விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்..! அதிரடியாக வெளியானது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதன் முதலாக இயக்கும் படத்தின் முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது நடிப்பால் மட்டுமல்ல, தனித்துவமான தன்மையாலும் தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவருடைய மகன் ஜேசன் சஞ்சயும், தற்போது திரையுலகில் புது முயற்சியோடு கால்பதிக்க இருக்கிறார். சினிமாவைப் பற்றி சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டிருந்த ஜேசன், அதனை கனவாக மட்டுமின்றி வாழ்க்கையாக மாற்ற முயற்சித்து வருகிறார். இவர் முதலில் கனடாவின் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.
பின்னர், லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் திரைக்கதை எழுதுவதில் B.A. ஹானர்ஸ் படிப்பை முடித்தார். இந்த கல்வித் படிப்பை தாண்டி, இவர் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கி, சினிமா மீதான தன்னுடைய காதலையும், கலை மீது கொண்ட நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். இப்போது, இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த முக்கியமான தயாரிப்பாக, ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இது அவரது இயக்குநராகும் அதிகாரப்பூர்வ அறிமுகப்படம் என்பதாலும், இளைய தளபதி விஜய்யின் மகன் என்பதாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய திரைப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சந்தீப், தற்போது தமிழில் இந்த முக்கியமான வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
இசையமைப்பாளராக எஸ். தமன் பணி செய்கிறார். இவர் இசையமைக்கும் படங்களுக்கு துல்லியமான பின்னணி இசை, மாஸ் பாடல்கள் என்று தனி ரசிகர் வட்டம் உள்ளது என்பதாலும், இப்படத்தின் இசைக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. சென்னை நகரின் பல இடங்களில், முக்கிய காட்சிகள் இயக்கப்பட்டன. அதன் பின்னர், படப்பிடிப்பு அடுத்த கட்டத்துக்கு சென்றது. இலங்கை மற்றும் பேங்காக் உள்ளிட்ட வெளிநாட்டு இடங்களில் முக்கியமான காட்சிகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘இந்தியன் 3’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்..! ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த இயக்குநர் சங்கர்..!
படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக முடிவடைய உள்ளது எனத் தயாரிப்பு குழுவினரின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதி கட்டமாக தற்போது நடந்து வரும் சில முக்கிய காட்சிகளை முடித்தவுடன், திரைப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் செல்ல உள்ளதாம். மேலும், இப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை லைகா நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களும், புதிய தலைமுறை சினிமா ரசிகர்களும் இந்த படம் பற்றி அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். முன்னணி நடிகரின் மகன் என்பதாலும், சரியான கலைத்திறனோடு சினிமாவுக்குள் நுழைவதாலும், ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகும் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கக்கூடியதாக இருக்கலாம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய முயற்சி, தமிழ் சினிமாவுக்கே ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைவதற்கான வாய்ப்பு அதிகம் கொண்டுள்ளது.
இதனைக் கொண்டு, விஜய் குடும்பத்தில் இருந்து ஒரு புதிய ஃபிலிம்மேக்கர் உருவாகின்றார் என்பது உறுதியாகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமே அவரது முயற்சியை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கும் இந்நேரத்தில், இந்த படம் வெற்றி பெறுவதை சினிமா உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: நாளை வெளியாகும் 'மாரீசன்' படத்தின் முதல் ரிவியூ..! உலகநாயகன் கமல்ஹாசன் பதிவால் விமர்சகர்கள் அதிர்ச்சி..!