ஒரே நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளமா...! சினிமா உலகையே அதிர வைத்த 'நயன்தாராவின்' விவரம்..!
நயன்தாராவின் சம்பள விவரம் தற்பொழுது சினிமா உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா, இவர் தனது நடிப்பு திறமை, அழகு, தனித்துவமான ரசிகர் பட்டாளம் மற்றும் மார்க்கெட்டிங் திறமையால், தற்பொழுது ஹீரோக்களுக்கு நிகராகவே இல்லாமல், அவர்களை விட அதிகமாகவே சம்பளம் வாங்கும் நிலைக்குத் தன்னை உயர்த்தியுள்ளார். சொல்லப்போனால் கடந்த 2005-ம் ஆண்டு, 'ஐய்யா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த நயன்தாரா, ஆரம்பத்திலேயே ரசிகர்களை ஈர்க்கும் அழகு, ஸ்கிரீன் பிரெசன்ஸ் மற்றும் தனது பங்களிப்புகள் மூலம் சிறிது காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் பில்லா, யாரடி நீ மோகினி, ராஜா ராணி, மாயா, நானும் ரௌடி தான் போன்ற பல வெற்றிப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
அதன் மூலம், நடிகைகளும் கதையின் மையமாக அமையலாம், அவர்களுக்கும் தனிச்சிறப்பான மார்க்கெட் இருக்கிறது என்ற புரிதலை தமிழ்த் திரைப்பட உலகில் ஏற்படுத்தினார். அதனுடைய தொடர்ச்சியாக இன்று ஒரு திரைப்படத்திற்காக ரூ.10 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. தற்போது நயன்தாரா, நடிகை, விளம்பரதாரி, தயாரிப்பாளர் என பலவிதமான வியாபார உத்திகளை கையாண்டு வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.200 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமா, அவருக்கென தனி ஜெட் விமானம் கூட வைத்திருகிறார், அதன் விலை மட்டும் ரூ.50 கோடிகள் இருக்குமாம். இதனாலேயே நயன்தாரா இந்திய சினிமாவில் மிக உயர்ந்த வருமானம் பெறும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
மேலும், திரைப்படங்கள் மட்டுமன்றி, விளம்பரங்கள் மூலமாகவும் நயன்தாராவிற்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது. சுகாதாரப் பொருட்கள், ஜூவல்லரி, மொபைல் நெட்வொர்க், OTT போன்ற பிளாட்ஃபார்ம்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் நயன்தாராவுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நயன்தாராவைப் போலவே தென்னிந்திய சினிமாவில் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் பங்களிப்பும், மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், இப்போது இணையத்தில் பரவி வரும் புதிய தகவலின் படி, நயன்தாரா ஒரு விளம்பரத்திற்காக ஒரே நொடிக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக வெளியான செய்தி திரையுலகத்தையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது சாதாரண விளம்பர ஒப்பந்தம் அல்ல. டாடா ஸ்கை நிறுவனத்துக்காக நயன்தாரா நடித்துள்ள இந்த விளம்பரம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரச்சனையா.. எங்களுக்கா.. நெவர்..!! தனது ஸ்டைலில் 'நச்' பதில் கொடுத்த நயன்தாரா..!
இந்த 50 வினாடிகள் கொண்ட விளம்பரத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நயன்தாரா பெற்றதாகக் கூறப்படும் மொத்த சம்பளம் ரூ.5 கோடி. இதன் அடிப்படையில் பார்த்தல் நடிகை நயன்தாரா ஒரு நொடியுக்கு ரூபாய் 10 லட்சம் பெற்று இருக்கிறார் என்பது கணக்கு. இது திரைத்துறையில் ஒரு புதிய வரலாறு எனக் கூட கூறலாம். இதற்கு முன் இவ்வளவு அதிகமான சம்பள விளம்பரத்தில் நடிகைகள் நடித்ததாகயாரும் கூறியதே இல்லை. குறிப்பாக நடிகை நயன்தாரா மார்க்கெட்டில் எப்படிப்பட்ட வலிமையான இடத்தை பிடித்திருக்கிறார் என்பதை இந்த சம்பள விவரம் காட்டுகிறது. ஒரு நொடிக்கு 10 லட்சம் சம்பளம் என்பது ஒரு சாதனை மட்டுமல்ல, இந்திய திரையுலகில் பெண்களின் சக்தியை, பங்கு மற்றும் பங்களிப்பை எடுத்துச் சொல்வதற்கான ஒரு புதிய கட்டமாகும். நயன்தாரா, தனது கடின உழைப்பு, மாறாத பொறுப்பு உணர்வு, ரசிகர்களிடம் கொண்ட உறவு மற்றும் தொழில்முறை உறுதிமொழி மூலம் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். இனி வரும் காலங்களில், மற்ற நடிகைகளுக்கும் இது முன்னுதாரணமாகவும், மார்க்கெட் ரேஞ்சைப் புதிதாக நிர்ணயிக்கவும் உதவும்.
திரைத்துறையில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சமமாக வளர்ந்து வருகின்றனர் என்பதற்கான உதாரணமாக நயன்தாரா விளங்குகிறார்.
இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை விட்டு பிரியும் நயன்தாரா..! ஒரே பார்ட்டியில் தெளிவுப்படுத்திய தம்பதி..!