நடிகர் விஷாலின் 35-வது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியா..! மிரளவைக்கும் படத்தின் மாஸ் அப்டேட்..!
நடிகர் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெறுள்ளது.
தமிழ் திரையுலகில் "நானும் மதுர காரன் தாண்டா" என சொல்லி மக்கள் மத்தியில் அதிகம் ஃபேமஸ் ஆனவர் தான் நடகர் விஷால். அவரது படங்களில் தாமிரபரணி, சண்டைக்கோழி படங்களை யாராலும் மறக்க முடியாது. அப்பொழுதே மக்கள் மனதில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஷால், அடுத்தடுத்து தனது நடிப்பால் பல இளசுகளின் மனதை கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் பார்க்க கருமையாக இருந்தாலும் உடல் வலிமையில் ஜைஜான்டிக்காக இருந்தாலும் மனதளவில் ஒரு குழந்தை என்றே சொல்லலாம். இப்படி தமிழ் திரையுலகில் மத கஜ ராஜா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஷால் தனது 35-வது படத்தில் அதிகாரப்பூர்வமாக நடிக்க தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
பிரமாண்டமான நிகழ்வாக அமைந்த இந்த பூஜை விழாவில், பல முக்கிய திரைபிரபலங்கள் பங்கேற்றனர். இப்படத்தை ‘ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த 'ரவி அரசு' இயக்குகிறார். இது விஷாலும், ரவி அரசுவும் இணையும் முதல் படம் என்பதால், இந்த கூட்டணியை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உறைந்து உள்ளனர். நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படம் குறித்து அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி அந்த பதிவில், “மத கஜ ராஜா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, என் அடுத்த படமான விஷால்-35 இன்று ஆரம்பம் மாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99வது திரைப்படமாகும் இது. இயக்குநர் ரவி அரசு உடன் என்னுடைய முதல் கூட்டணி. நாயகியாக துஷார விஜயன், அவருடன் முதல் முறையாக ஸ்கிரீன் இணைகிறேன். MGR படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் Richardmnathan, மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் மீண்டும் என் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். எடிட்டிங் ஸ்ரீகாந்த், ஆர்ட் இயக்குநர் துரைராஜ், ஸ்டைலிங் வாசுகி பாஸ்கர். மிக அழகான காஸ்ட் மற்றும் குழு. முழு நேர்மையும், நேர்மறையும் நிறைந்த அணியாக நாங்கள் இந்த 45 நாட்கள் ஷெட்யூலை இன்று சென்னையில் இருந்து தொடங்குகிறோம். உங்கள் ஆசீர்வாதங்களும், ஆதரவையும் வேண்டுகிறேன்" என பதிவிட்டு இருக்கிறார்.
இந்தப் படம் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது திரைப்படம் என்பதும் தமிழ்ச் சினிமாவில் நீண்ட வரலாறுடைய நிறுவனமும் இது. இதில் விஜய், ஜீவா, கார்த்தி, திலீப், ரமேஷ் போன்ற நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ஜீவா மற்றும் கார்த்தி உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டு விஷாலுக்கும், படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், விஷாலுடன் இணைந்து நடிக்கவிருக்கும் கதாநாயகியான துஷாரா விஜயன் “சார்பட்டா பரம்பரை” மற்றும் “நச்சத்திரம் நாகரிகம்” உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.
இதையும் படிங்க: 'ஆமாம்.. உடல் எடை குறைஞ்சிடுச்சி.. என்ன இப்ப'.. நடிகை பவித்ரா லட்சுமி காட்டமான பேச்சு...!
விஷாலுடன் இவர் ஜோடி சேருவது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது, இது 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதன்பிறகு மற்ற முக்கிய நகரங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. முழுமையான ஆக்ஷன், திரில்லிங் சண்டைக் காட்சிகள், சமூக சிந்தனைகள் கலந்த கதைக்களம் என பல பரிமாணங்களில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. எனவே, தயாரிப்பாளர்களின் நம்பிக்கையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஒன்றாக சேரும்போது ஒரு படத்தின் மீது பெரிய கவனம் உருவாகும். விஷால் நடிக்கும் இந்த புதிய திரைப்படம், அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் தொடங்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர்களும், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் இணையும் இந்தப் படத்தின் அடுத்த அப்டேட், படத்தின் தலைப்பு என அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் 11 திரைப்படங்கள்.. திக்குமுக்காட வைக்கும் தியேட்டர்கள்..! குழப்பத்தில் ரசிகர்கள்..!