'டிடி நெக்ஸ்ட் லெவலை' பின்னுக்கு தள்ளிய 'மாமன்'..! வசூலை அள்ளிய செண்டிமெண்ட் படம்..!
சந்தானத்தின் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது நடிகர் சூரியின் திரைப்படம்.
அனைவரும் எதிர்பார்த்தபடி பல சிக்கல்களை தாண்டி மே 16ம் தேதி மூன்று வெளியாக இருந்த படங்கள் ரிலீஸ் ஆகின. அதன்படி, நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்', நடிகர் யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' மற்றும் நடிகர் சூரியின் 'மாமன்' திரைப்படம் ரிலீஸ் ஆனது. இவர்கள் மூவரும் திரையுலகில் மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். இப்பொழுது இவர்கள் படத்தைக் குறித்து பேசும்பொழுது 'காமெடி 2 ஹீரோ' என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் எழுத்தில் உருவாகி இருக்கும் பாசம் கலந்த திரைப்படம் தான் இந்த 'மாமன்' திரைப்படம். இந்தப் படம் தற்பொழுது வெளியாகி அனைத்து திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படி இருக்க, இப்படம் எதைக் குறிக்கிறது என்று பார்த்தால் தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவைக் குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படத்தை எழுதியிருக்கிறார் நடிகர் சூரி. சூரியின் எழுத்தில் வெளியாகியுள்ள இந்த 'மாமன்' படத்தை பார்த்து தியேட்டரில் அனைவரும் கண்கலங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை உள்ளது.
இதையும் படிங்க: மண்சோறு சாப்பிட்டா படம் ஓடுமா..? விளாசிய சூரி.. பாராட்டிய வைரமுத்து...!
மறுபக்கம் நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் நகைச்சுவையாகவும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் உள்ளது.
இந்த நிலையில் ஒரு புறம் நடிகர் சூரி சென்டிமெண்டால் அழவைத்து வருகிறார். மறுபக்கம் நடிகர் சந்தானம் தனது அட்டகாசமான காமெடியால் சிரிக்க வைத்து வருகிறார். இப்படி இருக்க இரண்டு படமுமே சிரிக்கவும், சிந்திக்கவும், அழவும் வைத்துள்ளது என மக்கள் சொல்லி சென்றாலும், நான்கு நாட்கள் திரை ஓட்டத்தில் வசூலில் எந்த படம் அதிகமாக எடுத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அந்த வகையில், சந்தானத்தின் ' டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.10 கோடி வசூலித்துள்ளது. அதுவே நடிகர் சூரியின் 'மாமன்' படம் ரூ.12கோடி வசூல் செய்து உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் சந்தானத்தை விட சூரியின் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது என தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினியின் அண்ணாத்தையா.. SK-வின் நம்ம வீட்டு பிள்ளையா.. சூரியின் 'மாமன்' படத்தை பார்த்து குழப்பத்தில் ரசிகர்கள்..!