×
 

'பறந்து போ' படத்தை பார்த்து  குழந்தைகளுடன் இருக்க விரும்புகிறேன்..! இயக்குநர் வெற்றி மாறன் புகழாரம்..! 

இயக்குநர் வெற்றி மாறன் 'பறந்து போ' படத்தை பார்த்த பின்னர் நெகிழ்ச்சி பொங்க பேசினார்.

நேற்றைய தினத்திலிருந்து ஒரு திரைப்படம் பலரது வாழ்க்கையை மாற்றி இருக்கிறது என்றால் அதுதான் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகி இருக்கும் "பறந்து போ" திரைப்படம்.

இதுவரை எடுத்த நான்கு திரைப்படங்களில் பலரது ரசிகர்களை தன் பக்கம் இழுத்த ஒரே இயக்குனர் என்றால் அவர் தான் இயக்குநர் ராம். இவர் இதுவரை கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இப்படி இருக்க, அவரது அற்புதமான படைப்பில் உருவாகி இருக்கும் தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் திரைப்படம் தான் 'பறந்து போ'. இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க அவரோடு அஞ்சலி கிரேஸ், ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பலரது இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் இத்திரைப்படம் தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இனிதான் அரங்கம் அதிரும்.. ஆட்டம் சூடுபிடிக்கும்..! தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சுரேஷ் ரெய்னா..!

இப்படி இருக்க, மிர்ச்சி சிவாவும் அவரது மனைவியும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்க தனது மகனான அன்பு-வை வீட்டிலேயே வைத்து பாதுகாக்கின்றனர். வீட்டிலேயே ஆன்லைன் கிளாசில் படிப்பதால் வெளியுலகம் தெரியாமல் வளரும் அன்பு மிகவும் பிடிவாதம் பிடித்த மகனாக மாறுகிறான். இந்த சூழலில், கடன் தொல்லை தாங்காமல் மிர்ச்சி சிவா தனது மகனான அன்புவை அழைத்துக் கொண்டு பைக்கில் வெளியூருக்கு செல்கிறார். ஆனால் பிறந்ததிலிருந்து இதுவரை வெளியே எங்கேயும் செல்லாத தனது அப்பா, கடனுக்கு பயந்து ஓடி வருவதை தெரியாமல் ஏதோ ரோடு ட்ரிப் செல்கிறோம் என்ற எண்ணத்தில் வழிநெடுங்க அன்பும் சிவாவும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் தான் படமாகவே இருக்கிறது. 

குறிப்பாக திரைப்படத்தின் மையக் கருத்து என்றால் பெற்றோர்களாக இருப்பவர்கள் குழந்தைகளை வளர்க்க தயாராக இருக்கின்றனரா? அல்லது பெற்றோர்களே குழந்தையாக இருக்கிறார்களா? என்பதை வெளிப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் இருக்கிறது. குறிப்பாக தந்தையினுடைய அன்பை ஆழமாக பிரதிபலிக்கும் திரைப்படமாகவும் இப்படம் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் தற்பொழுது மாபெரும் வெற்றி அடைந்திருக்கும் இந்த வேளையில் இத்திரைப்படத்தை நெகிழ்ச்சி பொங்க பேசி பாராட்டி இருக்கிறார் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். 

இத்திரைப்படத்தை குறித்து வெற்றிமாறன் பேசுகையில், " உண்மையில் நான் நினைத்ததை விட இந்த திரைப்படம் மிகவும் அற்புதமாக உருவாகி இருக்கிறது. ஒரு தந்தையாக இந்த படம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. சும்மா சொல்லக்கூடாது... இயக்குனர் ராம் படங்கள் என்றாலே அது எப்போதும் ஸ்பெஷலாகத் தான் இருக்கும். அதேபோலத்தான் இந்த திரைப்படமும் இருக்கும் என பார்த்தால் இந்த முறை அவருடைய கம்போர்ட் சோனில் இருந்து வெளியே வந்து மிகவும் ஜாலியான நகைச்சுவை கலந்த ஒரு அற்புதமான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். பொதுவாகவே ராமி-னுடைய நான்கு திரைப்படங்களையும் எடுத்துப் பார்த்தால் அவை அனைத்தும் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஆனால் இந்த 'பறந்து போ' திரைப்படம் அதைவிட பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். படத்தில் வரும் மிர்ச்சி  சிவாவின் கதாபாத்திரத்தை பார்க்கும்பொழுது அதில் என்னையும் சேர்த்து வைத்து பார்க்கும் அளவிற்கு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.. மிர்ச்சி சிவா இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை... மேலும் இந்தத் திரைப்படம் நமக்கு ஒரு பாடமாக இருப்பதைப் போல் இருக்கிறது. ஏனெனில் இத்திரைப்படத்தின் அநேக காட்சிகளை பார்க்கும் பொழுது ஒரு வேலை இவர்கள் சொல்றபடி நாமும் வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணிம் யோசிக்க வைக்கிறது..

உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த படத்தை பார்த்ததிலிருந்து என்னுடைய குழந்தைகளுடன் நான் எப்படி இருக்கிறேன் என்று என்னை யோசிக்க வைத்ததோடு இன்னும் என்னுள் எத்தனை மாற்றங்களை நான் செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வைத்திருக்கிறது.... உண்மையில் படம் அற்புதம் என்பதை விட ஒரு தந்தையாக என்னை இப்படி யோசிக்க வைத்த இயக்குனர் ராமிற்கும் பறந்து பட குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மிகவும் மகிழ்ச்சி பொங்க பேசியிருக்கிறார். 

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் ஓடுவதை விட, கம்மி பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் தற்பொழுது வெற்றியடைந்து வருவது தற்பொழுது தொடர்கதையாகி வருகிறது என தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்கவரும் அழகில் குடும்பஸ்தன் பட நடிகை..! இணையத்தில் ட்ரெண்டாகும் கிளிக்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share