×
 

பயத்துல ஏதாவது ஆச்சுன்னா கம்பெனி பொறுப்பல்ல..! பீதியை கிளப்பும் 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' ட்ரெய்லர்..!

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் அதிரடியாக வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் திகில் படங்களை ரசிக்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தி கான்ஜுரிங்' திரைப்படத் தொடரின் புதிய பாகமான 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்களால் அதிகம் காத்திருந்து வரவேற்கப்பட்ட இந்த டிரெய்லர் வெளியாகிய சில மணி நேரங்களில் சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. 2013-ம் ஆண்டு வெளியான 'தி கான்ஜுரிங்' திரைப்படம், அமெரிக்காவை சேர்ந்த பேய் வரலாற்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. உண்மை சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாலும், அழுத்தமான திகிலும், நுணுக்கமான திரைக்கதையாலும், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2016-ல் 'தி கான்ஜுரிங் 2' மற்றும் 2021ல் 'தி கான்ஜுரிங்: தி டெவில்மேட் மீ டூ இட்' ஆகிய பாகங்களும் வெளியாகி வசூலில் சாதனைகளையும் விமர்சன ரீதியாக வெற்றியை கண்டன.

இதையும் படிங்க: தெலுங்கு நடிகை கல்பிகா மனநலம் பாதிக்கப்பட்டவர்..! குடும்ப பாதுகாப்புக்காக தந்தையே போலீசில் புகார்..!

இந்த தொடரின் நான்காவது மற்றும் இறுதி பாகமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் மற்றும் பயமுறுத்தும் சம்பவங்கள் தற்போது படத்தின் மீதான ஆர்வத்தை கிளம்பியுள்ளன. முன்னொரு காலத்தின் மர்மமான விசாரணைகள், பேய்களுடன் போராடும் சாகசங்கள், மற்றும் உண்மையான அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த கதையம்சம் நகர்கிறது. இந்தப் படத்தில் முந்தைய பாகங்களில் நடித்த பிரபல கதாநாயகர்களான பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகா ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். அவர்கள் நடித்த எட்வார்ட் மற்றும் லோரேன் வாரன் என்ற பராமரிப்பு மற்றும் விசாரணை நிபுணர்கள் மீண்டும் அதே வேடங்களில் திரும்பி வருவது, ரசிகர்களுக்கிடையே பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.மேலும் 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' படத்தின் டிரெய்லர், இப்படம் எந்தளவுக்கான திகில் மற்றும் மன அழுத்தத்தைக் கொண்டுள்ளது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

டிரெய்லரில் இடம்பெற்ற ஒலி, ஒளி, பேய் காட்சிகள், மற்றும் கேமரா அசைவுகள் அனைத்தும் கொண்டுள்ள திகிலுடன் காணப்படுகின்றன. குறிப்பாக, பேய் தாக்குதல்களுடன் கூடிய சில நிமிடங்கள் ரசிகர்களை சீட்டில் அமர  வைத்துள்ளன. இந்த டிரெய்லர் வெளியாகிய சில மணி நேரங்களில் யூடியூபில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. "இது கான்ஜுரிங் தொடரின் முடிவாக இருப்பதால், இதற்கான எதிர்பார்ப்பு மற்றும் எதிரொலி இரண்டும் அதிகம்" என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இப்படி ஹைப்பை எகிற செய்த 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படம், உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான முன்னணி விநியோகஸ்தர்கள், IMAX மற்றும் 4DX போன்ற தொழில்நுட்பங்களில் திரைப்படம் வெளிவர இருப்பதாக அறிவித்துள்ளனர்.

👉🏻 The Conjuring: Last Rites | Official Tamil Trailer | Click Here | 👈🏻

தியேட்டர் அனுபவத்தை மிகச்சிறப்பாக மாற்றும் வகையில் தயாரிப்பு தரம் உயர்வாக அமைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தி கான்ஜுரிங்' திரைப்படங்கள் வெறும் திகிலுக்காக மட்டுமல்லாது, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், மனநல பராமரிப்பு, நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீகம் குறித்த சிந்தனையையும் முன்வைக்கின்றன. இதனால் இந்த தொடருக்கு தனி ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ படத்தைத் தொடர்ந்து இந்த தொடரின் முக்கிய கதையமைப்புகள் முடிவுக்கு வருவதாகவும், இது தொடரின் கடைசி பாகம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திகிலுக்கும் உண்மை சம்பவங்களுக்கும் இடையே ஒரு பாலமாக கான்ஜுரிங் தொடர் ரசிகர்களை இனைத்துள்ளது.

அதன் இறுதி பாகமான 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர், இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. திரையில் மீண்டும் லோரேன் மற்றும் எட்வார்டு வாரன்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இப்படம் 2025-ன் மிகப்பெரிய ஹாரர் திரைப்படமாக உருவாகும்.

இதையும் படிங்க: 2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்..! வெற்றியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share