மீண்டும் திரையில் 'கேப்டன் பிரபாகரன்' ரீ-ரிலீஸ்..! விஜயகாந்த் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு..!
அடுத்த தலைமுறை பார்க்கும் வகையில் 'கேப்டன் பிரபாகரன்' மீண்டும் திரையில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், திரையிலும் அரசியலிலும் தனது தனித்துவத்தை நிரூபித்த ஒரே கலைஞர் என்றால் அவர்தான் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் தான். அவரை நினைவுகூரப்பட வேண்டிய ஒரு முக்கிய நாள் நெருங்கி வருகிறது. அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் 25-ம் தேதி கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள். அந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், விஜயகாந்தின் ரசிகர் பேரவைக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, விஜயகாந்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக விளங்கிய 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்திற்கு இன்றும் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆகவே, அந்த படத்தை நவீன 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முழுமையாக புதுப்பித்து, வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாம். இந்த மாபெரும் ரீ-ரிலீஸ், தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. சமீப காலத்தில், பழைய ஹிட் படங்களை புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வருவது ஒரு புதிய டிரெண்டாக உருவாகியுள்ளது. அந்த வரிசையில், விஜயகாந்தின் அடையாளப்படமாக விளங்கும் 'கேப்டன் பிரபாகரன்' திரும்பி வருவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில், 1991ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' படம், அன்றைய கால கட்டத்தில் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மாபெரும் வெற்றியாக பதிவு செய்யப்பட்டதுடன் விஜயகாந்த் பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக மாறியது. இப்படம் வெளியானதும், விஜயகாந்த் தமிழ் மக்களின் மனதில் "கேப்டன்" என்ற அற்புதமான பட்டத்தை நிலை நாட்டினார். அந்த பெயர் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது, அது வெறும் பெயரல்ல, அவரது பிரமிப்பூட்டும் நேர்மையும், தலைமைத் தன்மையும் பிரதிபலித்த ஒரு அடையாளமான பெயர் தான் கேப்டனாக மாறியது.
மேலும் இப்படத்தின் முக்கிய பாராட்டுதலுக்கு காரணம், இளையராஜாவின் இசை தான். ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு இவருடையது தான். இசைஞானி இளையராஜாவின் அதிரடியான பின்னணி இசையும், பாடல்களும். "ஆடும் பூவே", "போடாமலே போடாமலே", "ஒரே ஒரு ஊரில" போன்ற பாடல்கள் இன்னும் இளைய தலைமுறையின் கேட்கும் பட்டியலில் இடம் பிடித்து வருகின்றன. இப்படத்தில், விஜயகாந்த் உடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் என முன்னணி நடிகர்களும், முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்தனர். அதனால், 1990களின் கலையரங்கம், நடிப்பு, கதை மாந்தர்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரு முழுமையான திரைக்காவியமாகவே இந்தப் படம் பார்க்கப்பட்டது. இத்தனை சிறப்புகளை கொண்ட இப்படம் தற்போது 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முழுமையாக ரீமாஸ்டர் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் ‘விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பேன்’ என சவால்..! ரீ-என்ட்ரிக்கு 'நடிகை காஜல் அகர்வால்' செய்யும் வேலைய பாருங்க..!
அதாவது, ஒளிபடத் தரம், ஒலியமைப்புகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம், இன்றைய தலைமுறையினருக்கும் ஒரு புதுமையான திரை அனுபவமாக 'கேப்டன் பிரபாகரன்' வழங்கப்பட உள்ளது. விஜயகாந்தின் மறைவு, தமிழர்கள் மனதில் மிகப்பெரிய வேதனையையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அவர் ஒரே நேரத்தில் நடிப்பு, மனிதாபிமானம், அரசியல் ஆளுமை, தேசிய உணர்வு ஆகிய அனைத்திலும் தனித்துவமான உணர்வை வெளிக்காட்டியவர். அவரது ஒரு படத்தை, அதுவும் அவரது பெயரை உருவாக்கிய படத்தை, மீண்டும் பெரிய திரையில் காண்பது என்பது ரசிகர்களுக்கென்று ஒரு புதிய அனுபவம் என்றே கூறலாம். இந்த ரீ-ரிலீஸ் ஒன்றுக்காகவே தற்போது பல திரையரங்குகள் ஸ்பெஷல் ஷோக்கள், கேப்டன் ஃபேன்ஸ் ஃபோரம்கள், ஃப்ளெக்ஸ், காட்டௌட், மெகா ஸ்கிரீன் ஏற்பாடுகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றன.
அதுபோல், விஜயகாந்த் ரசிகர்கள் சங்கமும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, உணவளிப்பு நிகழ்ச்சிகள், அரிசி வழங்கும் சேவைகள்" போன்ற சமூக சேவைகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். 'கேப்டன் பிரபாகரன்' மீண்டும் திரைக்கு வருவது என்பது, வெறும் ஒரு ரீ-ரிலீஸ் அல்ல, அது ஒரு தலைமுறை அனுபவத்தை மற்றொரு தலைமுறைக்கு அழகாக பரிமாறும் ஓர் கலாச்சார நிகழ்வாகும்.
எனவே, ஆகஸ்ட் 22 அன்று திரையரங்குக்குச் சென்று உங்கள் 'கேப்டன்'ஐ மீண்டும் திரையில் பாருங்கள் இது ஒரு காலத்தைக் கண்டு ரசிக்க உண்டான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிரடியாக தீபாளிக்கு களமிறங்கும் ‘டியூட்’ படம்..! பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெளியான அப்டேட்..!