×
 

அதிக சம்பளம் கேட்ட நயன்தாரா..! ஆடவிட்டு அடித்த இயக்குநர்.. சரண்டராகி நிற்கும் EX லேடி சூப்பர் ஸ்டார்..!

சம்பள விஷயத்தில் கண்டிஷன் போட்ட நயன்தாராவையே சரண்டராக வைத்துள்ளார் இயக்குநர் ஒருவர்.

தமிழ் சினிமாவில் இன்று பலரது விமர்சனங்களை சரிசமமாக வாங்கி வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து தற்பொழுது பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். இப்படி பல படங்களை தன் கைகளில் வைத்திருக்கும் நயன்தாரா, வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்து வந்தவர். இவரை ஏளனமாக பேசியவர்கள் மத்தியில் இன்று சாதித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடனும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானுடனும் நடித்து தனக்கென ஒரு இடத்தை வகுத்தவர். இதனை அடுத்து, கோலமாவு கோகிலா, அறம் என இவர் கதாநாயகன் இல்லாமல் நடித்த படங்களும் ஹிட் கொடுத்துள்ளது. 

இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின் முதலில் திருமண ஆவணப்படம் வெளியாவதில் சிக்கல் வந்தது, அதன் பின் ஒருவழியாக ஆவணப்படத்தை வெளியிடலாம் என ட்ரெய்லரை ரிலீஸ் செய்தபோது தனுஷிடம் இருந்து 'காபி ரைட்ஸ்' சிக்கல் வந்தது. பின் நான் "லேடி சூப்பர் ஸ்டார்" இல்லை என்றார் உடனே ரசிகர்கள், நடிகர்கள் , நடிகைகள் என பலரிடமிருந்து பலரூபத்தில் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. பார்க்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடி வைப்பது போல், நயன்தாரா திருப்பும் இடம் எல்லாம் தற்பொழுது கன்னி வெடியை அவரே வைத்து தடுமாறி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் ராக்காயி, HI, மண்ணாங்கட்டி, dear students, முக்குத்தி அம்மன் 2 என பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் நடிகை நயன்தாரா. 

இதையும் படிங்க: நடிகை நயன்தாராவுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகர் சிரஞ்சீவி..! மகிழ்ச்சியில் இயக்குனர்..!

இப்படி இருக்க, தற்பொழுது அனில் ரவிபுடி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என நினைத்த தயாரிப்பாளர்கள், நயன்தாராவிடம் படம் குறித்து பேசியுள்ளனர். படத்தின் கதை பிடித்து போக, இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் நயன்தாரா. மேலும், இப்படத்தில் நடிக்க சம்பளமாக ரூ.18 கோடியை கேட்டு இருக்கிறார் நயன்தாரா. முதலில் இதுகுறித்து யோசித்த இயக்குனர் பின்பு சரி என ஒப்புக்கொண்டனர்.

இந்த சூழலில், முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாராவுடன் கேத்ரின் தெரசாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அப்போது அன்னபூர்ணா ஸ்டுடியோவில் கதாபாத்திரத்திற்கான போட்டோ ஷூட் நடைபெற்றது. அதில் நயன்தாரா மற்றும் சிரஞ்சீவி ஆகியோரின் கதாபாத்திர கெட்டப் எல்லோருக்கும் பிடித்துள்ளதாக தகவல் கிடைத்தது.  

இந்த நிலையில், எதற்காக நடிகை நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கேள்வி எழ, எப்படியாவது இந்த படத்தில் இருந்து நயன்தாராவை வெளியே அனுப்ப திட்டம் திட்டினர்.  இதனை எப்படியோ தெரிந்து கொண்ட நயன்தாரா, படத்தின் கதை நன்றாக உள்ளது கண்டிப்பாக இந்த படம் ஹிட் கொடுக்கும் இதிலிருந்து வெளியேற கூடாது என முடிவு செய்து இந்த படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்தார் நயன்தாரா. 

ரூ.18 கோடியில் இருந்து சரிந்து ரூ.6 கோடியை இப்படத்திற்கு சம்பளமாக பெற்று கொள்வதாக ஒப்புக்கொண்டார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா இவ்வளவு சம்பளம் குறைக்கும் அளவிற்கு அந்த படத்தில் ஏதோ ஸ்பெஷல் உள்ளது. அதனை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்து வருகின்றனர்.   

இதையும் படிங்க: ஒரே வார்த்தையில் தயாரிப்பாளரை காலி செய்த நயன்தாரா..! ஹீரோ மாஸ் தான் ஆனால் நயன் டபுள் மாஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share