×
 

"திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்".. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..!

அமலாக்கத்துறை பிரச்சனையில் சிவகார்த்திகேயனை வைத்து பதிவிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

தமிழ் திரையுலகில் சினிமா வட்டாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது டான் பிக்சர்ஸின் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர், விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் ஆஜராகாததால் அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பு வட்டத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்.

தற்பொழுது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர். ஏனெனில் இவரது டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இவர்களது மூன்று பேரின் படங்களையும் தயாரித்து வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 ஆகிய மூன்று படங்களையும் இந்நிறுவனம் மட்டுமே தயாரித்து வருகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தரிசனம் பார்க்க ரெடியா..! மதராஸி பட அப்டேட் கொடுத்து அசரவைத்த படக்குழு..!

ஆதலால், நடிகர் சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 னின் படப்பிடிப்பு இப்பொழுதுதான் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்பதால் சிறிது அளவு பிரச்சனைகள் மட்டுமே, நடிகர் தனுஷின் 'இட்லி கடையும்' ஓரளவுக்கு முடிந்து வெளியாகும் நிலையில் உள்ளது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் படப்பிடிப்புகள் முடியாமல் நடைபெற்று வருவதால், தொடர்ந்து படப்பிடிப்புகள் நடக்குமா நடக்காதா? படம் வெளிவருமா? வராதா? என்ற சிக்கலில் உள்ளது. 

இப்படி இருக்க, படங்களுக்கு ரிவ்யூ கூறும் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ்தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனை குறித்து அவர் பதிவிட்டு இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அதன்படி ப்ளூ சட்டை மாறனின் பதிவில், "திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்" என்ற தலைப்பில் தொடங்கிய அவர் கீழாக, வணங்கான் படத்தில் நடிக்காமல்  தப்பினார் சூர்யா. அதில் அருண் விஜய் நடித்தார். படம் ஃப்ளாப். அடுத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதையான பராசக்தியில் கமிட் ஆனார் சூர்யா. பிறகு.. இதில் நடித்தால் மத்திய பாஜக அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தனது பான் இண்டியா ஹீரோ கனவும் புட்டுக்கும் என்பதால்... பராசக்தி வேண்டாம் என கழண்டு கொண்டார். இப்படி ஒரு கான்ட்ரவர்சி கதையில் நடித்தால் தமிழ்நாட்டு மக்களை கவரலாம்.‌ 

இப்போதைக்கு நமக்கு பான் இண்டியா கனவும் இல்லை. ஆகவே வடக்கே சர்ச்சை வந்தாலும் பரவாயில்லை. அது படத்தின் ப்ரமோசனுக்கு உதவும். படத்தை தயாரிப்பது dawn pictures. அதை ரிலீஸ் செய்வது ரெட் ஜெயண்ட். ஆகவே சிக்கல் இல்லை. அதுபோக நமது படம் ஜனநாயகனோடு மோதி வென்றால்‌‌ மறுநாளே விஜய்யின் இடத்தை பிடித்து விடலாம் என கணக்குகள் போட்டார் திடீர் தளபதி. ஆனால் தற்போதைய‌ ED ரெய்டுகள் இவரது கணக்குகளை கலகலக்க வைத்துள்ளன. கதைதான் கான்ட்ரவர்சி என்று பார்த்தால்.. படத்தை சுற்றி இப்படி ஒரு கான்ட்ரவர்சி வருமென எதிர்பார்த்திருக்க மாட்டார். 

திடீர் தளபதியின் படத்திற்கு வந்துள்ள திடீர் சிக்கல் எப்போது தீரும் என அவரது திடீர் ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.
 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு.. மலேசியாவில் அப்டேட் சொன்ன இயக்குநர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share