×
 

உலக புகழ்பெற்ற ''ஸ்பைடர் மேன்'' பட நடிகர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் சினிமா..!

உலக புகழ்பெற்ற ''ஸ்பைடர் மேன்'' பட நடிகர் ஜாக் பெட்ஸ் காலமானார்.

ஜெர்சி நகரில் பிறந்து வளர்ந்த ஜாக் பெட்ஸ், மிகவும் பிரபலமானவர். மியாமி பல்கலைக்கழகத்தில் முறையாக நாடகத் துறையில் பயிற்சி பெற்ற இவர் அங்கேயே பட்டமும் பெற்றார். நடிப்பை நன்றாக கற்றுக்கொண்ட ஜாக் தனது சினிமா வாழ்க்கைக்காக குடிபெயர்ந்த இடம் தான் நியூயார்க். அங்கு 1953-ம் ஆண்டு 'வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரிச்சர்ட் 3' நாடகத்தின் தழுவலில் பிராட்வேயில் துணை வேடத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

இதனை அடுத்து, 1960 முதல் 1962 வரை, "பெட்ஸ் செக்மேட்" என்ற மர்மத் தொடரில் கிறிஸ் டெவ்லினாக நடித்தார். இது மக்களுக்கு பிடித்து போக அடுத்ததாக தி எட்ஜ் ஆஃப் நைட் , தி டாக்டர்ஸ் , அனதர் வேர்ல்ட், ஆல் மை சில்ட்ரன், சர்ச் ஃபார் டுமாரோ, கைடிங் லைட், லவ்விங், ஒன் லைஃப் டு லைவ் மற்றும் ஜெனரேஷன்ஸ் உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளில் நடித்து யாரும் எதிர்பாராத வகையில் பிரபலமானார். மேலும், 1959-ம் ஆண்டு இயக்குனர் டென்னசி வில்லியம்ஸின் 'ஸ்வீட் பேர்ட் ஆஃப் யூத்' தயாரிப்பில் வெளியான படங்களில் நடித்தார். 

இதையும் படிங்க: "ஹாப்பி பர்த்டே டூ தளபதி விஜய்".. கென்யாவில் இருந்து பறந்து வந்த வாழ்த்து.. சொன்னது யார் தெரியுமா..?

பின்னர் 1977 ம் ஆண்டு முதல் 1980 வரை டிராகுலா ஆன் பிராட்வேயிலும் நடித்தார், அங்கு தான் அவர் முதன்முதலாக டாக்டர் சீவர்டை சித்தரித்தார். அதற்கு பின்பு தான் ​அவர், 'காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (1998), தி அசாசினேஷன் ஆஃப் ட்ரொட்ஸ்கி (1972), ஃபாலிங் டவுன் (1993), பேட்மேன் ஃபாரெவர் (1995), பேட்மேன் & ராபின் (1997), 8MM (1999) மற்றும் ஆபிஸ் ஸ்பேஸ் (1999)' உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

பின் சாம் ரைமியின் ஸ்பைடர் மேன் திரைப்படத்தில், நார்மன் ஆஸ்போர்னை (வில்லெம் டஃபோ) பணிநீக்கம் செய்த ஆஸ்கார்ப் வாரியத் தலைவரான ஹென்றி பால்கனாக ஜாக் நடித்திருந்தார். இப்படி பல படங்களில் நடித்து அநேக புகழுக்கு சொந்தக்காரராக விளங்கிய ஜான் தனது 96 வது வயதில் கலிபோர்னியாவின் லாஸ் ஓசோஸில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். தூக்கத்தில் இருக்கும் பொழுது அவர் உடலில் இருந்து உயிர் பிரிந்தது என அவரது மருமகன் டீன் சல்லிவன் ஊடகங்களுக்கு தெரிவித்து இருக்கிறார்.

இதனை அடுத்து அவரது உடலுக்கு ரசிகர்களும் பல திரைப்பட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் விஜய் வெளியிட்ட போஸ்டர்..! பரவசத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share