் தனது தனிமையை போக்க சுற்றி கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் சமீபகாலமாக இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் (Raj Nidimoru) சுற்றி திரிவதால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா மீண்டும் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் (Raj Nidimoru) இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து "நியூ பிகினிங்" என பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: நான் நிம்மதியாக தூங்க இவங்க தான் காரணம்..! நடிகை சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்..!