×
 

'ராமாயணம்' படத்தில் ஊர்மிளாவாக களமிறங்கும் சுரபிதாஸ்..! படப்பிடிப்பு அனுபவித்தை பகிர்ந்து உற்சாகம்..!

நடிகை சுரபிதாஸ் 'ராமாயணம்' படத்தில் ஊர்மிளாவாக களமிறங்கும் அனுபவித்தை உற்சாகமாக பகிர்ந்துள்ளார்.

இந்திய திரைத்துறையில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் மிகுந்த பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்று தான் ‘ராமாயணம்’. இந்த படம் நம் பாரத பாரம்பரியக் காவியமான ராமாயணத்தின் திரைவடிவமாக பார்க்கப்டுகிறது. பல முறை சினிமாவில் இந்த கதையை படமாக்கியிருந்தாலும், இப்போது அதை மிகப்பெரிய அளவில், பிரம்மாண்ட தயாரிப்புடன், மிக முக்கிய நடிகர்கள் நடிப்புடன் உருவாக்குவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படம் ரன்பீர் கபூர், யாஷ், மற்றும் சாய் பல்லவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தால் உருவாகி வருகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தை நிதேஷ் திவாரி என்பவர் இயக்குகிறார். முன்னதாக, இவர் "தங்கல்" உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர். இப்படி இருக்க, இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த பிரமாண்டமான ராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படப்பிடிப்பு நடைபெறும் போது சில புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ராமனின் தம்பி லட்சுமணனின் மனைவியான ஊர்மிளா கதாபாத்திரத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 27 வயது நடிகை சுரபி தாஸ் நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, சுரபி தாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் உற்சாகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ராமாயணம் போன்ற ஒரு கலைத்தோட்டத்திற்குள் நான் ஒரு சிறு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. இந்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதும், உணர்வுப்பூர்வமானது. இது என்னுடைய கரியரில் மிக முக்கியமான படியாக இருக்கும். சாய் பல்லவியுடன் அதிக நேரம் செலவிட்டேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். மிக எளிமையானவர். ரன்பீர் கபூர் போன்ற பெரிய நடிகருடன் ஒரே படத்தில் நடித்தும், எனது முதல் அனுபவத்தில் கவனமுடன் செயல்படுவதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது" எனப் பகிர்ந்துள்ளார். சுரபி தாஸ், தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். குறிப்பாக, தெலுங்கில் ‘கிருஷ்ணா துலசி’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அதிகம் கவனம் பெற்றவர். அதன் பின்னர் ஹிந்தி சீரியல்கள் மற்றும் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடர்ந்தவர். தற்போது இந்த பாண் இந்திய பிரமாண்டப் பட வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் அதிகாரப்பூர்வமாக கால் பதிக்கிறார். இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும், தயாரிப்புப் பக்கம் நிகழும் வளர்ச்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சரியான கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவதால், இது வெறும் ஒரு படம் அல்ல, கலை மற்றும் பாரம்பரியத்தின் உச்ச நிலையை திரையில் காண்பிக்கக்கூடிய ஒரு முயற்சி எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: அழகாக ஆசைப்பட்டு உதடு வீங்கிய நிலையில் நடிகை...! தனது லிப் பில்லர் அனுபவத்தை பகிர்ந்த உர்பி ஜாவத்..!

படத்தில் விஷ்வாமித்திரர், ஹனுமான், சுக்ரீவா, கைகேய், மந்தரா, லவ-குசா, வாலி, கும்பகர்ணன் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களுக்கும் பிரபல நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ராமாயணத்தின் புதிய திரை வடிவம், பாரம்பரியத்தையும், புதுமையையும் ஒருங்கிணைக்கும் ஒரு வகையில் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுரபி தாஸ் கூறும் உருக்கமான அனுபவம் மற்றும் அவரது உணர்வுப்பூர்வமான கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. "என் குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் அனைவரும் இது போன்ற ஒரு வாய்ப்பை நான் பெற்றதை பார்த்து பெருமைப்படுகிறார்கள். என் பயணத்தில் இதுவொரு முக்கியமான கட்டமாகும். ஒவ்வொரு காட்சியையும் முழுமையுடன் உழைக்கிறேன்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு, பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரை உலகம் மற்றும் பாரம்பரிய புராணங்களை ஒருங்கிணைக்கும் இந்த ராமாயண திரைப்படம், இந்திய திரைத்துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும், சுரபி தாஸ் ஊர்மிளா கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது, புதிய முகங்களுக்கு திறந்த வாய்ப்பாக இருக்கிறது. இந்த படம் திரைக்கு வரும் வரை, ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக காத்திருக்கிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றிக்கான முதல் கட்ட அடித்தளமாக உள்ளது.

இதையும் படிங்க: சாய் அபயங்கர் மற்றும் சாம் சி. எஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்த விஜய் ஆண்டனி..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share