திகில் கிளப்பும் விஜய் ஆண்டனியின் "மார்கன்"..! படத்தின் முதல் 6 நிமிட வீடியோவால் அரண்டு போன ரசிகர்கள்..!
விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தின் முதல் 6 நிமிட திகில் கிளப்பும் வீடியோவால் ரசிகர்கள் படத்தை காண ஆர்வத்தில் உள்ளனர்.
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். இவரது நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் ஒருவித கருத்தை முன்வைத்ததாக இருக்கும். அதனாலேயே இவரது படங்களை பார்க்க ஒரு கூட்டம் ஆவலாகவே உள்ளது. படத்தில் எப்படி கலக்குவாரோ அதே போல் பாடுவதிலும் பாடலை உருவாக்குவதிலும் வல்லவர் என்றே சொல்லலாம்.
அந்தவகையில், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்து தற்பொழுது இயக்குனராக மாறி இருக்கும் லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் படமாகவே உருவாக்கப்பட்ட இப்படம் ஜூன் மாதம் 27ம் தேதியான நாளை வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: எஸ்கேவின் 'பராசக்தி' பட டைட்டிலை கொடுக்க இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி..!
சமீபத்தில் `மார்கன்' படத்தின் ட்ரெயிலர் வெளியானது. இப்பட ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி அனைவரையும் கவரும் வண்ணம் ஒருபகுதி முகம் தீயினால் கருகியிருக்கும் மேக்கப்புடன் வந்து பயமுறுத்தினார். பின்னர் ட்ரெய்லரை வெளியிட்ட அவர், தனது கருத்தை பதிவு செய்தார். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, "இந்த படத்திற்கு இசை நான் தான் அமைத்துள்ளேன். நடிகராகவும் நான் நடித்துள்ளேன். இப்படம் ஃபேண்டஸி கலந்த க்ரைம் திரைப்படம் என்பதால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கும் என்றார்.
மேலும், இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, விஜய் ஆண்டனி, டெவில் வெளிய வர பார்க்கும் என சொல்ல, எடிட்டிங் அற்புதமாக இருந்தது. மேலும் இதுவரை சைக்கோ கில்லர் என்று பார்த்தால் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் படங்களை போல் இப்படம் அல்லாமல் சற்று வித்தியாசமாக உடலை கருக வைத்து கொலைசெய்யும் சைக்கோ வில்லன் படமாக தெரிகிறது. இப்படி பட்ட சைக்கோ வில்லனை கண்டுபிடிக்க களமிறங்கும் விஜய் ஆண்டனியும் அந்த கிரிமினலால் பாதிக்கப்படுகிறார். பின் பல போராட்டங்களுக்கு பின் சைக்கோவின் வாயிலேயே உண்மையை வர வைக்கும் விதமாக படத்தின் ட்ரெய்லர் இருந்தது.
இப்படி இருக்க, இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதன் 6 நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த காட்சிகளில், " ஒரு பெண்ணை காப்பாற்ற விஜய் ஆண்டனி டீம் முயற்சிப்பதை போன்று காண்பிக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை காண்பிக்கின்றனர். அதில், ஒரு பெண் தனது காதலனிடம் பேசிவிட்டு வீடு திரும்புகிறாள். அப்பொழுது மறைந்திருக்கும் ஒருவர் அவளின் கழுத்து பின்புறம் உள்ள தண்டுவட பகுதியில் ஒரு மருந்தை ஊசி மூலமாக செலுத்திய உடன், அவள் உடல் முழுவதும் கருப்பாக மாறி இறந்து விடுகிறாள். பின்பு காலையில் தூய்மை பணியாளர்கள் அவளுடைய சடலத்தை குப்பை தொட்டியில் இருந்து எடுக்கிறார்கள்.
பின்பு இந்த செய்தி காட்டு தீ போல் இணையத்தில் வைரலாக, மும்பையில் உள்ள விஜய் ஆண்டனிக்கு இந்த தகவல் சொல்லப்படுகிறது. உடனே மரித்துப்போன பெண்ணின் புகைப்படத்தை பார்த்த பின்பு தனது மகளுக்கும் இதேபோன்ற துயர சம்பவம் நடந்திருப்பதை நினைத்து பார்த்து, இனி இதுபோன்று யாருக்கும் நடக்க கூடாது என முடிவெடுத்த விஜய் ஆண்டனி, சென்னைக்கு வருகிறார்" இப்படியாக அந்த 6 நிமிட வீடியோவில் இருப்பதால் இதனை பார்த்த அனைவரும் விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தை காண ஆவலாக உள்ளனர்.
மேலும் நாளை வெளியாக இருக்கும் இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் எனவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாஸ் ஹிட் கொடுக்கப்போகும் விஜய் ஆண்டனியின் படம்..! ட்ரெய்லரில் தெறிக்க விட்ட திரில்லர் காட்சிகள்...!