×
 

"ஜன நாயகன்" படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நரேன்..! ஹைப்பை தூண்டும் அதிரடி அப்டேட்..!

ஜன நாயகன் படத்தில் ஹைப்பை தூண்டும் வகையில் விஞ்ஞானி வேடத்தில் நரேன் நடித்துள்ளாராம். 

மலையாள சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ள நடிகர் நரேன். இவர் கடந்த 2024-ம் ஆண்டு "மனோரதங்கள்" என்ற மலையாளத் தொடரின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர். சீரியல் உலகில் மட்டும் அல்லாமல், திரை உலகிலும் நரேன் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி வரும் பல்வேறு திரைப்படங்களில் தற்போது நரேன் பிசியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அவர் நடித்த புதிய தமிழ் திரைப்படமான "ஜன நாயகன்" மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி இருகின்ற படம். இந்தப் படம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஒரு அரசியல் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாகும். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், பல பிரபல நடிகர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இப்படி இருக்க சமீபத்தில் நடைபெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில், நடிகர் நரேன் தனது "ஜன நாயகன்" பட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் பேசுகையில், "நான் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன். இது கெஸ்ட் ரோல் என்றாலும், படத்தின் திரைக்கதையில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக என் வருகை இருக்கும். எனது பகுதிக்கான படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. இது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது" என தெரிவித்தார். இப்படியாக தனது வேடம் குறுகிய அளவிலேயே இருந்தாலும், அது படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கவுள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் "ஜன நாயகன்" படத்தில் பல்வேறு பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். அதில் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்த நட்சத்திரப் பட்டாளம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இருமடங்காக உயர்த்தியுள்ளது. பாபி தியோல் இந்த படத்தில் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படி அனைவரது வரவேற்பை பெற்ற "ஜன நாயகன்" திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: நடிகை ஊர்வசி ரவுதேலாவின் ரூ.70 லட்சம் நகை அபேஸ்..! விமான நிலையத்தில் திருடுபோன சூட்கேஸால் பரபரப்பு..!

விஜய் ரசிகர்கள் மற்றும் பொது ரசிகர்கள் இதை அதிரடி அரசியல் திரைப்படம் என சொல்லி காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, எச். வினோத் மற்றும் விஜய் கூட்டணியின் முதல் படம் என்பதுவும் கூட. ஏற்கனவே ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற அரசியல் கலந்த படங்களில் விஜய் நடித்துள்ளதாலும், இந்த புதிய கூட்டணியில் என்ன வித்தியாசம் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். முன்னதாக, நரேன் பல முக்கியமான மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். "அஞ்சாதே", "சிகரம் தாண்டா", "குருதி", "படையோடா நிலம்", "துருவம்" போன்ற படங்களில் அவரது நடிப்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றுள்ளது. எனவே "ஜன நாயகன்" மூலம் ஒரு முக்கிய கேமியோ ரோல் வாயிலாக மீண்டும் பெரிய திரையில் காட்சியளிக்கவிருக்கும் அவர், இது போன்ற சுட்டித் தனமான வேடங்களை தவிர்த்துக் கொண்டு, கதையின் முக்கியமான புள்ளியில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பங்களிக்க விரும்புவதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நரேனின் விஞ்ஞானி வேடம், படம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் முக்கியமான திருப்பு முனையாக இருக்கும் என கூறப்படுகிறது.

கெஸ்ட் ரோலாக இருந்தாலும், அது கவனிக்கப்பட வேண்டிய ஒரு பங்கு என்பதால், நரேனின் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் அவரது வேடத்தை எதிர்நோக்கி உள்ளனர். ஆகவே விஜய்யின் அரசியல் படங்களில் இது மேலும் ஒரு புதிய முயற்சி என சொல்லப்படுகிறது. பொங்கல் ரிலீஸ் என்பதால், இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தேசிய விருது பெற்ற ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ எப்படிப்பட்ட வாழ்த்தை சொல்லி இருக்கார் பாருங்க...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share