ஹிட் கொடுத்த வெற்றிமாறனின் ‘Bad Girl’ பட பாடல்..! பாடலே இப்படின்னா படம் எப்படி இருக்குமோ..!
இயக்குநர் வெற்றிமாறனின் ‘Bad Girl’ பட பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் அனைவரது பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்ற ஒரே இயக்குனர் என்றால் அவர் தான் வெற்றி மாறன். இவர் தனது தனித்துவமான கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் கோடான கோடி ரசிகர்களின் மனதில் இடத்தைப் பெற்றவர். அப்படிப்பட்ட வெற்றிமாறன் தற்போது பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புடன் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் தான் 'Bad Girl'. இத்திரைப்படம், சமூகம் எப்போதும் “நல்ல பெண்” என்று வரையறுக்கும் கட்டுப்பாடுகளைத் தாண்டி, ஒரு டீனேஜ் பெண்ணின் பார்வையில் உலகத்தை வெளிப்படுத்தும் முறையில் மிகவும் அழகாக உருவாக்கபட்டுள்ளது.
இந்த ‘Bad Girl’ திரைப்படத்தின் இயக்குனராக, வெற்றி மாறனின் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா பரத் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஒரு பெண் வளர்ந்துவரும் பருவத்தில் சந்திக்கும் எதிர்பார்ப்புகள், ஆசைகள், தன்னிச்சைகள் மற்றும் மனதளவிலான வலிகளை தைரியமாக பேசும் படமாக இருக்கிறது. அஞ்சலி சிவராமன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 'Bad Girl' படத்தில் தனது நடிப்புத்திறனை நிரூபித்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் அவரது கதாபாத்திரம் நம்மை சிந்திக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அஞ்சலியுடன் சேர்ந்து, சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையின் ஓட்டத்தில் அருமையாக தெரியும் வகையில் இயக்குனர் அழகாக காண்பித்து இருக்கிறார்.
இப்படி இருக்க, அருமையான இப்படத்தின் இசையமைப்பாளராக, இந்தி சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள அமித் த்ரிவேதி தான் இசையமைத்துள்ளாராம். அவரின் இசை, கதையின் உணர்வுகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘Bad Girl’ படத்தின் முதல் பாடலான ‘ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே’ எனும் பாடல் கடந்த வாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: நிறுத்தப்பட்ட "பராசக்தி" படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்..! மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!
https://youtu.be/AUDw6_4WKNM?si=f4jBdHV9-cfm0WEJ
இதனை அடுத்து ‘நான் தனி பிழை’ எனும் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே போஸ்டர் மூலம் வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில், ‘நான் தனி பிழை’ பாடல், குற்ற உணர்வில் மூழ்காமல் தன்னம்பிக்கையுடன் வாழும் பெண்ணின் கர்வமான சிந்தனையை வெளிப்படுத்தும் பாடலாக உள்ளது. மேலும், ‘Bad Girl’ சமீபத்தில் ரொட்டர்டாம் திரைப்பட விழாவில் இடம்பெற்று, NETPAC என்று சொல்லக்கூடிய Network for the Promotion of Asian Cinema விருதை வென்றுள்ளது. இது ஒரு ஆசிய திரைப்படமாக ‘Bad Girl’ க்கு கிடைத்த மிகுந்த மரியாதையாகவும் அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் படம் வெளியாகும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் இந்த திரைப்படமும் வெளியாகும் என்பதை தாண்டி, சமூக வட்டாரங்களில், குடும்பங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் மௌனமான மனக்குழப்பங்களை வெளிப்படுத்தும் ஓர் உணர்வுப்பூர்வமான படைப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், ‘Bad Girl’ என்பது எந்தவொரு பெண்ணும் தன் உள்ளத்தில் உண்டாகும் கேள்விகளுக்கு விடையை தேடும் பயணத்தைப் பற்றியது. பொதுவாக சமூக ஒழுக்கம் என்ற பெயரில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், சட்டங்கள் மற்றும் வாய்மொழிகளால் உருவாகும் மனஅழுத்தங்களை இந்த படம் கண்டிப்பாக சிந்திக்க வைக்கும். எனவே, வெற்றி மாறனும், அனுராக் காஷ்யப்பும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இது வெறும் "பெண் அடக்கப்பட்டிருப்பதற்கும் போராடுவதற்குமான கதை" என்பதில்லை. இது, ஒருவரது தனிப்பட்ட மனநிலை, ஆசை, தவறுகள், வெற்றிகள் மற்றும் தோல்விகளை அப்படியே காண்பிக்கும் படம்.
‘Bad Girl’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே ஏற்பட்டுள்ள சர்வதேச அளவிலான வரவேற்பு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், இப்படத்தின் ‘நான் தனி பிழை’ பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: A RUGGED LOVE STORY.. மாஸாக வெளியானது 'தலைவன் தலைவி' ட்ரெய்லர்..!