“ஓ காட் பியூட்டிஃபுல்” பாடல் ப்ரோமோ...! சிவகார்த்திகேயனை வெறுப்பேற்றிய சுதாகர்..!
“ஓ காட் பியூட்டிஃபுல்” பாடல் ப்ரோமோவில் கோபி சுதாகருடன் சிவகார்த்திகேயன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனது தனிப்பட்ட நகைச்சுவை ஸ்டைலும், சகஜமான நடிப்பு மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், இன்று முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மையுடன் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருக்கிறார். இப்படி இருக்க தற்போது இவரது அடுத்த புதிய முயற்சி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் அனிருத்தின் பிடியில் ‘மதராஸி’..! வெளியானது பர்ஸ்ட் சிங்கிள் ‘சலம்பல’..!
சமீபத்தில் நடிகர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடித்துள்ள படம் “ஓ காட் பியூட்டிஃபுல்”. இந்த படம் ‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் வெப் சீரிஸில் பிரபலமான இருவரின் நடிப்பில் உருவாகி இருப்பதால், இளைஞர்களிடையே ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களில் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் குரல் கொடுத்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு பெரிய பிரைஸாக அமைந்துள்ளது. அவரது இசை அணுகு முறை இளைஞர்களிடையே ஏற்கனவே பிரபலம் ஆகியுள்ளது. அதன்படி சில ஹிட் பாடல்கள் பாடியிருந்த அவர், தற்போது இந்த புதிய பாடலிலும் தனது குரலால் மாயம் செய்ய வருகிறார். இந்த பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில், அதில் இடம்பெற்ற ஒரு காட்சியே இணையத்தில் பெரும் சிரிப்பையும், வைரலையும் உருவாக்கியுள்ளது.
அந்த காட்சியில் நடிகர் சுதாகர் வயலின் வாசிக்கத் தயாராக இருக்கும் போது, சிவகார்த்திகேயன் பாட ஆரம்பிக்கிறார். அவரது குரலை கேட்டவுடன், சுதாகர் வெறுப்புடன் வயலினை தூக்கி எறிகிறது போல ஒரு அசையும் காட்சியாக இடம் பெற்றுள்ளது. இந்த ஹ்யூமரான சீக்வன்ஸ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “சிவா பாட்டு கேட்ட சுதாகர் ரியாக்ஷன் அட்டகாசம்” என மீம்கள் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். தற்போது ப்ரோமோ மட்டுமே வெளியாகி இருந்தாலும், முழு பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலுக்குப் பிறகு ரசிகர்கள் சிவகார்த்திகேயனிடம் இன்னும் அதிகமான இசை முயற்சிகளை எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த பாடலின் இசையை யார் அமைத்திருக்கிறார்கள், இசையின் பின்னணியில் உள்ள கலைஞர்கள் யார், எப்படியெல்லாம் இந்த பாடல் உருவானது என்கிற விவரங்கள் படக்குழுவால் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக “ஓ காட் பியூட்டிஃபுல்” என்ற இப்படம் மட்டுமின்றி, இதில் இடம்பெறும் இந்த தனித்துவமான பாடலும், ஹ்யூமரான ப்ரோமோவும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் புதிய முயற்சிகளை வெளிக்கொணர்கின்றன. இதனூடாக மீண்டும் ஒரு முறை தனது குரலால் ரசிகர்களை கவரும் நடிகர் சிவகார்த்திகேயன், இன்னும் பல வகையான கலைத் திறமைகளில் சிறந்து விளங்கப் போவதாகவே தெரிகிறது. அவரது இந்த முயற்சி தமிழ் சினிமாவில் பலர் முனைப்பாக குரல் கொடுத்து பாடல் பாடும் கலாச்சாரத்திற்கு ஒரு புதிய தூண்டுகோலாக அமையக்கூடும்.
இது போல சினிமா, இசை, நகைச்சுவை அனைத்தும் கலந்த ஒரே பாட்டில் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்..!