விஜய் பற்றியும் என்னை பற்றியும் உனக்கு என்ன தெரியும்..! ஆவேசப்பட்ட நடிகை த்ரிஷா..!
விஜய் போட்டோவை நான் பதிவு செய்தா உனக்கு என்ன என ஆவேசப்பட்டு பதிவிட்டு இருக்கிறார் நடிகை த்ரிஷா.
தமிழ் திரையுலகில் அன்றும்..இன்றும்..என்றும்.. இளைய தளபதி என்றால் அவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது அவர் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கி இருக்கிறார். இப்படிப்பட்ட நடிகர் விஜயின் மீது ரூமர்ஸ் பரவுவது ஒன்றும் புதியதல்ல.
இப்படி இருக்க ஆரம்பத்திலிருந்து நடிகர் விஜயுடன் அதிகமாக நடித்திருக்கும் நடிகை என்றால் அவர் தான் நடிகை திரிஷா. இவர்கள் இருவரது காம்போவும் மிகவும் அழகாக இருக்கும். எப்படி..? ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக்கு இணையான நடிகை என்றால் தமன்னாவை சொல்வோமோ அதே போல் தான் நடிகர் விஜய்க்கு ஹீரோயின் என்றால் நடிகை திரிஷாவையே கூறுவோம். அந்த அளவிற்கு இவர்கள் இருவரது நடிப்பும் திரையில் அட்டகாசமாக இருப்பதுடன் இவர்களது கெமிஸ்ட்ரி மிகவும் அழகாக ஒத்துப்போகும். அதனால் தான் படத்தில் இவர்களது நடிப்பு அபாரமாக இருக்கிறது.
இதையும் படிங்க: ரசிகர்களை குழப்பும் விஜய்.. அரசியல் சும்மா.. சினிமா தான் மெயின்..! தளபதியின் பிளானை புட்டுப்புட்டு வைத்த நடிகை..!
ஆனாலும் கடந்த சில வருடங்களாகவே நடிகை திரிஷாவையும் விஜய்யையும் வைத்துப் பேசுபவர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். இணையத்திலும் இவர்களைக் குறித்து பேசாதவர்களே கிடையாது. ஒரு சிலர் நடிகர் விஜய்யும் திரிஷாவும் மறைமுகமாக காதலித்து வருவதாக கூறி வருகின்றனர். ஆனால் மக்களது பேச்சுக்களை குறித்து ஒருநாளும் கவலைப்படாத நடிகை திரிஷா உண்மை என்ன என்பது எங்களுக்கு தெரியும்.. ரூமர்ஸ் பரப்புவது உங்கள் வேலை. அதனால் இதனை பரப்பும் உங்களுடன் சேர்ந்து நாங்கள் பயணிக்க முடியாது என தன்னுடைய சினிமா கெரியரை பார்த்து வருகிறார்.
இப்படி இருக்க, பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது அனைத்து படங்களிலும் கம்பேக் கொடுத்து இருக்கும் நடிகை திரிஷாவின் அனைத்து படங்களும் வெற்றி அடைந்து வருகிறது. அதனாலேயே அவரது பெயரில் சினிமா இண்டஸ்ட்ரியல் உள்ள அனைத்து நடிகைகளும் பொறாமைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை திரிஷாவுக்கும் சிம்ரனுக்கும் கொடுத்து விடுங்கள் என ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு தற்பொழுது இவருடைய நடிப்பு அபாரமாக விளங்கி வருகிறது. இந்த சூழலில், ஜூன் 22 ஆம் தேதி இளைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாது அவர்கள் ரசிகர்கள் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவருடைய பிறந்தநாள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
மேலும், அவரது நெருங்கிய நண்பரான சஞ்சீவ் கூட துபாயில் அவருடைய பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினார். இப்படி அவரது பிறந்த நாள் என்றால் ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த நிலையில் பல சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு தெரிவித்து வந்தனர். மேலும் அவரது பிறந்த நாளன்று அவருடைய கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வீடியோவும் வெளியானது. அவரது இன்ஸ்டா பதிவிலும் சமூகவலைதள பதிவிலும் அவரே போஸ்டர்களை வெளியிட்டது அவரது ரசிகர்களுக்கு மேலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம்.
அந்த வகையில் இவர்களது வரிசையில் நடிகை திரிஷாவும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தளபதி விஜயை பாராட்டி, விஜய் தனது செல்ல பிராணியை தூக்கி கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டு ஹாப்பி பர்த்டே டூ யூ விஜய் என பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த பலர் இவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து சித்தரித்து பேச ஆரம்பித்தனர். ஒவ்வொரு முறையும் அவர் நடிகர் விஜய் குறித்து போட்டோஸ் பதிவிடும் பொழுதும் இதே போல விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். இதனால் மிகவும் கடுப்பான நடிகை திரிஷா அதற்கு தக்க பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதன்படி, " ஒருவர் அன்பின் மிகுதியால் பதிவிடும் நினைவுகளையும் வாழ்த்துக்களையும் பார்த்து வாழ்த்த மனமில்லாமல் மனதில் அழுக்கு படிந்த எண்ணங்கள் நிறைந்தவர்கள் பேசும் பேச்சுக்களால் நாங்கள் குழம்ப போவதில்லை அது நன்றாக இருப்பவர்களை தான் குழப்பிவிடும்" என தனது ஆதங்கத்தை தனது இன்ஸ்டாவில் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: எனக்கு அந்த மாதிரி ஆசை இல்லை.. ஆனால்...! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஓபன் டாக்..!