×
 

பிரச்சனையா.. எங்களுக்கா.. நெவர்..!! தனது ஸ்டைலில் 'நச்' பதில் கொடுத்த நயன்தாரா..!

கணவருடன் கருத்து வேறுபாடு என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.

இந்திய திரையுலகில் சினிமா ஜோடிகளின் வாழ்க்கை குறித்து பேசாதவர்கள் யாரும் இல்லை. அதிலும் வசமாக சிக்கியவர் தான் பிரபல நடிகை நயன்தாரா. இவர் எப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தாரோ அன்றிலிருந்து இன்று வரை எதாவது ஒரு பிரச்சையில் சிக்கிக்கொண்டு தான் வருகிறார். ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் இருவரும் தங்களது உயிர் மற்றும் உலகுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழித்து வருகின்றனர். 

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்தாலும், மறுபக்கம் பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைகட்டிக்கொண்டு தான் வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், சில பிரச்சனைகளையும் சந்தித்து தான் வருகின்றனர். ஏற்கனவே இவர்களது திருமண ஆவணப்படத்தின் மீது நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தற்பொழுது சந்திரமுகி படக்குழுவினரும் ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல் தங்களது படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.   

இதையும் படிங்க: நயன்-க்கு வந்த அடுத்த தலைவலி.. ஆவணப்பட வழக்கில் மேலும் ஒரு சிக்கல்..!

இந்த சூழலில் இந்த தம்பதிக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அந்த செய்திகளில் உண்மையில்லை என பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முக்கியமாக, சமூகவலைதளத்தில் பரவியிருந்த ஒரு போலியான இன்ஸ்டாகிராம் பதிவு தான் இந்த வதந்திக்கே தற்போது காரணமாகியுள்ளது. சமீபத்தில் "குறைவான அறிவுடைய ஒருவரை திருமணம் செய்தால், அது ஒரு தவறாக மாறும். கணவரின் செயல்களுக்கு பொறுப்பேற்க முடியாது. என்னை விட்டுவிடுங்கள்" என்ற வார்த்தைகள் கொண்ட ஒரு பதிவு, நயன்தாரா இணையதள பக்கத்திலிருந்து வெளியாகி டெலீட் செய்யப்பட்டது. 

இதை பார்த்த நெட்டிசன்கள்,  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவிட்டது சீக்கிரம் பிரிந்து விடுவார்கள் என பரபரப்பை கிளப்பினர். இந்த பதிவை உடனே நயன்தாரா நீக்கிவிட்டதாகவும், உண்மையில் இந்த பதிவு அவர் பதிவிட வில்லை எனவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார். அதாவது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "எங்களை பற்றி வரும் வதந்திகளுக்கு ரியாக்ஷன் இதுதான்" என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். இதன் மூலம், இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை நயன்தாரா உறுதிபடுத்தியிருக்கிறார். இதனைப்பார்த்த நயன்தாரா ரசிகர்கள் இருவரும் இப்படியே மகிழ்ச்சியாக இருந்தால் சார் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க: ஜெ. கையில் கலைமாமணி விருது.. நடிகர் பாண்டியராஜனின் பாட்டி மறைவு.. திரைப் பிரபலங்கள் இரங்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share