×
 

'கேம் சேஞ்சர்' படத்திற்காக என்னை வச்சி செய்தார் இயக்குநர் சங்கர்..! படத்தொகுப்பாளர் கதறல்..!

என் வாழ்க்கையில் நான் கடந்த மோசமான அனுபவம் 'கேம் சேஞ்சர்' படத்தில் வேலை செய்தது தான் என படத்தொகுப்பாளர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் அதிக பட்ஜெட்டை வைத்து படம் எடுப்பவர் என இயக்குனர் சங்கருக்கு பெயர் வர காரணம் ஒவ்வொரு படத்திலும் அவர் வைக்கும் பிரமாண்டமே. அந்த வகையில், அர்ஜுனின் 'முதல்வன்' திரைப்படத்தில் "முதல்வனே முதல்வனே "பாடலில் பாம்புகளுக்கு மணிவண்ணன், வடிவேலு போன்றவர்களை அனிமேஷன் ஆக வைத்திருப்பார், அடுத்ததாக 'அந்நியன்' திரைப்படத்தில் "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடலில் கண்ணாடி மாளிகையிலேயே செட்டை அமைத்து பிரம்மாண்டப்படுத்தியிருப்பார். அதேபோல் நண்பன் படத்திலும், சிவாஜி படத்திலும், எந்திரன் படத்திலும் பிரம்மாண்டங்களுக்கு பஞ்சமே இல்லாத வகையில் அசத்தி இருப்பார்.

இப்படி இவருடன் உதவி இயக்குனராக இருந்து தொழிலை கற்றுக்கொண்ட இயக்குநர் அட்லீ பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் தடம் பதித்து அவரது சிஷியன் என்பதை நிரூபித்து வருகிறார். ஆனால் சங்கர் மட்டும் சற்று சரிந்து வருகிறார். இதுவரை சினிமாவில் வெற்றிகளை மட்டுமே கண்ட சங்கர், இப்பொழுது எல்லாம் தோல்விகளை சந்தித்து வருவதால் சோகத்தில் இருக்கிறார். சமீபகாலமாக சங்கரின் மீது யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, அவரது அடுத்தடுத்த படங்கள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. அவருடைய சொத்துக்களும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டு உள்ளது. அதிலும் சங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கும் பொழுது கிரேன் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரது  கோபத்தை கொட்டி தீர்க்க வைத்தது. இப்படி பல சம்பவங்களை அவர் வாழ்க்கையில் சந்தித்து வருகிறார். 

இதையும் படிங்க: அதிக சம்பளம் கேட்ட நயன்தாரா..! ஆடவிட்டு அடித்த இயக்குநர்.. சரண்டராகி நிற்கும் EX லேடி சூப்பர் ஸ்டார்..!

மேலும், ஜூலை 12ம் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. காரணம் இப்படத்தில் கமல்ஹாசன் நீண்ட நேரம் பேசுவதாகவும், படத்திற்கும், கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும், நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என  படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. சரி விட்டதை பிடிக்கலாம் என தெலுங்கு நடிகர் ராம் சரணை கதாநாயகான வைத்து 'கேம் சேஞ்சர்' என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் அந்த படமும் சொல்லி கொள்ளும் அளவிற்கு பெரியதாக ஓடவில்லை என்பதால் தற்பொழுது சோகத்தின் உச்சிக்கே சென்றுள்ளார் சங்கர். 

இந்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படத்தில் பணிபுரிந்த படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் படத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், " கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நேரமளவு முதலில் 7.5 மணி நேரமாக இருந்தது. இதுவே எனக்கு ஷாக்காக இருந்தது. ஆனால் அதை என்னிடம் கொடுத்த ஷங்கர் சார், அதனை ஒரு திரைப்படத்திற்கான அளவிற்கு கட் செய்து தர சொன்னார். நினைத்து பாருங்கள்  7.5 மணி நேரம் படத்தை கட் செய்வது மிகவும் கடினமான காரியம்.

ஆனால் நான் அதை 3 மணி நேரத்திற்கு கட் செய்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து அதில் வேலை செய்யவே முடியவில்ல. ஒரு கட்டத்தில அப்படத்தில் இருந்து நான் முற்றிலும் விலகினேன். அதனால் தான் அவருடன் வேலை பார்த்த அனுபவம் எனக்கு மிகவும் மோசமானதாக கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தளபதி படத்துடன் குட்டி தளபதி படம் மோதுகிறதா..? SK-வின் பராசக்தி பற்றி இயக்குனரின் அப்டேட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share