×
 

A RUGGED LOVE STORY.. மாஸாக வெளியானது 'தலைவன் தலைவி' ட்ரெய்லர்..!

நடிகர் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பல வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான "தலைவன் தலைவி" படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியும், இயக்குநர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, செம்பியன் வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுகுமார் பணிபுரிந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ டைட்டில் டீசரில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் கணவன் - மனைவியாக கொத்து பரோட்டா போட்டுக் கொண்டே வார்த்தை யுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வசனங்களும், பெர்ஃபார்மன்ஸும் அழுத்தமாகவும் ஜாலியாகவும் இருக்கின்றன. முடிவில், அவர்கள் இருவரைப் பற்றியும் யோகி பாபு தரும் ஒன்லைன் விளக்கமும் வேற ரகம். அத்துடன் ஆக்‌ஷன் சம்பவங்களும் உண்டு என்பதை துப்பாக்கிச் சத்தம் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, சந்தோஷ் நாராயணின் இசை பட்டையைக் கிளப்பியிருக்கிறது. 

இதையும் படிங்க: "தலைவன் தலைவி" ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..? அசத்தலாக வெளியிட்ட படக்குழு..!

குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 'தலைவன் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து சுப்லாஷினியுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்.

சமீபத்தில் "தலைவன் தலைவி" படம் வரும் ஜூலை மாதம் 25ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், Welcome to Hotel Raghavarthini என்று பதிவிட்டு, படத்திற்கான தேதி ரிலீஸ் டீசரை வெளியிட்டார்.  

இதனை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ள நிலையில், தற்போது 'தலைவன் தலைவி' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல், பிரிவு சண்டை, விவாகரத்து, நட்பு, புரிதல் என அனைத்தையும் பற்றி பேசியுள்ளது இத்திரைப்படம். 

ஏற்கனவே 19(1)(ஏ) என்ற மலையாள படத்தில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=nyURE5vmj2I

இதையும் படிங்க: விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணியில் ‘தலைவன் தலைவி’..! தெலுங்கில் படத்தின் பெயர் என்ன தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share