பரபரப்பான 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இருந்து விடைபெறுகிறார் மனோஜ் ..! கண்ணீர் வரவைத்த போஸ்ட் ..!
பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இருந்து மனோஜ் விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி அசாத்திய வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் “சிறகடிக்க ஆசை” சீரியல் இணையத்தில் ஒரு கலகலப்பான தலைப்பாக மாறி விட்டது. குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அடுத்தபடியாக பேசப்படும் கதாபாத்திரமாக, மனோஜ் கேரக்டர் தற்போது பரபரப்பின் மையமாகி உள்ளது.
மனோஜ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா, இதன் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மனோஜ் கதாபாத்திரம் சீரியலில் கொஞ்சம் வித்தியாசமானதாகும். ரொம்பப் படித்தவராகவும், அறிவாற்றல் கொண்டவராகவும் காட்டப்படுவதாக இருந்தாலும், முட்டாள் குணத்தைக் கொண்டதால் ஒவ்வொரு சிக்கலிலும் மாட்டிக்கொண்டு விழிக்கிறார். இதன் காரணமாக கதையில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த சீரியலில் தற்போதைய பரபரப்பு சம்பவம் என்னவென்றால், மனோஜ் மனைவி ரோகிணி ஏற்கனவே திருமணம் ஆனவர், அவரது மகன் கிரிஷ் என்ற உண்மை கதையின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான மீனாக்கு தெரியவந்தது.
இந்த ரகசியம் வெளியில் வரக் கூடாது என்று ரோகிணி மீனாவிடம் கெஞ்சி இருக்கிறார். தன்னுடைய பழைய வாழ்க்கையில் நடந்த கொடுமைகள் மற்றும் மனோஜின் குடும்பத்தை ஏமாற்றியதற்கான நியாயத்தையும் ரோகிணி கூறி, மீனாவுக்கு உண்மைகளை பகிர்ந்தார். தற்போதைய சூழலில், ரோகிணி தன்னுடைய சுயநலத்துக்காக மீனாவுக்கு ஆதரவாக சில விஷயங்களைச் செய்து வருகிறார். ஆனால் ஒரு விஷயம் நிச்சயம் – தன்னை பாதுகாக்க ரோகிணி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயார்.
இதையும் படிங்க: மனோஜ்-க்கு முன்னாடி வேறொருவருடன் காதலாம்..! மீண்டும் மீனாவிடம் சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசையில் புது ட்வீஸ்ட்..!
இப்போ எதிர்பார்க்கப்படும் திருப்பம் என்னவென்றால், ரோகிணி ஏற்கனவே திருமணம் ஆனவர் மற்றும் கிரிஷ் தன்னோட மகன் அல்ல என்பது மனோஜ்க்குத் தெரியும்போது, அவர் எவ்வாறு முடிவு எடுக்கப்போகிறார் என்பது. உண்மை தெரிந்தால், சீரியலின் கதையும் தலைகீழாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் சீரியலில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீ தேவா, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதோடு ஒரு கவிதையும் பதிவு செய்து, உணர்ச்சிப்பூர்வமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் பதிவு செய்ததைப் படிக்கும்போது உணர்ச்சிகள் கலந்துள்ளதை உணர முடிகிறது.
அந்த பதிவில், ஸ்ரீ தேவா – " இரண்டு வருடங்கள் 450 எபிசோடுகள் நான் உன் முகத்திலிருந்த கண்ணாடி. உன் முகத்தின் முதல் பாதுகாவலன். இன்று உன்னை விட்டு விடைபெறுகிறேன். கேமரா ஆன் ஆன தருணத்தில் இருந்து நீ சொன்ன ஒவ்வொரு டயலாக்கும், நீ சோதிக்கப்பட்ட தருணங்கள், நீ சிந்திய கண்ணீர் எல்லாமே என் லென்ஸில் பதிவு ஆகி இருக்கிறது. நீ விழுந்த நாளையும் பார்த்தேன், உன் மேலே எழுந்த நாளையும் பாராட்டுகிறேன். உன் பயணத்தின் தொடக்கம் இதுவே, ஆனால் என் கடைசி வார்த்தை – கண்ணாடி மாறலாம், ஆனால் ஹீரோயின் பார்வை மாறக் கூடாது.
ஸ்ரீ தேவாவின் பதிவில் மேலும், மனோஜ் புதிய கண்ணாடியோட வர்ற உன் அடுத்த பிரேம் எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யட்டும். இது உன் மீது அக்கறை கொண்ட பழைய ஹீரோவின் வாழ்த்து” என்ற இந்த பதிவு, ரசிகர்களுக்கு மனோஜின் கதையின் எதிர்கால பரபரப்பையும், நடிகரின் உணர்ச்சி நெருக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. மனோஜ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் புதிய தோற்றம், கதையில் புதிய திருப்பங்களை கொண்டு வருமா என்பது எதிர்கால எபிசோட்களில் தெரியவிருக்கும். இப்போதைய சீரியலில் நடந்த ரகசியங்கள், மாயாஜாலம் போன்ற சிக்கல்கள், ரசிகர்களை வியக்க வைக்கின்றன. ரோகிணி மற்றும் மனோஜின் நட்பு, தந்திரங்கள், உண்மை வெளிப்பாடு ஆகியவை கதையின் மையத்தில் அடுத்த சில வாரங்களில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும்.
இதன் மூலம் “சிறகடிக்க ஆசை” சீரியல் ரசிகர்களுக்கு ஒரு கலகலப்பான, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதை அனுபவத்தை வழங்கி வருகிறது. மனோஜ் கதாபாத்திரத்தின் புதிய தோற்றம் மற்றும் கதையின் ரகசியங்கள், ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கலக்கலப்பான விமர்சனங்களையும், பேச்சுகளையும் உருவாக்கி வருகிறது.
இதையும் படிங்க: வச்சான் பாரு ஆப்பு..! மீனாவின் வாழ்க்கை டோட்டலா குளோஸ்.. ரோகிணி வச்ச செக் அப்படி - 'சிறகடிக்க ஆசை' திக்திக் எபிசோட்..!