×
 

என்னடா.. ட்வீஸ்ட் அடிக்கிறீங்க.. முத்துக்கிட்ட ரோகிணி பத்தி பத்தவச்சிட்டீங்களே மீனா..! சிறகடிக்க ஆசையில் பரபரப்பு..!

முத்துக்கிட்ட ரோகிணி பத்தின உண்மையை மீனா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடரான 'சிறகடிக்க ஆசை' இன்று ஒளிபரப்பான அத்தியாயத்தில் முக்கியமான கதைக்குரிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. இந்த தொடரின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ரோகிணியின் கடந்தகால ரகசியம், தொடரின் மையக் கதாபாத்திரமான மீனாவின் வாயிலாக முதல் முறையாக வெளிப்பட்டது. இதனால் கதையின் போக்கு திடீர் மாற்றத்தை சந்தித்துள்ளது.

இன்றைய எபிசோடு, மீனாவின் மனநிலை மாறி இருப்பதை கவனித்த முத்து, அவரை உடனடியாக சாமியாரிடம் அழைத்துச் செல்வதுடன் தொடங்குகிறது. சாமியாராக அமர்ந்திருந்த பெண், மீனாவைக் கண்ட உடனே மர்மமான வரவேற்பை வழங்கி, “உண்மையை நீ எவ்வளவு மறைக்க நினைத்தாலும் அது வெளிவந்தே தீரும், அதுவே விதி” என்று கூறிய தருணம், இன்றைய எபிசோடின் முக்கியமான தன்மையை எடுத்துக்காட்டியது. சாமியாரின் இந்த வார்த்தைகள், தொடரில் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகள் வெளிப்படும் நேரம் வந்துவிட்டதாக ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. சாமியார் கூறிய வார்த்தைகள் மனதில் ஒலித்தபடியே வீடு திரும்பிய மீனா, ரோகிணியின் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசியத்தின் பாரத்தை தாங்க முடியாமல் சிந்தனையில் மூழ்கி இருப்பது காணப்பட்டது. ரோகிணியின் கடந்த காலத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள், குடும்பத்துக்கு ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை மீனா மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டார்.

இதன் பின்னர் முத்து திடீரென மீனாவை பார்க்க வந்த, அவர் உள்ளுணர்வை உணர்ந்த முத்து நேரடியாகக் ஒரு கேள்வி எழுப்புகிறார். அப்போது மீனா, இதுவரை தன் உள்ளத்தில் அடக்கி வைத்திருந்த ரகசியத்தை உளறிவிட்டார். அதில் “ரோகிணியின் உண்மையான பெயர் கல்யாணி… கிரிஷ் அவளது மகன்… அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது…” என சொல்லிட்டாருங்கோ.

இதையும் படிங்க: பரபரப்பான 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இருந்து விடைபெறுகிறார் மனோஜ் ..! கண்ணீர் வரவைத்த போஸ்ட் ..!

இந்த ஒரு தகவல், தொடரின் கதைக் கோட்டில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியது. முத்துவின் முகத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சி மற்றும் கோபம் ரசிகர்களின் கவனத்தை முழுவதும் கவர்ந்தது. எபிசோடு முடிந்தவுடன், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் விவாதம் அதிகரிக்கத் தொடங்கியது. மீனா சொன்ன உண்மை, நிஜமான வெளிப்பாடா? அல்லது இது சீரியலில் அடிக்கடி வரும் கனவு காட்சி தானா? என்பதில் இணையதளம் முழுவதும் காத்திருப்பு நிலை காணப்படுகிறது. சில ரசிகர்கள் இது கதையில் அடுத்த கட்டத்தை துவக்கக் கூடிய உண்மை வெளிப்பாடு என கருத்து தெரிவிக்க, மற்றவர்கள் இது முத்துவின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் கனவு காட்சி மட்டுமே என கணிக்கின்றனர். இன்றைய எபிசோட்டிற்குப் பிறகு, நாளைய எபிசோட் எப்படி இருக்குமோ என்ற பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கதை வடிவமைப்பில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறக்கூடும் என ரசிகர்கள் கருதுகின்றனர். முத்து, ரோகிணியை நேரடியாக சந்தித்து உண்மை குறித்து கேள்வி எழுப்புவாரா. விஜயா மற்றும் அண்ணாமலை குடும்பத்தில் பெரும் கலக்கம் ஏற்படுமா. இல்ல ரோகிணி மீண்டும் புதிய பொய்களை பயன்படுத்தி தன் நிலையை காப்பாற்ற முயற்சி செய்வாரா. கிரிஷ் மீது குடும்பத்தின் பார்வை மாறக்கூடுமா. மீனா எடுத்த முடிவு தொடரின் மையக் கதைக்கே புதிய திருப்பத்தை வழங்கக்கூடுமா என்பது எல்லாம் நாளை தான் தெரியும். இதனால் சீரியல் TRP உயரக்கூடிய சாத்தியம் கிடைத்துள்ளது.

இந்த அதிரடியான நிகழ்வு, தொடரின் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் உயர்வை ஏற்படுத்தக்கூடும் என ஊடக வட்டாரங்கள் கருதுகின்றன. முக்கிய கதாபாத்திரங்களின் உண்மை வெளிப்பாடு, புதிய மோதல்கள், குடும்ப தகராறு, உணர்ச்சி வெடிப்புகள் ஆகியவை ரசிகர்களை திரை முன் கட்டிப் போடக்கூடிய அம்சங்களாகும். முடிவாக சிறகடிக்க ஆசை தொடரில் இன்று வெளிப்பட்ட ரோகிணியின் ரகசியம், சீரியல் கதையின் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளது.

நாளைய அத்தியாயத்தில் இந்த வெளிப்பாடு குடும்பத்துக்கு எந்த அளவு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது ரசிகர்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது. இது கனவா? அல்ல உண்மையான வெடிப்பா? என்பதை அறிய ரசிகர்கள் மீண்டும் நாளைய எபிசோடிற்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: மனோஜ்-க்கு முன்னாடி வேறொருவருடன் காதலாம்..! மீண்டும் மீனாவிடம் சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசையில் புது ட்வீஸ்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share