×
 

‘கிங்டம்’ படம் விஜய் தேவரகொண்டாவின் புதிய பிளாக்பஸ்டர் முயற்சி..! முதல் நாளிலேயே வசூலில் புதிய சாதனை..!

விஜய் தேவரகொண்டாவின் புதிய பிளாக்பஸ்டர் படமான ‘கிங்டம்’ படம் முதல் நாளிலேயே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு சினிமா உலகில் விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த திரைப்படம் ஒன்று கடந்த நாட்களில் வெளியாகி ரசிகர்களை கலக்கி வருகிறது. பிரபல இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில், இசை அரக்கன் அனிருத் இசையமைப்பில் உருவாகிய 'கிங்டம்' திரைப்படம், ஜூலை 31 அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே, சத்யதேவ், மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மட்டுமின்றி, தமிழிலும், ஹிந்தியிலும் இப்படம் ஒரே நாளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

படம் வெளியான தினமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் உருவாக்கியது. சிலர் கலவையான விமர்சனங்களை சொன்னாலும், ரசிகர்கள் பெரிய அளவில் திரையரங்குகளை நோக்கி விரைந்தனர். இதன் விளைவாக, முதல் நாள் உலகளாவிய வசூல் ரூ.39 கோடியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூல் மதிப்பீடு விஜய் தேவரகொண்டாவுக்கே ஒரு முக்கிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது, குறிப்பாக அவர் 'இரண்டாம் நிலை' தெலுங்கு நடிகர்கள் வரிசையில் வருகிறார் என சிலர் கூறும் சூழ்நிலைக்கு பதிலாக இப்போது அவர் முக்கிய முதல் நிலை நடிகராக வலுப்பெற்று வருகிறார் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இப்படி இருக்க விஜய் தேவரகொண்டா கடந்த ஆண்டு நடித்த 'பேமிலி ஸ்டார்' திரைப்படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத நிலையில், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இதனால், அவரது மார்க்கெட்டில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், 'கிங்டம்' திரைப்படம் தற்போது அவருடைய மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தும் வகையில் சாதனை படைத்து வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில், இது தான் ரீயல் விஜய் கம்பேக் என பாராட்டி வருகின்றனர். இதில் கவுதம் தின்னனூரியின் டைரெக்ஷன் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் சில கூறுகின்றன. அதேபோல் அனிருத் தனது இசையில் ஒரு மிரட்டலான BGM கொடுத்து படத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். புகழ்பெற்ற மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இதையும் படிங்க: குழந்தைக்கு பாலூட்டிய ஸ்ரீநிதி ஷெட்டி புகைப்படம்..! ஒரே பதிவில் விமர்சனங்களை காலி செய்த ஸ்மார்ட் நடிகை..! 

அதுமட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவான டப்பிங் பணிகள் உயர்ந்த தரத்தில் செய்யப்பட்டதால், திரைப்பயணத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் செல்கிறது. படம் விமர்சன ரீதியாக கலவையான எதிர்வினைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு வியக்க வைக்கிறது. மிக முக்கியமான விஷயம் என்னெவெனில்  இந்த படம், 'இரண்டாம் நிலை தெலுங்கு ஹீரோக்களில்' விஜய் தேவர் கொண்டாவை முதல் நாளில் அதிக வசூல் பெற்ற ஹீரோவாக மாற்றியுள்ளது. இதுவரை இந்த இடத்தை தக்க வைத்திருந்த பல நடிகர்களை விட தனது தரத்தை உயர செய்துள்ளார். இது, விஜய் தேவர்கொண்டாவுக்கு அடுத்தடுத்த பிளாக் பஸ்டர் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக 'கிங்டம்' படம் வெற்றி பாதையில் பயணிப்பதற்கான அனைத்து அடையாளங்களையும் தற்போது காட்டி வருகிறது.

இந்த படம் ரூ.200 கோடி வரைக்கும் வசூலிக்கும் வாய்ப்பு உண்டு என திரையரங்க அதிகாரிகளும் கூறுகின்றனர்.. சமீபத்திய வெற்றிப்படங்களை பின்பற்றி, இந்த 'கிங்டம்' படம், தெலுங்கு சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா மார்க்கெட்டிலும் ஒரு புதிய மைல்கல்லாக அமைவது உறுதி. விஜய் தேவரகொண்டா, இயக்குநர் கவுதம் தின்னனூரி மற்றும் அனிருத் ஆகியோரின் கூட்டணி ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கியுள்ளது.
 

இதையும் படிங்க: ஸ்லிம் லுக்கில் கலக்கும் நடிகை சமந்தா..! டயட் பற்றிய ரகசியங்களை சிதறவிட்ட "Neighbors".!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share