×
 

இனி தீபாவளி, பொங்கல் என்றால் இவர் படம் இல்லை.. கண்கலங்கியபடி சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றார் நடிகர் விஜய்..!

ஜனநாயகன் படம் நிறைவு இனி அரசியல் களம் தான் என்பதை நினைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில்  நடிகர் விஜய் எமோஷனலாகி இருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு ரசிகர் பட்டாளங்கள் இன்றும் அதிகமே.. அந்த வகையில் நடிகர் விஜய் பல ஏற்றத்தாழ்வுகளை வாழ்க்கையில் கண்டிருக்கிறார் என்று கூற முடியும். சினிமா துறையில் இயக்குனரின் மகன் என்ற பெயர் அவருக்கு இருந்தாலும் ஒரு நடிகனாக தன்னை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தனது முழு திறமையும் படத்தில் காண்பித்து அயராது உழைத்து இன்று தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகர் விஜய். 

அப்படிப்பட்ட விஜயின், திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் பொழுதும் பல இடர்பாடுகளையும் போராட்டங்களையும் சந்தித்த பின்னரே வெளியாகும். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான 'தலைவா' திரைப்படம் கண்ட இடர்பாடுகள் அதிகம் என்றே கூறலாம். இப்படி இந்த உலகத்திற்கு நடிகராய் அவதரித்த விஜய் அரசியல் களத்தில் இறங்கி மக்களின் நலனில் பணியாற்றுவார் என ஒருநாளும் ஒருவரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று நடிகர் விஜய் தனது முழு சினிமா பயணத்தையும் முடித்துக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவிக்க அனைவரும் ஆட்டம் கண்டு போயியுள்ளனர். 

இதையும் படிங்க: வைஷ்ணவி எல்லாம் ஒரு ஆளு.. விஜய் நற்பணி மன்றம் பத்தி என்ன தெரியும் உனக்கு - கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..!

ஆம்.. இன்று நம் முன் ஷைனிங்காக நிற்கும் விஜயின் உழைப்பு என்பது மிகவும் பெரியது, அவரை குறித்து பார்த்தால் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த விஜய் நாளடைவில் அவரது தந்தையின் உதவியுடன் கதாநாயகனாக 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் விஜயை இப்படத்தில் பார்த்த மக்கள் முதலில் அவரை ஏற்று கொள்ளவில்லை அதன் பின், நடிகர் விஜயகாந்த்துடன் "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தில் விஜய் இணைந்து நடித்தார். அடுத்து விஜய் நடித்த "ரசிகன்" படத்தில் இவரது நடிப்பை பார்த்த பின்பு இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த ரசிகர்கள் அவருக்கு "இளைய தளபதி" என்ற அடைமொழி பெயர் வைத்து கொண்டாடினர். இப்படி பல படங்களில் நடித்த விஜயின் முதல் பத்து படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதன்பின் வந்த அனைத்து படங்களும் ஹிட் ஆக ஆரம்பித்தது. 

இதனை தொடர்ந்து 1996-ல், இயக்குநர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வரிசையாக  லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா என 90காலங்களை தாண்டி 2000த்திலும் காலடி எடுத்து வைத்தார். அதில்  கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல் என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.

இப்படி 1992ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா பயணம் 2025ம் ஆண்டு முடிவடைந்துள்ளது என்றே கூறலாம். காரணம் தமிழக வெற்றி கழகத்தில் தலைவராக இருக்கும் விஜய், தற்பொழுது 'ஜனநாயகன்' என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் கதை மற்றும் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை பார்த்தால், அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். பல பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

மேலும், இப்படத்தில் வரும் பாடலில், இயக்குநர்கள் அட்லீ,லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் அவரை சினிமாவில் இருந்து சென்ட் ஆஃப் செய்யும் பாடலுக்கு நடித்து உள்ளனர். இப்படி தனது சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டு வரும் விஜய் வீட்டில் ஒய்வு எடுக்காமல் இனி மக்கள் பணியில் ஈடுபட போவதாக கூறி அதற்கான வேளையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜயின் சினிமா பயணத்தில் கடைசி படமாக பார்க்கப்படும் ஜனநாயகன் படத்தின் கடைசி நாள் ஷுட்டிங் நேற்று நடைபெற்றது.

இப்படத்தின் கடைசி காட்சிகளை படமாக்கும் நாட்கள் தொடங்கியதில் இருந்தே நடிகர் விஜய் சோகமாகவும், கலங்கிய படியும், எமோஷனலாகவும்  இருந்ததாக படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி இருக்க, அவரை இப்படத்தில் இருந்து முழுமையாக சென்ட்டாஃப் செய்யும் நிகழ்வை பிரமாண்டமாக செய்ய வேண்டும் என படக்குழுவினரும் தயாரிப்பாளரும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விஜயின் பிறந்த நாள் அன்று இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழலில் நடிகர் விஜயின் ஜனநாயகன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிந்தாலும், இனி வருடா வருடம் தீபாவளி பொங்கல் என அனைத்து பண்டிகைகளுக்கும் அவரது படங்களை எதிர்பார்க்க முடியாது என அவரது ரசிகர்களும் விஜயும் கண்கலங்கி இருக்கின்றனர் என்றே சொல்லலாம்.  


 

இதையும் படிங்க: என்ன விஜய்.. உங்க பேச்சுல பாஜக சாயல் தெரியுதே.. நீட்-க்கு ஆதரவா பேசுறீங்க..! சாட்டையை சுழற்றிய ப்ளூ சட்டை மாறன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share