×
 

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரரான நடிகர் விக்ரம்..! விலையை கேட்டால் தலையே சுத்துது..!

நடிகர் விக்ரமின் புதிய காரின் விலை அனைவரது வாயையும் பிளக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர பாத்துருக்கேன், சிவாஜியை பாத்துருக்கேன் ஆனா உன்னமாதிரி ஒரு நடிகரை நான் பார்த்தே இல்லை என பிரகாஷ் ராஜ் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமே சொல்லும் நடிப்பு அரக்கன் என்றால் அது நடிகர் விக்ரம் தான். இவரது நடிப்பு, சிரிக்கவும் வைக்கும், அழ வைக்கும், வியக்க வைக்கும், பாசத்தை பொழிய வைக்கும் அந்த அளவிற்கு நடிப்பில் உலக ரசிகர்களை தன் கைகளில் வைத்திருக்கும் விக்ரம் நடித்த படங்கள் என்றாலே மக்கள் பார்க்க ஆவலாக செல்வர். இவரது நடிப்பு இன்றும் பலராலும் பேசப்பட்ட படம் என்றால் அந்நியன், தெய்வத்திருமகள் இந்த இரண்டு படங்களிலும் இவரது ட்ரான்ஸ்வர்மேஷன் அல்ட்டிமேட்டாக இருக்கும்.

அப்படிப்பட்ட விக்ரம், சினிமாவில் கடந்து வந்த பாதைகளை சற்று திரும்பி பார்த்தால், 1990ம் ஆண்டு "மீரா" என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக ஓடவில்லை என்றாலும் விக்ரம் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடித்து வந்தார். அதன் பின், 1999ம் ஆண்டு "சேது" என்ற படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் அவருக்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது. இதனை தொடர்ந்து, 2001ம் ஆண்டு "தில்" திரைப்படம் வெளியாகி 100கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது. பின் மூன்றாவதாக விக்ரம் நடிப்பில்  2002ம் ஆண்டு வெளியான "ஜெமினி" பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.  

இதையும் படிங்க: 'மாமன்' பட வெற்றியால் துள்ளிக் குதிக்கும் சூரி.. எமோஷனலாகப் பதிவிட்டு உருக்கம்.!!

அதன் பின் 2005ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான 'அந்நியன்' திரைப்படத்தில் நடித்த விக்ரமின் கேரக்டர் மக்களுக்கு பிடித்து போக அப்படம் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து, அப்படத்தில் நடித்ததற்காக, பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் விக்ரம். இதுவரை, என் காதல் கண்மணி, தந்து விட்டேன் என்னை, மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள், ஹவுஸ் புல், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, சாமுராய், கிங், சாமி, காதல் சடுகுடு, பிதாமகன், தூள், அருள், மஜா, பீமா, கந்தசாமி, மதராசப்பட்டினம், ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, மெரினா, தாண்டவம், டேவிட், 10 என்றதுக்குள்ள, ஐ, இரு முகன், சாமி 2, ஸ்கெட்ச், கடாரம் கொண்டான், சூரியபுத்ர மகாவீர் கர்ணா, மகான், பொன்னியின் செல்வன் (PS 1), கோப்ரா, பொன்னியின் செல்வன் 2, தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

இப்படி இருக்க, சமீபத்தில் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோருடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் 'காளி' என்ற பெயரில் விக்ரம் நடித்து பல இடர்பாடுகளை கடந்து வெளியான படம் தான் "வீர தீர சூரன்". இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விக்ரம் "புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் Spectre" என்கிற புதிய மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த சொகுசு காரின் விலை மட்டும் ரூ.8 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகர் விக்ரம் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் இதுதான் என அவரது ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதையும் படிங்க: சேலையை முறுக்கி... கிளாமரை கூட்டிய அதுல்யா ரவி! அடிபொலி போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share