சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படத்தில் அமீர்கான்..! ஹிட் கொடுத்து வசூலில் சாதனை..!
நடிகர் சிவா நடிக்க வேண்டிய இடத்தில் நடிகர் அமீர்கான் நடித்து வெளியான படம் தற்பொழுது உலகளவில் ஹிட் கொடுத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் படமாக தற்பொழுது அமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.எஸ் பிரசன்னா, முழுக்க முழுக்க நடிகர் அமீர் கானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா முன்னணி கதாபார்த்திரத்தில் நடித்துள்ளார்.
நாம் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறோம் ஆனால் மாற்றுத்திறனாளிகள் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மிகவும் அழுத்தமாக காண்பித்த இந்த படம் ஜூன் 20 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இந்த சூழலில், ஏற்கனவே நடிகர் அமீர்கான் தனது 'சித்தாரே ஜமீன் பர்' படத்தை எந்த ஓடிடி தளங்களுக்கும் விற்க மாட்டேன் என தீர்க்கமாக தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் சொன்ன காட்டமான பதில்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
மேலும், இத்திரைப்படம் வெளியான பின்பு சுமார் இரண்டு மாதங்கள் கழித்து, யூடியூபில் "பே-பெர்-வியூ" என்ற ஆப்ஷனில் வெளியிடப்போவதாக கூறிஇருந்தார். இப்படி செய்வது டிஜிட்டல் முறையில் புதிய வழிவகையை ஏற்படுத்தும் எனவும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஓடிடி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வரும் வேளையில் தற்பொழுது இந்த படம் வெளியாக மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படிப்பட்டதான இந்த திரைப்படத்தின் கதைக்களம் என பார்த்தால், " டெல்லி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனில் இருந்து வருகிறார் நமது ஹீரோ அமர்க்கான்.
அங்கு உள்ள மாணவர்களுக்கு பாஸ்கட் பால் ஜூனியர் பயிற்சியாளராக வரும் இவர், ஒரு போட்டியின் பொழுது இவருக்கும் சீனியர் பயிர்ச்சியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்பொழுது அவரது சீனியர் அமர்கானின் உயரத்தை வைத்து கிண்டல் செய்ய, கோபத்தை தாங்க முடியாத அமீர்கான் அவரை கன்னத்திலேயே பளார் என அரைக்கிறார் . பின்பு மது போதையில் இதே கோபத்துடன் காரில் செல்லும் அவர் ரோட்டில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி கடைசியில் போலீசாரின் வாகனத்தின் மீது இடித்து நிறுத்துகிறார். இதனால் அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.அப்பொழுது நீதிபதிகளோ செய்த தவறுக்கு சிறைக்கு செல்கிறீர்களா அல்லது சமூக சேவை செய்கிறார்களா? என்று இரண்டு ஆப்ஷன்களை அவருக்கு முன்பாக வைக்கின்றனர்.
அப்பொழுது அவரது வழக்கறிஞர் நீ சிறைக்கு சென்றால் உனது வேலை போய்விடும் ஆதலால் சமூக சேவையை செய்வதற்கே ஒற்றுக்கொள் என கூறுகிறார். இதனால் வேறு வழி இன்றி கோர்ட்டில் சமூக சேவை செய்ய ஒப்புக் கொள்கிறார் அமீர்கான். இதனை அடுத்து, அவருக்கு நூதன தண்டனையாக மாற்றுத்திறனாளிகளுக்கு பேஸ்கட் பால் பயிற்சி கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு கொடுத்து அனுப்பிவைக்கிறார்.
இதனால் மணமுடைந்த அமீர்கான் அங்கு சென்று பார்க்கும் பொழுது அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். எப்பொழுதுமே மற்றவர்களை கிண்டல் செய்யும் குணமுடைய அமீர்கானுக்கு இது வலிகளை ஏற்படுத்தினாலும் தண்டனையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார். பின்பாக அவர் அந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகளை ஜெயிக்க வைத்தாரா..? இல்லையா..?
என்பதையும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் அவர் தன்னை மாற்றிக் கொண்டாரா..? என்பதை குறித்தும் விளக்குவது தான் இந்த படம். இத்திரைப்படத்தை குறித்து பார்த்தால் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் அமீர்கான் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் தன்னைக் குறித்து ஒருவர்கள் குறை சொல்லும் பொழுது அந்த இடத்தில் நாம் எவ்வளவு ஸ்போட்டிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் காண்பித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் எமோஷனல்களை விட காமெடிகளே அதிகமாக இருக்கிறது. மேலும் படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது திரைப்படம்.
சில நேரங்களில் எமோஷனல் காட்சிகள் நம் கண்களில் கண்ணீரையும் வரவைத்து செல்கிறது. அதேபோல் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை ஜெனிலியா இரண்டாம் பாகத்தில் தனது நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் அமீர்கான் இறுதியில் அவர்களை புரிந்து கொள்வதே திரைப்படத்தின் கதையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இறுதி காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் அனைவரையும் மனதுருக செய்தது. இப்படிப்பட்ட அருமையான படமான "சித்தாரே ஜமீன் பர்" படம் உலகளவில் இதுவரை சுமார் ரூ.225 கோடி வசூல் செய்து சூப்பர்ஹிட் கொடுத்துள்ளது.
அமீர்கான் நினைத்ததை போல் அவரது படம் மிக்கபெரிய ஹிட் கொடுத்திருந்தாலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க முடியாமல் போனது தான் தமிழ் ரசிகர்களின் வருத்தமாக உள்ளது.
இதையும் படிங்க: நடிகர் அஜித் வாங்கிய புது கார்..! அடேங்கப்பா..! இவ்ளோ காஸ்ட்லியா.. வாயை பிளந்த ரசிகர்கள்..!