×
 

என்னை பார்த்தா 'திடீர் தளபதி' மாதிரியா இருக்கு..! ஆவேசமாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் என்னை பார்த்தா 'திடீர் தளபதி' மாதிரியா இருக்கு என ஆவேசமாக பேசியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்திய GOAT படம், மற்றும் அதனை தொடர்ந்து உருவான சர்ச்சைகள், ரசிகர்களின் உணர்வுகளில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் முக்கியமானது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தளபதி விஜய் இருவருக்கும் இடையே ஏற்பட்ட "தளபதி வாரிசு" விவாதம் தான். இப்படிப்பட்ட 'GOAT – The Greatest of All Time' திரைப்படம், தளபதி விஜய் தனது நடிப்பு வாழ்க்கையின் கடைசி படங்களில் ஒன்றாகும். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படம், விஜயின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார். இதில், விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருப்பதாக பேசுபொருளாக மாறியது. இந்த காட்சி வெளியாகாத நிலையில் கூட, சமூக வலைதளங்களில் பலர், “இது விஜய் சினிமாவை விட்டுட்டு அரசியலுக்குச் செல்லும் முன், திரையுலகத்தைக் கையளிக்கும் விதமாக சிவகார்த்திகேயனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என விமர்சனங்கள் பேசத் தொடங்கினர். இப்படி இருக்க விஜய் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சிலர், சிவகார்த்திகேயனை 'குட்டி தளபதி', 'திடீர் தளபதி' என்று அழைத்தனர். இதில் சிலர் பாசத்தோடு குறிப்பிட்டாலும், பலர் விமர்சனமாக, “அஜித்தின் வழியில் செல்ல விரும்பியவர் இப்போது விஜய்யின் இடத்தை பிடிக்க நினைக்கிறார்” எனக் குற்றம்சாட்டினர். அதேவேளை, மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயனை விரும்பும் ரசிகர்கள்  “அவர் தனக்கென தனி அடையாளம் கொண்டவர். யாருக்கும் வாரிசு அல்ல, தன்னால் உருவானவர்” என வலியுறுத்தினர். இத்தனை நாட்களாக மௌனமாக இருந்த சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற அவரது புதிய படம் "மதராஸி"யின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மேடையில் பேசினார்.

அதில் “அண்னன் அண்ணன் தான், தம்பி தம்பி தான். அப்படி நினைத்திருந்தால், அவர் துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கி இருக்க மாட்டேன். விஜய் ரசிகர்களை பிடிக்க பார்க்கிறேன் என சொல்கிறார்கள். ரசிகர்களை பிடிக்க முடியாது, சம்பாதிக்கணும். அந்த சம்பாதிப்பு அன்பால், பாசத்தால், உழைப்பால் மட்டுமே வரும். நான் திரையுலகில் வளர்ந்தது, ஏராளமான ரசிகர்களின் ஆதரவால். அதில் விஜய் சார் ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் ஈர்ப்பு இருக்கிறது என்பதற்காக நான் விஜய் சாரின் இடத்தை பிடிக்க நினைக்கவில்லை. அவர் ஒரு தலைவன். நான் ஒரு கலைஞன். நாம் தனித் தனியாக ஒளிரலாம். ஒளிர வேண்டியது தான். நான் என் கடின உழைப்பால் ஒரு இடத்தை அடைய விரும்புகிறேன். யாருடைய இடமும் பறிக்க விரும்பவில்லை” என கட்டன்ரைட்டாக கூறினார். அவரது இந்த பேச்சு, நிகழ்ச்சியில் இருந்தவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேடையில் இருந்த நேரத்தில் கைதட்டல் சத்தம், “SK SK” என ஆரவாரம் செய்தனர். இந்த வாக்கு மூலங்கள், அவரது அரசியல் மற்றும் ரசிகர் வட்டாரத்தில் பரப்பப்பட்ட 'இரண்டாம் வரிசை தளபதி' என்ற முத்திரையை உடைத்ததாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "கூலி" பட வெளியீட்டில் டபுள் ட்ரீட்..! சிவகார்த்திகேயன் போட்ட மாஸ்டர் பிளான்.. இதை எதிர்பாக்கல..!

குறிப்பாக விஜய் தற்போது தனது அரசியல் தமிழக வெற்றிக் கழகம் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதால், அவரது திரையுலகப் பின்தொடர்வாளராக யார் வருவார்கள் என்பது தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் நிலைத்திருக்கும் நல்லுபாதி, குடும்ப பாசம், ஒழுக்கமிக்க சொற்பொழிவுகள், மற்றும் திரைப்பணிகளில் காணப்படும் மேம்பாடு ஆகியவை, அவரை ஒரு "பாசமிகு வாரிசு" என சிலர் கருதத் தொடங்கினர். எனினும், இந்த வாரிசு தேவையா அல்லது ஒவ்வொருவருக்கும் தனி பாதை இருக்க வேண்டுமா என்பது, இன்றைய ரசிகர்களிடையே சிந்திக்க வைக்கும் ஒன்று.  இன்றைய விவாதங்களுக்கிடையில் இந்த பழைய கருத்துகள் மீண்டும் மேற்கோளாகக் கொடுக்கப்படுகின்றன. SK தன்னுடைய ரசிகர்களை பெருக்குவதற்கும், வளர்ச்சியை அடைவதற்கும் தனது செயல்கள் மூலம் உரிய வழி வகுப்பதாக கருதப்படுகிறார். 'மதராஸி' திரைப்படம், ஒரு வித்தியாசமான பாணியில் உருவாக்கப்பட்ட சமூக அரசியல் சூழலைத் தொடும் திரைப்படமாகவே எதிர்பார்க்கப்படுகிறது. இதில் SK, ஒரு நேர்மையான சமூக ஆர்வலராக நடித்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரெய்லரில் வெளிவந்த "நாம எதற்காக பேசறோம் தெரியுமா? பேசாம இருக்க முடியலன்னு" என்ற அவரது பேச்சு, ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே ஒரு திரை நடிகரின் சாதனைகளை, மற்றொரு நடிகரின் சந்தைக்கு இணைத்துப் பார்க்கும் சமூகத்தின் நோக்கங்கள், அடிக்கடி மிகவும் விரிவான விமர்சனங்களை உருவாக்குகின்றன. அதில் அஜித் – விஜய் விவாதங்களைத் தொடர்ந்து, தற்போது விஜய் – சிவகார்த்திகேயன் விவாதமும் உருவாகியுள்ளது. ஆனால், இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் “ஒருவரை ஒருவர் மீறாமல் வளரக்கூடிய திரையுலகம் என்பதற்கான எடுத்துக்காட்டு, சிவகார்த்திகேயனின் இந்த மௌனத்தை உடைத்த பேச்சு” என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: 'கூலி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தாரா..? விஜயை தொடர்ந்து ரஜினி படத்திலும் கேமியோ..வா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share