×
 

அழகாக ஆசைப்பட்டு உதடு வீங்கிய நிலையில் நடிகை...! தனது லிப் பில்லர் அனுபவத்தை பகிர்ந்த உர்பி ஜாவத்..!

நடிகை உர்பி ஜாவத் செயற்கை அழகுக்காக எடுத்துக்கொண்ட லிப் பில்லர் அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

பல்வேறு வித்தியாசமான ஆடைகளை அணிந்து, சமூக வலைதளங்களில் அசாதாரண புகழ் பெற்ற நடிகை மற்றும் மாடல் தான் உர்பி ஜாவத். இவர் பீசா, வாழைப்பழத்தோல், பூவிதழ்கள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர். அவரது நட்பு வட்டாரத்திலும், திரைப்பட உலகிலும் ரசிகர் மத்தியிலும் ஒரு தனி அடையாளம் பெற்றவர். இப்படிப்பட்டவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர் உதடுகள் வீங்கி, கன்னம் பெரிதாகி, இயற்கையான முக அலங்காரத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல, சமூக ஊடக பயனாளர்கள் பலரும் அதிர்ச்சியுடன் தனது விமர்சனங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகினறனர்.

வெறும் புகைப்படம் மட்டுமல்லாமல், போட்டோஷூட்டுகளில் இருந்து, சினிமா விழாக்கள் வரை நடிகை உர்பியின் வித்தியாசமான அணிகலன்கள், ஆடைகள் மற்றும் முகபாவனைகள் அனைத்துமே அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தது. சில திரைப்படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ள இவரது பெரும்பாலான புகழ் அனைத்தும் சமூக வலைதளங்களிலிருந்து உருவானது தான். இந்த நிலையில், இப்போது உர்பி ஜாவத் தனது வீடியோவில், லிப் பில்லர் அனுபவத்தை பகிர்ந்து, இது தொடர்பான உண்மைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த வீடியோவில் அவர், "நான் 18 வயதில் மும்பைக்கு வந்தபோது, மாடலிங் துறையில் பிரபலமாகவும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் லிப் பில்லர் செய்து கொண்டேன். ஆனால் அது எனது வாழ்க்கையில் ஒரு தவறான முடிவாகவும், கஷ்டத்துக்குள்ளாக்கிய ஒன்றாகவும் மாறிவிட்டது" என கூறினார்.

அதனை தொடர்ந்து, கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து, தற்போது அந்த செயற்கை பில்லரை நீக்கிவிடும் முடிவை எடுத்துள்ளார். இதற்காக, மருத்துவமனைக்குச் சென்று உதட்டில் ஊசி போடப்பட்ட சிகிச்சையை மேற்கொண்டு, தனது உதடுகளில் உள்ள பில்லரை அகற்றியுள்ளார். இந்த சிகிச்சையின் முழு வீடியோவை உர்பி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் வீடியோவில், அவர் மிகவும் வலியுடன், சிகிச்சை பெற்றது தெளிவாக தெரிகிறது. வீங்கிய உதடுகள், பெரிதாகிய கன்னம் போன்றவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உர்பி, "இவ்வாறு பக்கவிளைவுகள் ஏற்படுவது இயல்பு. நான் சிறு வயதில் உணர்ச்சி பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்த நிலைக்கு வந்தேன். இயற்கை அழகு என்பதே முக்கியமானது என்பதை இன்று உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "லிப் பில்லர் தவறானது என்று சொல்லவில்லை. ஆனால், அந்த சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவர் நிபுணரானவராக இருக்க வேண்டும். இல்லையெனில், அதன் பின் விளைவுகள் ஆபத்தானதாக முடியும். எனது சொந்த அனுபவம் இதற்கு சான்று" என்றும் கூறியுள்ளார். உர்பியின் இந்த சிகிச்சை மற்றும் வீடியோவின் பின்னணியில், பலரும் தனது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் அவரது தன்னம்பிக்கையையும், திறந்த வெளிப்பாடையும் பாராட்டினர்.

இதையும் படிங்க: சாய் அபயங்கர் மற்றும் சாம் சி. எஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்த விஜய் ஆண்டனி..! 

சிலர் விமர்சனங்களையும் எழுப்பினர். சமூக வலைதளங்களில் பலர், "இயற்கையை விட்டு செயற்கைக்கு செல்வது அழகு அல்ல" என்னும் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். சமீப காலமாக பல நடிகைகள், பிளாஸ்டிக் சர்ஜரி, பில்லர் சிகிச்சை, போட்டாக்ஸ், ஸ்கின் ட்ரீட்மென்ட் போன்ற செயற்கை அழகு முறைகளை முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக ராஷி கன்னா, ரைகா, பூஜா ஹெக்டே, மற்றும் நாயன்தாரா உள்ளிட்ட பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அதேபோல, நடிகை ரைசா வில்சனும், சில மாதங்களுக்கு முன்பு, லிப் பில்லர் சிகிச்சையின் பின் வீங்கிய உதடுகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு, அதற்கான விளக்கங்களை அளித்திருந்தார். இதுபோன்ற சிகிச்சைகள் செய்துகொள்ளும் போது, முழுமையான மருத்துவ ஆலோசனை, அனுபவம் மற்றும் பாதுகாப்பான சூழ்நிலைகளே முக்கியம் என்பதை உர்பியின் அனுபவம் மீண்டும் ஒரு முறை உணர்த்துகிறது. தனது பிரம்மாண்ட புகழின் பின்னணியில், உர்பி தனது மனநிலையையும், உடல் அனுபவத்தையும் வெளிப்படையாக பகிர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தின் மூலம், சமூக வலைதளங்களில் ஒரு முக்கியமான விவாதம் எழுந்துள்ளது. "செயற்கை அழகு தேவையா? இல்லையா?" என்பது தொடர்பான விவாதம் தான் மீண்டும் எழுந்துள்ளது. இன்றைய சமூகத்தில் அழகு குறித்த மாறுபட்ட கருத்துக்களும், அழகைப் பற்றிய சமூக அழுத்தங்களும், பெண்கள் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகளும் ஒரு சிக்கலான சூழலை உருவாக்கி வருகின்றன. இந்த சூழலில், உர்பி தனது அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து, இயற்கையை தேடி பயணம் செய்யும் அவருடைய முடிவும், மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் திரையில் 'கேப்டன் பிரபாகரன்' ரீ-ரிலீஸ்..! விஜயகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share