×
 

காதல் வாழ்க்கை.. கடந்துபோன பந்தம்.. விவாகரத்து பெற்ற அந்த தருணம்..! குடும்ப ரகசியத்தை உடைத்த நடிகர் விஷ்ணு விஷால்..!

தனது முதல் மனைவி பிரிந்து சென்றதற்கான காரணத்தை பொதுவெளியில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2009ம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு'  என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இதுகடந்தது, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம், ரசிகர்களிடம் நல்ல பெயரையும், முன்னணி நடிகர்களின் வரிசையில் தனக்கான இடத்தையும் பெற்றார்.

இப்படி இருக்க, தற்பொழுது, ‘ஓ மாம்பழ சீசனில்’, மற்றும் ‘ஆர்யன்’ போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் குறிப்பாக ஆர்யன் திரைப்படம், அவரது தனிப்பட்ட வாழ்க்கையோடு நேரடி தொடர்புடையது எனவும், அவர் தனது மகனின் பெயரையே இப்-படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் என்ற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் அதிகமாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், நடிகர் விஷ்ணு விஷால் திரையுலகில் தற்பொழுது மிகப்பெரிய உச்சத்தை அடைந்தாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு, விஷ்ணு விஷால் தனது காதலி 'ரஜினி நட்ராஜை' காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் இருவரும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்தத் தளபதிக்கு 'ஆர்யன்' என்ற மகன் பிறந்தார். இந்நிலையில், பல ஆண்டுகள் இவர்கள் இருவரது வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும், ஒருநாள் இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகப் திருமண பந்தத்திலிருந்து முழுமையாக பிரிந்தனர். இதைப் பற்றி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த விஷ்ணு விஷால் அனைவரையும் கண்கலங்க செய்தார்.

அதன்படி அவர் பேசுகையில், "நானும், ரஜினியும் நான்கு ஆண்டுகள் காதலித்து தான் திருமணம் செய்தோம். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்புதான் அவருக்கு புற்றுநோய் இருப்பது எனக்கு தெரியவந்தது. ஆனாலும், கடைசி வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவரை பிடிவாதம் பண்ணி திருமணம் செய்துகொண்டேன். அவருக்காக எதையும் செய்யத் தயார் என்ற நிலையில் தான் நான் இருந்தேன். ஆனாலும் திருமணத்திற்குப் பிறகு, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அதே நேரத்தில், என் திரைப் பயணமும் மிகவும் தீவிரமடைந்தது. இந்த சூழலில் படங்களில் அதிக கவனம் செலுத்தினேன்.

இதனால், அவருக்கு என்மீது அக்கறை இல்லை என்ற எண்ணம் அதிகமாக தோன்றியது. அடிக்கடி சில சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் வந்தன. ஆனால், அப்பொழுதும் அவரை விட எனக்கு மனமில்லை.. ஆனால் விவாகரத்து என்ற முடிவை நான் எடுக்கவில்லை, அவர் தான் எடுத்தார்." என தனது வாழ்க்கையின் புண்பட்ட பக்கங்களை மனவலியுடன் அவர் பகிர்ந்ததை பார்த்த அனைவரும் ஒருகணம் கண்கலங்கினர். பிறகு தனது சினிமா வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது தான் தனது வாழ்க்கையில் மீண்டும் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார் விஷ்ணு.

இதையும் படிங்க: 'ராட்சசன்' படம் சும்மா டிரைலர் தான்... மெயின் பிக்சரே 'இரண்டாம் வானம்' படம் தான்....! படக்குழு அதிரடி அப்டேட்...!

அதன்படி, இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான 'ஜூவாலா கட்டாவை' கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அமீர்கான், அந்த குழந்தைக்கு 'மீரா' என்ற பெயரை தனது மடியில் அமரவைத்து சூட்டியுள்ளார். இதைப் பற்றியும் விஷ்ணு விஷால் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதனை குறித்து பேசுகையில்,  " 'மிரா' என்பது அளவு கடந்த அன்பும், அமைதியையும் என்பதைக் குறிக்கிறது. இந்தப் பெயரை அமீர்கான் சொன்னதும், எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அதைஏ பெயராக்கிக் கொண்டோம்" என தெரிவித்தார்.

நடிகர் விஷ்ணு விஷால் ஒரு திறமையான நடிகராக மட்டுமல்லாமல், ஒரு உண்மையான மனிதனாகவும், குடும்ப பாசத்துக்கும், வாழ்க்கை நெறிகளுக்கும் மதிப்பளிப்பவராகவும் திகழ்கிறார். அவரது திரையுலக பயணத்தில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கைப் பயணத்திலும் வெற்றி கண்டு வருகிறார் என அவரது ரசிகர்கள் பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஐஸ் வைத்து உள்ளே நுழைய முயற்சி..! பிரபல கவர்ச்சி நடிகை நபா நடேஷ் கலக்கல் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share