அமலா பால் மகனுக்கு கோலாகலமாக நடைபெற்ற கிறித்தவ சடங்கு விழா..!
அமலா பால் மகனுக்கு நடைபெற்ற கிறித்தவ சடங்கு விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்னாகுள நகரத்தில் பிறந்த நடிகை அமலா பால் கிறிஸ்துவ மதத்தினை சார்ந்தவர். அமலா பால் கல்லூரியில் படிக்கும் பொழுதே படத்தில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டதால் படவாய்ப்புக்காக பல இடங்களில் அலைந்து திரிந்தார். பின் கேரளாவில் உள்ள மாடலிங் துறையில் பணியாற்றிய அமலா பாலுக்கு 2009-ம் ஆண்டு "நீலதம்ரா" என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக பின் தமிழில் நடிக்க களமிறங்கினார்.
தமிழில் ஆரம்பத்தில் வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கான சில ரசிகர்களை உருவாக்கினார். இதனை அடுத்து "மைனா" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய தமிழ் திரையுலகில் தனக்கான ரசிகர்களை பெற்றார். மேலும் நடிகர் விஜயுடன் இவர் நடித்த தலைவா, விக்ரமின் தெய்வத்திருமகள், ஆர்யாவின் சேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அபார திறமையை காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கோலிவுட்டின் அடுத்த அனுஷ்கா! அழகில் சொக்க வைக்கும் நடிகை கீதிகா திவாரி!
இப்படிப்பட்ட அமலா பால், கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் உள்ளார். இப்படி இருக்க, மைனா, சிந்து சமவெளி, வீரசேகரன், தெய்வத்திருமகள், விகடகவி, வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா,
நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி, கடவர், விக்டிம், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த சூழலில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமலா பால் தனது கணவரை குறித்து பேசினார். அதில் "முதன் முதலில் அவரும் அவரது கணவரும் கோவாவில் தான் சந்தித்ததாகவும். அவருக்கு தென்னிந்திய படங்கள் பார்க்கும் பழக்கக்கம் சுத்தமாகவே இல்லாததால் தான் ஒரு நடிகை என்பதே அவருக்கு தெரியாது. ஒரு தொலைகாட்சியில் தன்னை பார்த்த பின் தான் நான் நடிகை என்பதே அவருக்கு தெரிந்தது. அதன் பின் தன் படங்கள் அனைத்தையும் அவர் பார்த்து வியந்ததாக தெரிவித்திருந்தார்.
இப்படி இருக்கையில், ஜகத் தேசாய் மற்றும் அமலா பால் தம்பதிக்கு அழகிய ஆண்குழந்தை இருக்கும் நிலையில், தற்போது மகனுக்கு கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் செய்த போட்டோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அமலா பால். இந்த அழகிய போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'டிடி நெக்ஸ்ட் லெவலை' பின்னுக்கு தள்ளிய 'மாமன்'..! வசூலை அள்ளிய செண்டிமெண்ட் படம்..!