சொந்த ஊர் திருவிழாவில் மக்களோடு மக்களாக கும்மியடித்த நடிகர் சூரி..! வைரலான வீடியோ..!
மக்களோடு மக்களாக கலந்து இருந்த நடிகர் சூரி கும்மியடித்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஒரு காலத்தில் பரோட்டா காமெடியில் பின்னி பெடல் எடுத்த நடிகர் சூரி, இன்று கதாநாயகனாக மாறி வில்லன்களை பின்னி பெடலெடுப்பார் என யாரும் நினைத்து கூட பார்த்ததில்லை. அப்படிப்பட்ட நடிகர் சூரி, பல கதாநாயகர்ளுடன் இணைந்து காமெடியனாக சினிமாவில் வலம் வந்து கொண்டு இருந்தார். சந்தானம், யோகி பாபு வரிசையில் என்றும் ஸ்டார் காமெடியனாகவே இருந்த நடிகர் சூரி, தற்பொழுது காமெடி கதாபாத்திரங்களை விட்டு கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: 'கூலி'யில் ஹீரோவே நான் தான்..ரஜினி இல்ல..! நாகார்ஜூனாவின் பேச்சால் குழப்பத்தில் ரசிகர்கள்..!
இந்த சூழலில், சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் எழுத்தில் உருவாகி இருக்கும் பாசம் கலந்த திரைப்படம் தான் 'மாமன்' திரைப்படம். இப்படி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளம் கொண்டிருக்கும் நடிகர் சூரி, எப்போது பார்த்தாலும் எளிமையுடன் இருப்பவராக இருக்கிறார். திரையில் நகைச்சுவை வெடிக்க வைத்தாலும், வாழ்க்கையில் அவரின் நேர்மை, அடக்கம், பொதுமக்கள் மீது உள்ள அன்பு, அவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூரி சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் ராஜாகூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களோடு ஒன்றாக கும்மியடித்து, பாடல் பாடி, நடனமாடிய வீடியோ சமூக வளைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை குறித்து தன்னுடைய எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ள சூரி, இதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் " எங்கள் ராஜாகூர் கிராமம்… திருவிழா மகிழ்ச்சி பொங்க, கோலாகலமாக துவங்கி விட்டது…" என்ற வார்த்தைகளால் பதிவிட்டு, அவர் ஊரின் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தி இருகிறார்.
👉🏻 actor soori impresses with energetic kummi dance at temple festival video .. click here 👈🏻
அந்த வீடியோவில் சூரி மிகவும் சாதாரண உடையில், திருவிழாவில் வந்திருந்த பொதுமக்களோடு எளிமையாக கலந்து கொண்டு, இசைக்கு ஏற்ப உற்சாகமாக குதித்து நடனம் ஆடியவாறு, மக்களோடு பாடல்களைப் பாடுகிறார். அவரின் நடனத்துக்கும், முக பாவனைகளுக்கும், சுற்றியுள்ளவர்கள் எழுப்பும் ஆரவாரத்துக்கும் இடையே, ஊர் மக்கள் மனதில் அவர் இன்றும் “அவன் தான் நம்மோடவன்டா” என்பதற்கான உறுதியான நினைவாக இந்த நிகழ்வு உள்ளது. இந்த வீடியோ வெளியான பிறகு, இணையதளங்களில் பலரும் சூரியின் எளிமை மற்றும் அவர் மக்கள் மீது கொண்ட பாசம் குறித்து பாராட்டி வருகின்றனர். இணையத்தில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த வீடியோக்கு பின்னால், சூரியின் தற்போதைய திரை பயணம் கூட கவனிக்க வேண்டியது தான். காரணம் நகைச்சுவையை தாண்டி, கதையின் முக்கிய பாகங்களை சுமக்கும் நடிகராக வளர்ந்து வரும் அவர், தற்போது பல முக்கிய இயக்குநர்களிடமும் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படி இருக்க பிரபலம் ஆன பிறகும், அடிப்படை மரியாதை செய்தே முன்னேற வேண்டியதற்கான உன்னதமான உதாரணம் தான் நடிகர் சூரி.
மக்களோடு கலந்து மக்களாய் வாழும் அவரது மனப்பான்மை, நம் திரையுலகத்துக்கும், சமூகத்துக்கும் ஒரு வலிமையான சான்றாக அமைந்துள்ளது. இந்த வீடியோவின் மூலம், திரைவெளிக்குள் மட்டுமல்ல, உண்மை வாழ்க்கையிலும் நட்சத்திரமாக இருப்பது எப்படி என்பதை சூரி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகை அனுஷ்கா ஷெட்டியின் 50-வது படமான ‘காதி’..! டிரெய்லர் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!