தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஐஸ் வைத்து உள்ளே நுழைய முயற்சி..! பிரபல கவர்ச்சி நடிகை நபா நடேஷ் கலக்கல் பேச்சு..!
தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆசை என தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை நபா நடேஷ் உருக்கமாக பேசியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் தனது அழகும், திறமையும் கொண்டு கவனம் ஈர்த்த நடிகை என்றால் அவர் தான் நபா நடேஷ், தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க அதிக விருப்பம் இருப்பதாக இவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் அவரது வருகையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். 2019-ம் ஆண்டு வெளியான தெலுங்கு சினிமாவில் ‘iSmart Shankar’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடையாளம் பெற்ற நபா நடேஷ், அதன்பின் சஹேபா, மேஸ்ட்ரோ, டார்லிங் உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையே தனக்கான இடத்தை பிடித்து பலரது கவனத்தையும் பெற்றார்.
நடிப்பு மட்டுமல்லாது, மாடலிங் துறையிலும் தனது அழகிய தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து வலம் வரும் நபா நடேஷ், தற்பொழுது தமிழ் திரையுலகின் வாயிலாக புதிய பயணத்திற்குத் தயாராகும் நிலையில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. எப்படியெனில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபா நடேஷ், தமிழ் சினிமா குறித்து தனது ஆழமான கருத்தை முன்வைத்தார். அதன்படி, " தெலுங்கு சினிமாவை நான் எவ்வாறு மதிக்கிறேனோ, அதேபோல் தமிழ் சினிமாவையும் அதிகமாக மதிக்கிறேன். தமிழிலும் அதிகமான படங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் விருப்பம், எது எப்பொழுது நடைபெறும் என்பதை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்" என கூறியுள்ளார். தனது அழகாலும் நடிப்பு திறமையாலும் தெலுங்கு சினிமாவில் இடம் பிடித்த நபா நடேஷ், தனது திரைப்படப் பயணத்தை கன்னட சினிமாவிலும் விரிவுபடுத்தியுள்ளார்.
இவரது பலமே சிறந்த நடிப்பாற்றலுடன் கூடிய கவர்ச்சி தோற்றம் தான். ஆதலால் திரையுலகில் ஒரு தனிப்பட்ட ரசிகர் பெற்றுக்கொண்ட இவர், தற்பொழுது தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக வேண்டும் என்ற திட்டத்துடன் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதிலும், தற்போது தமிழ் சினிமாவில் தெலுங்கு மற்றும் மலையாள நடிகைகள் அதிகமாக உருவெடுத்து வரும் நிலையில், நடிகை நபா நடேஷின் இந்த விருப்பம் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கண்களில் பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் கதாநாயகியாக வலம் வரும் இவர் எதற்காக தமிழ் சினிமாவில் வர நினைக்கிறார் என பார்த்தால், அதிகப்படியான நடிகைகள் தமிழில் நடித்து தான் உலக அளவில் ஃபேமஸ் ஆகியுள்ளனர்.
இதையும் படிங்க: திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்த 'பாகுபலி – The Epic'..! இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி..!
அதன்படி, நபா நடேஷும் தமிழில் நடித்தால், அவருடைய சிரிப்பும், பார்வையும், இளமையும் தமிழ்ப் பார்வையாளர்களிடையே விரைவில் தாக்கம் செலுத்தும் என்பது உறுதி. அதுமட்டுமல்லாமல் தமிழில் தற்போது உருவாகிவரும் நவீன காதல் திரைப்படங்கள், காதலின் பின்னணியில் அமைந்த திரில்லர்கள் மற்றும் காமெடி சினிமாக்களுக்கு அவரது வாய்ஸ் மற்றும் ஸ்க்ரீன் பிரெஸன்ஸ் ஏற்றதாக இருக்கலாம் எனவும் சினிமா வட்டார தரப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக, மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிப்பதில் நடிகை நபா நடேஷ் கைதேர்ந்தவர் என்பதை அவரது படங்களை பார்க்கும் பொழுதே தெரிகிறது. மேலும் நடிகை நபா நடேஷ், திரைப்படங்களில் மட்டுமல்லாது, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டிருப்பவர். அவரது அழகிய புகைப்படங்கள், வெளியுலக பயண பதிவுகள் போன்றவை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால், தமிழில் அவர் அறிமுகமாகும் தருணம், மீம்ஸ், ட்ரெண்டிங், பாப்யுலாரிட்டி என பலவகையான வரவேற்பைப் பெறக்கூடியதாக இருக்கலாம்.
அதுவும் சமீப காலமாக பல தெலுங்கு நடிகைகள் தமிழில் சிறந்த முன்னணி கதாநாயகிகளாக வளர்ந்துள்ள நிலையில், நபா நடேஷ் தமிழ் திரைக்கு வருவதால் மற்றொரு அழகிய கவர்ச்சி நடிகை தமிழ் ரசிகர்களுக்கு கிடைப்பார் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
இதையும் படிங்க: விஜய் மாதிரி வருவார் சூர்யா சேதுபதி.. ட்ரோல் கிங்குக்கு வனிதா வக்காலத்து..!