×
 

நாளை திருவிழாவாக மாற போகும் திரையரங்குகள்..! "கூலி" படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

நாளை வெளியாக உள்ள கூலி படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ள 'கூலி' படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்தப் படம் எதிர்பார்ப்பை முற்றிலும் மீறி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பே, இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடையிலும் கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இப்படி இருக்க ரஜினிகாந்த் நடித்த கடைசி திரைப்படமான 'ஜெயிலர்' விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகுந்த முயற்சியுடன் உருவாகியுள்ள இந்தப் படம், பல பிரபலமான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பில் உருவாகியுள்ளது. கூலி படத்தில் ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் பல பிரபல நடிகர்களும் இணைந்துள்ளனர். இதில், அமீர் கான், சத்யராஜ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாஹிர், நடிகை ஸ்ருதிஹாசன், பஹத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது இந்திய சினிமாவின் பல்வேறு ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அனிருத் கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் படங்களில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். அவரது இசை ரசிகர்களிடையே ஏற்கனவே ஹிட்டான நிலையில், 'கூலி' படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, ‘கூலி கிங்’ என்ற பாடல் வெளியான சில மணி நேரங்களில் யூடியூபில் மில்லியன் பார்வைகளைத் தாண்டி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. படத்தின் வெற்றி விழாவுக்கு முன்பாகவே, தமிழக அரசு 'கூலி' படத்திற்கு சிறப்பான அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி, படம் வெளியாகும் நாளில், சினிமா திரையரங்குகளில் அதிகபட்சமாக ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்குத் தொடங்கி, இரவு 2 மணிக்கு முடிவடையும் வகையில் காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படம் நாளை வெளியாக இருக்கின்ற நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று 'கூலி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் பில்டப்புடன் தோன்றும் காட்சி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் இந்த போஸ்டரைக் கணக்கற்ற முறையில் பகிர்ந்து வருகிறார்கள். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் அவர் தனக்கென ஒரு ஸ்டைல் உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: "கூலி" திரைப்பட வெளியீட்டிற்கு தடை..! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

இந்தப் படமும் லோகேஷின் ‘LCU’ உலகத்தை விரிவுபடுத்தும் வகையில் உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தின் ஒளிப்பதிவு, சண்டை காட்சிகள், விறுவிறுப்பான பின்னணி இசை மற்றும் எடிட்டிங் என அனைத்தையும் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா, சண்டை இயக்குநர் அன்பரிவ், எடிட்டர் பில்டி ராஜா ஆகியோர் இணைந்து திரைப்படத்தின் தரத்தைக் பயங்கரமாகியுள்ளனர். முதல் நாளிலேயே பல கோடிகள் வசூலிக்கும் திறனுடைய படம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகி விட்டன. இத்தனை பிரமாண்டம் கொண்ட 'கூலி' திரைப்படம் நாளை திரைக்கு வரும் நிலையில், தமிழ்த் திரையுலகமே, இந்திய சினிமா ரசிகர்களே இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்றை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதன் அதிகார பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள், போஸ்டரே ஹைப்பை தூண்டும் வகையில் இருப்பதாக மகிழ்ச்சியில் உள்ளனர். 

இதையும் படிங்க: அதிசயம் ஆனால் உண்மை..! '1' மணி நேரத்தில் இவ்வளவு டிக்கெட் முன்பதிவா.. சாதனை படைத்த "கூலி" டீம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share