×
 

‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!  ரசிகர்களை மிரளவைக்கும் வித்தியாச தோற்றத்தில் நடிகர் நானி...!

நடிகர் நானி நடித்த ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்துள்ளது.

2023-ம் ஆண்டு வெளியாகி, தெலுங்கு சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக வலம் வந்த ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அந்தப் படத்தின் இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் முன்னணி நடிகர் நானி மீண்டும் இணையவுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. ‘தசரா’ திரைப்படம், கிராமிய பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டு, வித்தியாசமான கதையம்சம், நானியின் தனித்துவமான நடிப்பு மற்றும் சக நடிகர்களின் சிறப்பான பங்களிப்பின் மூலம் பாராட்டைப் பெற்றது.

அதன் வெற்றியின் மூலம் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது முதல் படத்திலேயே பார்வையாளர்களை கவர்ந்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவரது இரண்டாவது படமாகவும் நானியின் 33-வது திரைப்படமாகவும் உருவாகி வரும் படம் தான் ‘தி பாரடைஸ்’. இப்படத்தையும், தசரா படத்தை தயாரித்த SLV சீனிமாஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நானி ‘ஜடல்’ என்ற தனித்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது தோற்றம், உடல்மொழி, குரல் மாறுதல் என அனைத்து அம்சங்களும் கதை சார்ந்த மாறுபட்ட அணுகு முறையை காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெளியாகியிருந்த க்ளிம்ப்ஸ் வீடியோயில், நானியின் மிரட்டும் தோற்றம், வலிமையான உடலமைப்பு மற்றும் உணர்ச்சி மிக்க கண்கள் என அனைத்தும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ சில நாட்களில் தான் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இந்த சூழலில் இப்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர்-ல், நானி ஒரு வித்தியாசமான இரட்டை ஜடை ஹேர் ஸ்டைலுடன், கொஞ்சம் கொதித்தும், அமைதியுடனும் நிறைந்த முகபாவனையுடன் காணப்படுகிறார்.

அவரின் பின்னணியில் பல்வேறு துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் தெரிகின்றன. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதன்படி, இவர் ஒரு போராளியா? கண்ணியமான கொடையாளியா? பதில் எல்லாம் படம் வெளிவரும் வரை ஆவலாக காத்திருக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஹிட் பாடல்களை வழங்கி வரும் அனிருத், இந்த படத்திலும் தமன்னதின் பரபரப்பை தூண்டும் பாட்டு மற்றும் உணர்வுகள் முழுமையாக மேலெழும் BGM வழங்கப்போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் இசை, நானியின் அட்டகாசமான நடிப்புடன் சேர்ந்து படம் முழுவதும் ஒரு சக்திவாய்ந்த அனுபவத்தை தரும் என ரசிகர்கள் நம்பிக்கை காட்டுகின்றனர்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா லட்சுமியுடன் சூரி இணைந்து ஆட்டம்..! திருவிழாவை அமர்களப்படுத்திய மாமன் பட ஜோடி..!

‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானிக்கு இணையாக, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, டாம் சாக்கோ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தசரா படத்தில் ஏற்கனவே நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி பாராட்டைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த படத்திலும் அவர்களது இணைப்பு திரைத் தொடர்ச்சியை உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலும் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஒரு பெரிய வசூல் சாதனையாக அமைவதற்கான அனைத்து அடிப்படை அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிய பிறகு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  தசரா படத்தின் நிச்சயமான வெற்றியைத் தொடர்ந்து, ‘தி பாரடைஸ்’ திரைப்படமும் அதைவிட பெரும் வரவேற்பைப் பெறும் வகையில் உருவாகி வருகிறது.

நானியின் வித்தியாசமான தோற்றமும், ஸ்ரீகாந்த் ஒடேலாவின் இயக்கமும், அனிருத் இசையும் என இந்த மூன்று சக்திகளை கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், 2026-இல் பாக்ஸ் ஆஃபிஸில் கண்டிப்பாக வெற்றி பெரும்.

இதையும் படிங்க: எனக்கு பிடிக்காத நடிகை லைலா தான்..! நடிகர் ஷாம் பேச்சால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share