மகன் அகில் அக்கினேனி கல்யாணம்.. மகிழ்ச்சியில் அமலா.. வைரல் போஸ்ட்..!
தனது மகன் அகில் அக்கினேனி கல்யாணம் குறித்து மனம் திறந்துள்ளார் அமலா.
நடிகர் நாகார்ஜுனா, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான மைதிலி என்னை காதலி, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா, ஜீவா, மாப்பிள்ளை, வெற்றிவிழா, மௌனம் சம்மதம், கற்பூர முல்லை ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அமலாவை 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்க நாகர்ஜுனா அமலா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒன்று நாகசைதன்யா மற்றொருவர் அகில் அக்கினேனி.
இவர்கள் இருவரும் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக வளம் வந்து கொண்டு இருக்கின்றனர். இப்பயி இருக்க, நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இந்த சூழலில் நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா தரப்பில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுத்த நிலையில் அதனை சமந்தா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மகன்கள் போட்ட மாஸ்டர் பிளான்.. வலையில் சிக்கிய தனுஷ், ஐஸ்வர்யா..! நிம்மதி பெருமூச்சு விட்ட ரஜினி..!
சமந்தாவுடனான பிரிவுக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்பின் முதலில் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த இவர்களது திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு ஹனிமூனில் பிசியாக இருந்த சோபிதா தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாகர்ஜூனாவின் இளையமகனான அகில் அக்கினேனிக்கு இன்று காதல் திருமணம் நடைபெற்றது. அதன்படி, அகில் அக்கினேனி தனது நீண்டகால காதலியான 'ஸைனாப்பை' இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் நாகசைதன்யா திருமணத்தைப்போல் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்களை வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியானது வரும் ஜூன் 8ம் தேதியான நாளை நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூரனா ஸ்டூடியோசில் நடைபெற உள்ளது.
தற்பொழுது மணமக்கள் இருவரின் புகைப்படங்கள் வெளியிட்ட நாகார்ஜுனாவின் மனைவியும் அகில் அக்கினேனியின் அம்மாவுமான அமலா தனது இன்ஸ்ட்டாவில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், " எனது அன்பு மகன் அகில் தனது அன்புக்குரிய ஜைனப்பை அதிகாலையில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு நெருக்கமான விழாவில் திருமணம் செய்து கொண்டார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நாகார்ஜுனாவுக்கும் எனக்கும் இது கனவு நனவான ஒரு தருணம். நாங்கள் எங்களது அன்பையும், சிரிப்பையும், அரவணைப்பையும் எங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். ஒரு புதிய அத்தியாயத்தை ஒன்றாகத் தொடங்கும் போது உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துகளையும் நான் கோருகிறேன். அன்புடனும் நன்றியுடனும்," எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வயசுக்கு தகுந்த மாதிரி நடிங்க கமல்... அப்பனும் பையனும் ஒரே பெண்ணோட... இதுவா சினிமா - கடுப்பான பிரபலம்