×
 

எனக்கு பிரண்ட்ஸ்சே இல்ல.. இதுல ஜோதிகாவை பற்றி பேச என்ன இருக்கு - சிம்ரன் விளக்கம்..!

ஜோதிகாவை பற்றி பேசியதாக வரும் தகவலுக்கு அட்டகாசமான விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை சிம்ரன்.

தமிழ் திறையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்த சிம்ரனை மக்கள் ரசிக்க தொடங்கியுள்ளனர் என்றே சொல்லலாம். நடிகர் ரஜினியை பார்த்து ரம்யாகிருஷ்ணன் 'மின்சார கண்ணா வயசானாலும் உன் அழகும் உன் ஸ்டைலும் உன்னைவிட்டு கொஞ்சம் கூட குறையால' என சொன்னது போல, நடிகை சிம்ரனும் இவ்வளவு வயசானாலும் கொஞ்சம் கூட அழகும், ஸ்டைலும் குறையாமல் இருக்கிறார். அதிலும் அவரது க்யூட்டான நடிப்பு துளிகூட மாறாமல் அதே குழந்தை தன்மையை காண்பித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இப்பொழுது ரீஎண்ட்ரி கொடுத்துள்ள சிம்ரன் பிரியமானவளே, வாலி போன்ற படங்களில் வந்த சிம்ரனை போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஜாலியாக இருக்கிறார். 

குறிப்பாக, 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் ஒரே ஒரு ரோலில் வந்தாலும் திரிஷாவை ஓரம் உட்கார வைத்து அந்த கிரிடிட்டை மொத்தமாக தட்டி சென்று விட்டார் சிம்ரன். இவரால் மீண்டும் தமிழ் நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர். மாஸ் ஆக்ஷன் காட்சிகளில் தற்பொழுது நடித்து வரும் நயன்தாராவையே பின் தள்ளவிடுவார் போல் இருக்கிறது இவரது நடிப்பு. இப்படி சரளமாக பேசும் சிம்ரன், உண்மையில் மும்பையை சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், மும்பையை சேர்ந்த சிம்ரன், தமிழ் திரையுலகில் 1997ம் ஆண்டு வெளியான "ஒன்ஸ்மோர்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து நடிகை சிம்ரன் தமிழில் பல படங்களில் நடிக்க அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும், 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு படத்திற்கு ரூ.75லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகையும் இவர் தான். இதனை அடுத்து, தமிழ் திரையுலகில் மட்டும் 10 விருதுகளை இதுவரை வென்றுள்ளார். மேலும், 4 பிலிம்பேர் விருதுகளையும் இதுவரை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே போஸ்ட்டில் மொத்த லைக்குகளையும் அள்ளிய நடிகை சிம்ரன்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

தமிழில் மட்டும் இதுவரை நடிகை சிம்ரன், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், அவள் வருவாளா, கொண்டாட்டம், நட்புக்காக, ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, உன்னை கொடு என்னை தருவேன், பிரியமானவளே, 12 B, பார்த்தாலே பரவசம் , பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டாள், யூத், கோவில்பட்டி வீரலட்சுமி, உதயா, பிதாமகன், நியூ, ஆய்த எழுத்து, நம் நாடு, சத்தம் போடாதே, சேவல், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை, தநா -07 அல 4777, பேட்ட, பாவ கதைகள், மகான், ராக்கெட்ரி: நம்பி விளைவு, கேப்டன், அந்தகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.     

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சிம்ரன் விருது விழாவில் பேசும் பொழுது, "நான் எனக்கு தெரிந்த சக நடிகை ஒருவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினேன். அதில் உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது என கூறினேன். அதற்கு பதிலளித்த அவர், உங்களை போல் ஆன்டி ரோலில் நடிப்பதை விட நான் நடிக்கும் ரோல் சிறந்தது என பதில் அனுப்பினார். இது எனக்கு ஷாக்கிங் ஆக இருந்தாலும், என்னை பொறுத்த வரை டப்பா ரோல்களில் நடிப்பதை விட ஆன்டிரோலில் நடிக்கலாம்' அதுவே மக்களுக்கு  பிடித்திருக்கிறது என பேசி இருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர், நடிகை ஜோதிகா நடித்த 'டப்பா கார்டெல்' என்ற வெப் சீரிஸ் ரிலீஸ் குறித்து தான் பேசுகிறார். அதில் நடித்த ஜோதிகாவை தான் சிம்ரன் பேசி உள்ளார் என பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தனியார் சேனலுக்கு சிம்ரன் கொடுத்த பேட்டியில் அதற்குண்டான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், "நான் விருது விழாவில் பேசியதை மக்கள் இப்படி சோதித்து பார்ப்பார்கள் என எனக்கு தெரியாது. அது வெறும் ஊகத்தின் அடிப்படையான செய்தி தான். "டப்பா கார்டெல்" வெப் சீரிஸ் உண்மையிலேயே நல்ல தொடர். 

உண்மையில் நான் அங்கு சொன்னது என்னை சொன்ன நபருக்கு சென்று சேர்ந்துவிட்டது. நான் வேண்டுமென்றே யாரையும் குற்றப்படுத்த சொல்லவில்லை. அது நிஜமாகவே எனக்கு நடந்தது. ஆதலால் தான் சொன்னேன். நம் வாழ்க்கையில் ஒரு முறை நட்பு முறிந்துவிட்டால்  அதை மீண்டும் சரி செய்யவே முடியாது. அதனால் அப்படிப்பட்ட நட்புக்களுக்கு எதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும். தேவை என்பதால் தான் நான் அதை பற்றி பேசினேன். உண்மையில் எனக்கு நண்பர்கள் என யாரும் கிடையாது, யாரை பற்றியும் புறணி பேச நான் தயாராகவும் இல்லை, இதுவரை அப்படி பேசியதும் இல்லை" என தெரிவித்து இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

  

இதையும் படிங்க: படம் நல்லா இருந்தா மக்கள் பாக்க வராங்கய்யா.. வருங்கால இயக்குநர்களுக்கு நடிகர் சசிகுமார் கொடுத்த டிப்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share